வாஷிங்டன் (06 ஏப் 2020): கொரோனா உலகம் முழுவதும் அதிவேகத்தில் பரவி வரும் நிலையில் அமெரிக்காவில் ஒரே நாளில் 1,165 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 1,272,860 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 262,217 பேர் குணமடைந்தனர். மேலும் 45,619 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்தை கடந்ததுள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 69,424 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
இத்தாலியில் . இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 128,948 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 15,887 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 131,646-ஆக அதிகரித்துள்ளது. அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 12,641 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 336,673 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,616 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,165 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவை எதிர்த்து உலக நாடுகள் அனைத்துமே போராடி வருகின்றன.