
சவூதிக்கு வரமுடியாமல் தவிப்பவர்களின் விசா காலம் மேலும் நீட்டிப்பு!
ரியாத் (25 அக் 2021): சவூதிக்கு பயணத் தடை உள்ள நாடுகளை சேர்ந்தவர்களின் வருகை (விசிட்) விசாவின் செல்லுபடியாகும் காலம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்படும் என்று சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்மூலம் பயணத் தடை உள்ள இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, துருக்கி, பிரேசில், எத்தியோப்பியா, வியட்நாம், ஆப்கானிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் பயனடைவார்கள். . கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவியதைத் தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின்படி…