இரவு விருந்து – போதை – உல்லாசம் :இளம் பெண் உட்பட 60 பேர் அதிரடி கைது!

இடுக்கி (21 டிச 2020): கேரளா மாநிலம் வாகமனில் இரவு விருந்து என்ற பெயரில் போதைப்பொருட்களை பயன்படுத்தியது தொடர்பாக இளம் பெண் உட்பட 60 பேரை கேரளா போலீசார் கைது செய்துள்ளனர். அந்த விடுதியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட ஏராளாமான போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைதாவர்களில் தோடுபுசாவைச் சேர்ந்த அஜ்மல் (30), மலப்புரத்தைச் சேர்ந்த மெஹர் ஷெரின் (26), எடப்பலைச் சேர்ந்த நபில் (36), சல்மான் (38), அஜய்…

மேலும்...

அர்னாபும் தற்கொலை வழக்கும் – பரபரப்பு பின்னணி!

மும்பை (04 நவ 2020): அர்னாப் கோஸ்வாமி கைது செய்ய வழிவகுத்த தற்கொலை வழக்குக்கும் மும்பை காவல்துறையின் கீழ் பதிவாகியுள்ள டிஆர்பி வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. ரிபப்ளிக் டிவி உரிமையாளரும் தலைமை செய்தியாளருமான அர்னாப் கோஸ்வாமி புதன் கிழமை காலை மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதன் பின்னணியில் 2018 ல் தற்கொலை வழக்குதான் காரணம் என கூறப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு அன்வாய் நாயக் மற்றும் அவரது தாயார்…

மேலும்...

அர்னாப் கோஸ்வாமி கைது!

ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2018ஆம் ஆண்டு தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே மும்பை காவல்துறை தனது மாமனார் மற்றும் மாமியார், மகன் மற்றும் மனைவியை உடல் ரீதியாக தாக்கியதாக அர்னாப் கோஸ்வாமி தெரிவித்துள்ளார். அர்னாப் கோஸ்வாமி கைது சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும்...

நடிகை குஷ்பூ கைது!

சிதம்பரம் (27 அக் 2020): விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் சிதம்பரத்தில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்தனர். இந்த நிலையில்,  தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டு சென்ற நடிகை குஷ்புவை காவல்துறையினர் கைது செய்தனர். முட்டுக்காடு அருகே சுந்தரவதனம் எஸ்.பி தலைமையிலான போலீஸ், குஷ்புவை கைது செய்தது.

மேலும்...

கேரளாவில் பரபரப்பு – அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது!

திருவனந்தபுரம் (20 செப் 2020): கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் தேசிய புலனாய்வு முகமை (எஐஏ)நடத்திய தேடுதல் வேட்டையில் ஒன்பது அல் கொய்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக் கிழமை அதிகாலை, நடத்திய தேடுதல் வேட்டையில் மேற்கு வங்கத்தில் ஆறு பேரும், கேரளாவில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் என்/ஐ.ஏ. விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மேலும்...

அரசு அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக பிரபலம் கைது!

புதுடெல்லி (17 ஜூன் 2020): அரசு அதிகாரியை செருப்பால் அடித்த டிக்டாக் பிரபலமும், பாஜக தலைவருமான சோனாலி போகத், கைது செய்யப்பட்டுள்ளர். அரியானாவில் டிக்டாக் மூலம் பிரபலமாகி பாஜ.வில் சேர்ந்தவர் சோனாலி போகத். இவர் கடந்த ஆண்டு நடந்த மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் அரசு அதிகாரியை பொது இடத்தில் செருப்பால் சரமாரியாக அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை பகிர்ந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப்…

மேலும்...

ராஜஸ்தானில் இரு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளிகள் கைது!

புதுடெல்லி (09 ஜூன் 2020): ராஜஸ்தானில் இரு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளிகளை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 29 வயதான விகாஸ் குமார் மற்றும் 22 வயதான சிமன் லால் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைதான இருவரில் விகாஸ் குமார் ராஜஸ்தானில் உள்ள ராணுவ வெடிமருந்து கிடங்கில் முழுநேர பணியாளராகவும், சிமன் லால் பிகானீரில் உள்ள ராணுவ துப்பாக்கி சுடும் மையத்தில் ஒப்பந்த பணியாளராகவும் பணிபுரிவதாக கூறப்பட்டுள்ளது மேலும் பாகிஸ்தானின் முல்தானில் இருந்து இயங்கும்…

மேலும்...

கோவையில் கோவிலில் இறைச்சி வீசிய ஹரி ராம்பிரகாஷ் குறித்து திடுக்கிடும் தகவல்!

கோவை (31 மே 2020): கோவையில் கோவிலில் இறைச்சியை வீசிய ஹரி என்பவருக்கு மனநோய் என்பதாக குற்றவாளி தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர். கோயம்புத்தூரில் உள்ள வேணுகோபால கிருஷ்ணசாமி கோயில் மற்றும் ஸ்ரீ ராகவேந்திர கோவிலில் இறைச்சி வீசிய நபர் கைது செய்யப்பட்டார். இவரை கோயம்புத்தூர் நகர போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் கோவையில் உள்ள கவுந்தம்பாளையத்தைச் சேர்ந்த எஸ்.ஹரி ராம்பிரகாஷ் (48) என போலீசாரால் அடையாளம் காணப்பட்டார். சி.சி.டி.வி காட்சிகளை வைத்து கோயில்களுக்கு அருகே பைக்…

மேலும்...

இந்துத்வா அமைப்பினர் கைது!

எர்ணாகுளம் (27 மே 2020): தேவாலயம் செட்டை உடைத்தெறிந்தது தொடர்பாக இந்துத்வா அமைப்பினர் இருவரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். பிரபல மலையாள இளம் நடிகர் டோவினோ தாமஸ். இவர் ‘மின்னல் முரளி’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். ஸ்னேகா பாபு, அஜு வர்க்கீஸ், ஹரிஸ்ரீ அசோகன், பைஜூ சந்தோஷ் உட்பட முன்னணி நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தை, பிரபல இயக்குநர் பேசில் ஜோசப் இயக்கி வருகிறார். இந்த படத்துக்காக எர்ணாகுளம் அருகே காலடி மகாதேவர்…

மேலும்...

சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவில் அர்ச்சகர் கைது!

சென்னை (23 மே 2020): சென்னையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த கோவில் அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மடிப்பாக்கம் அடுத்த உள்ளகரம் மண்டபம் இணைப்பு சாலையில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வந்தவர் சிவக்குமார்(59). இவர் சென்னை அண்ணா சாலை எல்.ஐ.சி பின்புறம் உள்ள அன்புக்குறிய அம்மன் கோயிலில் அர்ச்சகராக உள்ளார். நேற்று முன்தினம் சிவகுமார் வீட்டின் பகுதியில் வசித்து வந்த 10 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து…

மேலும்...