கொரோனா வைரஸ் எதிரொலி – கத்தார் அரசு அதிரடி உத்தரவு!

தோஹா (01 ஏப் 2020): கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கத்தாரில் வேலைக்குச் செல்லாமல் வீடுகளில் இருப்பவர்கள், தனிமைப் படுத்தப்பட்டவர்கள் மற்றும் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களுக்கு அவர்களின் ஊதியம் தடையில்லாமல் வழங்கப்படும் என்று கத்தார் அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கத்தார் தொழில்துறை உயர் அதிகாரி முஹம்மது ஹசன் அல் உபைத் அலி தெரிவிக்கையில், “கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் தங்கியிருப்பவர்கள், தனிமைப் படுத்தப்பட்டவர்கள் மற்றும் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களுக்கு அவர்களின் ஊதியம் மாதத்தின் முதல் வாரத்திலேயே…

மேலும்...

கொரோனா தடுப்பு – கலக்கும் கேரளமும் தமிழகமும்!

சென்னை (31 மார்ச் 2020): கொரோனா வைரஸ் இந்தியாவில் முதல் முதலாக அடி எடுத்து வைத்த மாநிலம் கேரளா. தற்போது அங்கு 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். கொரோனா இந்தியாவில் பரவ ஆரம்பித்தவுடனேயே தற்காப்பு நடவடிக்கைகளில் களம் இறங்கிவிட்டது தமிழகம். கேரளா ஏற்கனவே எபோலா வைரஸால் பாதிக்கப்பட்ட அனுபவம் இருப்பதால் கேரளா மேற்கொண்ட தடுப்பு மற்றும் மருத்துவ நிவாரண முறைகளைக் கண்டு வியந்தவர்கள் அதே போன்று தங்கள் மாநிலத்திலும் நடை முறைப்படுத்துகின்றனர்….

மேலும்...

ஈஷா யோகா மையத்தில் கொரோனா உண்டா? – அதிகாரிகள் பரிசோதனை!

கோவை (31 மார்ச் 2020): ஈஷா யோகா மையத்தில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உண்டா? என சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொண்டனா். கடந்த மாதம் கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் பங்கேற்றனர். மேலும் அங்கு தற்போதும் பல வெளிநாட்டவர்கள் உள்ளனர். எனவே அவர்களுக்கு கொரோனா பாதிப்பு எதுவும் உண்டா? என்பது குறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொண்டனா். வட்டார…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்வு!

சென்னை (31 மார்ச் 2020): தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணைக்கை 124 ஆகா உயந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், “சென்னையில் மேலும் 50 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 45 பேர் தில்லி…

மேலும்...

கொரோனா சிகிச்சைக்காக தயாராகும் விளையாட்டு மைதானம்!

நியூயார்க் (31 மார்ச் 2020): நியூயார்க்கில் உள்ள பிரபல ஓபன் டென்னிஸ் மைதானம் கொரோனா சிகிச்சை மையமாக தற்காலிகமாக மாற்றப்படவுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், பிரபலமான யூ எஸ் ஓபன் டென்னிஸ் அரங்கை தற்காலிக மருத்துவமனையாக்க நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. நியூயார்க்கில் உள்ள ஆர்த்துர் அஷே மைதானத்தில் தான் யூ எஸ் ஓபன் எனப்படும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 17,000 ரசிகர்கள் அமர்ந்து…

மேலும்...

தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் ரூ 1 கோடி நிதி!

சென்னை (30 மார்ச் 2020): கொரோனா தடுப்புப் பணிக்காக தமிழக அரசுக்கு தொகுதி நிதியிலிருந்து ரூ 1 கோடி வழங்குவதாக அ.ம.மு.க பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு மேற்கொண்டு வரும், பெருந்தொற்று நோயான கொரோனா தடுப்புப் பணிகளுக்‍காக, தமது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து, ஒரு கோடி ரூபாய் அளித்துள்ளதாகத் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையாளருக்‍கு திரு.டிடிவி தினகரன் கடிதம் அனுப்பியுள்ளார். இதனிடையே, திரு.டிடிவி தினகரன் தலைவராகப்…

மேலும்...

அதிராம்பட்டினத்தில் யாருக்கும் கொரோனா இல்லை – வதந்தி பரப்புபவர்களுக்கு விஏஓ எச்சரிக்கை!

தஞ்சாவூர் (30 மார்ச் 2020): தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கொரோனா பாதிப்பு உள்ளதாக பரவும் செய்தி உண்மையில்லை என வி.ஏ.ஓ தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் பரவி வருகிறது. எனினும் அரசு உரிய நடவடிக்கை எடுத்து கொரோனா பரவாமல் தடுத்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கொரோனா பரவுவதாக சமூக வலைதளங்களில் சில விஷமிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இதனால் அதிராம்பட்டினத்திற்கு வருகை புரிய அருகில் உள்ள கிராம மக்கள் அச்சப்படுகின்றனர்….

மேலும்...

கொரோனாவால் இறந்தவர் ஒருவர் மது இல்லாமல் இறந்தவர் ஐந்து பேர்!

திருவனந்தபுரம் (30 மார்ச் 2020): கேரளாவில் ஊரடங்கின் காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், மது கிடைக்காமல் ஐந்து பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கேரளாவில் அதிகமாக கொரோனா பரவி வருகிறது. கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பகுதியாக் கேரளாவில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளது. கேரளாவின் திருச்சூர்…

மேலும்...

கொரோனாவால் தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேர் பாதிப்பு!

சென்னை (30 மார்ச் 2020): தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று வரை தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 50 ஆக இருந்த நிலையில், ஒரே நாளில் இது 67 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பரவல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னையில் இன்று உயர் அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுடன்…

மேலும்...

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் முடங்கும் நிலை!

சென்னை (30 மார்ச் 2020): தமிழகத்திற்கு வெளி மாநிலங்களிலிருந்து வரவேண்டிய பொருட்கள் தடைபட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள், காய்கறி, மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. பெரிய வணிக வளாகங்கள், பெரிய கடைகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை தற்போது 20 முதல்…

மேலும்...