இந்நேரம்

சவூதி அரேபியாவில் மழை மற்றும் காற்று வீச வாய்ப்பு!

ரியாத் (12 பிப் 2023): சவுதி அரேபியாவின் பல்வேறு மாகாணங்களில் வெள்ளிக்கிழமை வரை வானிலையில் மாற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தபூக், வடக்கு எல்லை, அல்-ஜவ்ஃப், அல்-காசிம், ரியாத், மதீனா மற்றும் கிழக்கு மாகாணத்தில் திங்கள் முதல் புதன்கிழமை வரை லேசான மழை பெய்யும். ரியாத் மாகாணம் மற்றும் மக்கா, மதீனா, அல்-ஜவ்ஃப், தபூக், வடக்கு எல்லை, ஹைல், அல்-காசிம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் செவ்வாய் முதல் வெள்ளி வரை…

மேலும்...

நீதிபதி எஸ்.அப்துல் நசீர் ஒரு சங்பரிவார் ஆதரவாளர் – எம்.பி, ரஹீம் பகீர் குற்றச்சாட்டு!

புதுடெல்லி (12 பிப் 2023): ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.அப்துல் நசீர் ஆளுநராக நியமிக்கப்பட்டதை கேரள நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.ரஹீம் கடுமையாக விமர்சித்துள்ளார். அயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பை வழங்கிய பெஞ்சில் உறுப்பினராக இருந்தவரும், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவருமான நீதிபதி சையது அப்துல் நசீர் ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி சையது அப்துல் நசீர் ஜனவரி 4ம் தேதி ஓய்வு பெற்றார். இன்றோடு ஆறு வாரங்களே ஆகின்றன. இந்நிலையில் இன்று அவர் ஆந்திர மாநில…

மேலும்...

ஹஜ் 2023 க்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் மார்ச் 10

புதுடெல்லி (12 பிப் 2023): ஹஜ் 2023க்கான ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 10 ஆகும். என்று சிறுபான்மை விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆவணங்களுடன் ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது பிப்ரவரி 10, 2023 முதல் தொடங்கியது. ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை hajcommittee.gov.in/haf23 என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். பிப்ரவரி 6 ஆம் தேதி சிறுபான்மை விவகார அமைச்சகம் புதிய ஹஜ் கொள்கையை அறிவித்தது, அதன் கீழ் விண்ணப்ப படிவங்கள் இலவசமாக கிடைக்கின்றன மற்றும் ஒரு யாத்ரீகரின்…

மேலும்...

அதிராம்பட்டினத்தில் தாலுகா அலுவலகம் வேண்டி கோரிக்கை!

பட்டுக்கோட்டை (11 பிப் 2023): அதிராம்பட்டினத்தில் தாலுகா அலுவலகம் அமைக்க வேண்டி,அதிராம்பட்டினம் நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தலைமையில் பட்டுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. நகராட்சியாக அறிவிக்கப்பட்ட அதிராம்பட்டினம் தாலுக்காவாவும் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஊர் மக்களிடம் இருந்து வருகிறது. அதிராம்பட்டினம் நகராட்சி சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் கவனத்திற்கு சென்றிருக்கிறது. இந்த கோரிக்கையை வலுப்பெறச் செய்யவும், வலியுறுத்தவும் பிப்ரவரி 10 அன்று சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் அனைத்து முஹல்லா…

மேலும்...

நாடாளுமன்றத்தை அதிர வைத்த மஹுவா மொய்த்ராவின் உரை – பிரபல பாலிவுட் நடிகை பாராட்டு!

புதுடெல்லி (11 பிப் 2023): அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மஹுவா மொய்த்ரா ஆற்றிய உரையை பிரபல பாலிவுட் நடிகை மீரா சோப்ரா பாராட்டியுள்ளார். அதானி-ஹிண்டன்பர்க் பிரச்சினையில் மஹுவா மொய்த்ராவின் பேச்சு தேசிய கவனத்தை ஈர்த்தது. மஹுவாவின் பேச்சு, “நான் இன்று இந்தியாவில் மிகவும் பிரபலமான நபரைப் பற்றி பேசுகிறேன். துரதிஷ்டவசமாக அது மாண்புமிகு பிரதமர் அல்ல. A இல் ஆரம்பித்து I இல் முடிபவர் ஒருவர். அது அத்வானி அல்ல. அவரது…

மேலும்...

நான் உங்கள் குடும்ப உறுப்பினர் – போரா முஸ்லிம்களிடம் உரையாடிய பிரதமர் மோடி!

மும்பை (10 பிப் 2023): ஷியா முஸ்லிம்களின் தாவூதி போரா பிரிவினரின் புதிய அகாடமியை பிரதமர் திறந்து வைத்து அவர்களை பாராட்டினார். அப்போது உரையாற்றிய மோடி, நான் இங்கு பிரதமராக வரவில்லை, உங்கள் குடும்ப உறுப்பினராக வந்தேன் என்று கூறினார். மும்பை மரோலில் அல் ஜாமியத்துஸ் சைஃபி (சைஃபி அகாடமி)யை மோடி திறந்து வைத்தார். அப்போது பேசிய மோடி “நீங்கள் என்னை மரியாதைக்குரிய பிரதமர் என்று அழைக்கிறீர்கள். நான் உங்கள் குடும்பத்தில் ஒரு அங்கம். நான் இங்கு…

மேலும்...

பசுவை கட்டிபிடித்தல் – விலங்குகள் நல வாரியம் திடீர் பல்டி!

புதுடெல்லி (10 பிப் 2023): காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதியை பசு அரவணைப்பு தினமாக கொண்டாடும் அறிவிப்பை இந்திய விலங்குகள் நல வாரியம் திரும்ப பெற்றுள்ளது. இந்திய விலங்குகள் நல வாரியம், கடந்த 6-ம் தேதி வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் பிப்ரவரி 14 அன்று பசுக்களை கட்டிபிடித்து கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது. ஒவ்வொரு பசு நேசரும் இதைச் செய்ய வேண்டும் என வாரியம் தெரிவித்தது. பசு இந்திய கலாச்சாரம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்றும்…

மேலும்...

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்!

ஜகார்த்தா (10 பிப் 2023): இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியமான பப்புவாவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜெயபுரா நகருக்கு தென்மேற்கே கடலுக்கடியில் 22 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் காரணமாக, கடற்கரையை ஒட்டி இருந்த ஒரு ஓட்டல் இடிந்து கடலில் விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர். மேலும் சில கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும்...

துருக்கி பூகம்பத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு 21 ஆயிரத்தை தாண்டியது!

இஸ்தான்பூல் (10 பிப் 2023): துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மற்றொரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம்…

மேலும்...

அதானி மெகா ஊழல் பிரச்சனை – வலுக்கும் எதிர்கட்சிகளின் போராட்டம்!

புதுடெல்லி (09 பிப் 2023): அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளன. நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்கும் வரை போராட்டத்தை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் கொள்கை அறிவிப்பு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜ்யசபாவில் பதில் அளிக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு ஒத்துழைத்த எதிர்க்கட்சிகள் இன்று முதல் மக்களவையில் அதானி விவகாரத்தில்…

மேலும்...