
பாஜகவில் சேர்ந்த வேகத்தில் பாஜகவை எதிர்த்த திரை பிரபலம்!
சென்னை (09 பிப் 2020): நடிகர் விஜய்க்கு எதிராக பாஜகவினர் போராடுவதற்கு பாஜகவில் சமீபத்தில் இணைந்துள்ள இயக்குநர் பேரரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதால் நடிகர் விஜய் தேசிய அளவில் பேசுபொருளானார். ஒரு வழியாக வருமான வரித்துறை சோதனை முடிந்து மாஸ்டர் படப்பிடிப்பு மீண்டும் நெய்வேலியில் தொடங்கி இருக்கிறது. ஆனால், பாஜக விடுவது போல் இல்லை. என்எல்சி பகுதிக்கே சென்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ரசிகர்களும் குவிய.. கடைசியில் அந்த…