திரும்ப வந்துட்டேன்னு சொல்லு – கெத்து காட்டும் வடகொரிய அதிபர்!

Share this News:

வடகொரியா (03 மே 2020): வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் பொதுவெளியில் தோன்றியதாக புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக கருதப்படுபவர் வடகொரிய அதிபர் கிம் ஜான் உங். 36 வயதாகும் அவருக்கு கடந்த மாதம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் உடல் நலம் மிகவும் மோசமானதாகவும், அபாய கட்டத்தில் அவர் இருக்கிறார் என்றும், என்றும் தகவல்கள் பரவின.

இதையடுத்து, இப்போது மூன்று வாரங்களுக்கு வடகொரியாவில் புதிதாக திறக்கப்பட்ட உரத்தயாரிப்பு ஆலையின் திறப்பு விழாவில் கிம் ஜாங் கலந்துகொண்டதாக ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே வடகொரிய அதிபர் மீண்டும் அலுவலுக்கு வந்திருப்பதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Share this News: