முதல்வர் எடப்பாடி உட்பட எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை!
சென்னை (11 செப் 2020): தமிழகத்தில் சட்டசபை கூட்டம் கூட உள்ளதையொட்டி எம்.எல்.ஏக்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. எம்.எல்.ஏக்களின் வீடுகளுக்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்களுக்கும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. தமிழக சட்டசபை கூட்டம் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி நிறைவடைந்தது. அதற்கு பிறகு இம்மாதம் 14-ந் தேதி சட்டசபையை மீண்டும் கூட்ட முடிவு செய்யப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக…
