ரத்தான ரெயில் டிக்கெட்டுகளை 90 நாட்களில் திரும்பப் பெற ஏற்பாடு!

புதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா வைரஸ் காரணமாக மார்ச், 22ல் இருந்து, ஏப்., 14 வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களில், டிக்கெட் முன்பதிவு செய்த பயணியர், கட்டணம் திரும்ப பெறுவதற்கு, ரத்தான நாளில் இருந்து, 90 நாட்கள் வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. ரயில் சேவை உதவி மைய போன் எண், 139 வழியாக, பயணத்தை ரத்து செய்தவர்களும், 90 நாட்கள் வரை, முழு கட்டணம் திரும்பபெறலாம். இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான,…

மேலும்...

பிரதமரின் திடீர் ஊரடங்கு உத்தரவால் நடு இரவில் பரிதவித்த 14 பெண்கள் – துரிதமாக மீட்ட பிணராயி விஜயன்!

திருவனந்தபுரம் (28 மார்ச் 2020): பிரதமர் மோடியின் திடீர் ஊரடங்கு உத்தரவால் நடு இரவில் ஆள் அரவமற்ற பகுதியில் பரிதவித்த பெண்களை கேரள முதல்வர் பிணராயி விஜயன் துரிதமாக செயல்பட்டு மீட்டு அவரவர் வீட்டில் ஒப்படைத்துள்ளார். நாட்டில் மக்களுக்கு எதிரான எந்த பிரச்சனையானாலும் தன் மாநில மக்களுக்காக துணிந்து நின்று தனி மனிதனாக போராடுபவர் பிணராயி விஜயன். குடியுரிமை சட்ட விவகாரத்திலும் அச்சட்டத்தை எதிர்த்து துணிந்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாய் திகழ்ந்தார். அந்த…

மேலும்...

ஊரடங்கு உத்தரவை மீறி சர்வ சாதாரணமாக உலா வரும் நாகை மக்கள்!

நாகை (28 மார்ச் 2020): கொரோனா உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டு இருக்க நாகை மக்களுக்கு மட்டும் அதுகுறித்த அச்சமோ, கவலையோ இருப்பதாக தெரியவில்லை. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை 27,674 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 933 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். 20 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது….

மேலும்...

கொரோனா பீதி – வெளிநாட்டிலிருந்து திரும்பிய 2,557 பேர் எங்கே? – தேடும் அதிகாரிகள்!

புதுக்கோட்டை (28 மார்ச் 2020): தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பெருமளவில், வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்தவர்களாலேயே நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் நோய் பரவல் முதல் கட்டத்தில் உள்ளது என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. புதுக்கோட்டையில் வெளிநாட்டுக்கு சென்று…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 42 ஆக உயர்வு!

சென்னை (28 மார்ச் 2020): தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தில் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 25 வயதான இந்த ஆண், தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருடைய உடல்நிலை சீராக இருக்கிறது என்று தமிழக நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே கும்பகோணத்தை சேர்ந்த 42 வயது நபருக்கும், காட்பாடியை சேர்ந்த 49 வயது நபருக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. இதன் மூலம் தமிழகத்தில் நோய்…

மேலும்...

ஐந்து நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் கருவி – அமெரிக்கா வெளியீடு!

வாஷிங்டன் (28 மார்ச் 2020): கொரோனா வைரஸ் உள்ளதா என்பதை ஐந்து நிமிடத்தில் கண்டறியும் கருவியை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆய்வகம் இந்த சோதனைக் கருவியை கண்டறிந்துள்ளது. இக்கருவி மூலம் 5 நிமிடங்களில் கொரோனா வைரஸ் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து விரைவு சோதனை மூலம் கண்டறியப்படும். அபாட் லேபாரட்டரீஸ் உருவாக்கிய இந்த விரைவு சோதனை கருவியை பயன்படுத்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து துறை ஒப்புதல் அளித்துள்ளது. வைரஸ் இருந்தால் 5 நிமிடங்களிலும்…

மேலும்...

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா பாதிப்பு இல்லை – பாகிஸ்தான் அரசு விளக்கம்!

இஸ்லாமாபாத் (28 மார்ச் 2020): பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. உலகை புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் காட்டிலும் அதுகுறித்த வதந்திகள் மிக வேகமாக பரவி வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒரு வதந்தி பரவியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், “இம்ரான் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல்…

மேலும்...

கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் இருந்தவர் மரணம்!

நாகர்கோவில் (28 மார்ச் 2020): கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்துள்ளார். கொரோனா இந்திய அளவில் நாளுக்கு நாள் அதிக அளவி பரவி வருகிறது. அதேபோல இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்துள்ளார். இறந்த நபருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பது குறித்த மருத்துவ அறிக்கை இன்னும் வரவில்லை என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 பேர்…

மேலும்...

தப்பியோடிய ஐஏஎஸ் அதிகாரி மீது கேரள அரசு அதிரடி நடவடிக்கை!

திருவனந்தபுரம் (28 மார்ச் 2020): கொரோனா சந்தேகத்தின் பேரில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த கேரள ஐஏஎஸ் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில், உதவி கலெக்டராக பணியாற்றி வருபவர் அனுபம் மிஷ்ரா. இவரது சொந்த மாநிலம் உத்தர பிரதேசம். சில மாதங்களுக்கு முன், இவருக்கு திருமணம் நடந்தது. இதற்காக விடுமுறையில் சென்ற அவர், பின்னர் மலேஷியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்று விட்டு, ஒரு வாரத்துக்கு முன்னர் கேரளாவுக்கு வந்தார்….

மேலும்...

வைரமுத்துவின் வரிகளில் எஸ்பி பாலசுப்ரமணியம் பாடியுள்ள கொரோனா பாடல் – வீடியோ!

கொரோனா வைரஸ் உலகை புரட்டிப் போட்டுள்ள நிலையில் கவியரசு வைரமுத்துவின் வரிகளில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடல். https://www.facebook.com/SPB/videos/742064302992047/

மேலும்...