காங்கிரஸ் எதிர் கட்சியாகத்தான் இருக்கும் – காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் பகீர் கருத்து!

புதுடெல்லி (30 ஆக 2020): காங்கிரசுக்‍கு புதிய தலைவரை தேர்வு செய்யாவிட்டால், அடுத்த 50 ஆண்டுகளுக்‍கு எதிர்க்‍கட்சியாகத்தான் இருக்‍க வேண்டும் என அக்‍கட்சியின் மூத்த தலைவர் திரு. குலாம்நபி ஆசாத் கூறியுளளார். காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட்டால், தாம் பெரும் மகிழ்ச்சியடைவேன் என்றும், புதிய தலைவரை தேர்வு செய்யாவிட்டால், அடுத்த 50 ஆண்டுகளுக்‍கு எதிர்க்‍கட்சியாகத்தான் இருக்‍க வேண்டும் என்றும் திரு. குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். குலாம் நபி ஆசாத்தின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சியினரிடையே…

மேலும்...

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 1023 பேர் பலி!

புதுடெல்லி (28 ஆக 2020): இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1023 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனாவால் இந்தியா அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 76826 கொரோனாவால் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1023 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும்...

மத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (27 ஆக 2020): மத்திய சமூக நீதித்துறை மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் கிரிஷன் பால் குஜார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்றால் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் என மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், மத்திய சமூக நீதித்துறை மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் கிரிஷன் பால் குஜார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து…

மேலும்...

வரும் 1 ஆம் தேதி முதல் மெட்ரோ ரெயில்கள் இயங்க வாய்ப்பு!

புதுடெல்லி (25 ஆக 2020): வரும் 1 ஆம் தேதி முதல் நாடெங்கும் மெட்ரோ ரெயில்கள் இயங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, நாடு முழுவதும், கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரத்தை கருதி, கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கின் மூன்றாம் கட்ட தளர்வுகள், வரும் 31-ம் தேதி வரை அமலில் உள்ளன. இந்நிலையில், அன்லாக் 4…

மேலும்...
Sonia Rahul

தலைவரைத் தேர்ந்தெடுக்காமலேயே முடிவுற்றது காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம்!

(புது தில்லி ஆக. 24 2020:)கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த படுதோல்வியைத் தொடர்ந்து, தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. பின்னர் அக்கட்சியின் இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்றார், சோனியா காந்தி அவர் பொறுப்பேற்றும் ஓராண்டு கடந்துவிட்டது. இதனால் தற்போது, கட்சிக்குத் யார் தலைவர் எனும் விவாதம் வலுப்பெற ஆரம்பித்தது. இற்கிடையே, கட்சித் தலைமையின் சீர்திருத்தங்கள் நாடி சில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியதாக…

மேலும்...

என் மனசாட்சிக்கு துரோகம் செய்ய முடியாது – பிரசாந்த் பூஷண் திட்டவட்டம்!

புதுடெல்லி (24 ஆக 2020): மன்னிப்பு கேட்க முடியாது என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற வழக்குரைஞரும் சமூக செயற்பாட்டாளருமான பிரசாந்த் பூஷணின் ட்விட்டர் பதிவு தொடர்பாக அவர் மீது இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று 14ம் தேதி தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். ஆனால், உடனடியாக அவருக்கு தண்டனை அறிவிக்கப்படவில்லை. அவருக்கு தண்டனை அறிவிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதங்களின்போது அவர்…

மேலும்...

காங்கிரஸ் தலைவர் யார்? – சோனியா காந்தி பின்வாங்கல்!

புதுடெல்லி (24 ஆக 2020): காங்கிரஸ் இடைக்கால தலைவராக தொடர விருப்பமில்லை என்று தற்போதைய தலைவர் சோனியா காநதி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதைத்தொடர்ந்து, சோனியா காந்தி கட்சியின் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பெற்ற காரிய கமிட்டி இன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி…

மேலும்...

தப்லீக் ஜமாத்தினர் மீது வீண்பழி – அரசு மற்றும் ஊடகங்கள் மீது மும்பை நீதிமன்றம் பரபரப்பு குற்றச்சாட்டு!

மும்பை (23 ஆக 2020): கொரோனா பரவலுக்கு வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினரை அரசு பலிகடா ஆக்கியுள்ளது என்று மும்பை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. மும்பை உயர் நீதிமன்றத்தின் (அவுரங்காபாத் பெஞ்ச்) நீதிபதி டி.வி.நலாவடே மற்றும் நீதிபதி எம்.ஜி. செவ்லிகர் ஆகியோர் கொண்ட அமர்வு டெல்லியில் மார்கஸ் தப்லீக்கில் கலந்து கொண்ட பல இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு எதிரான முதல் தகவல் அறிக்கைகளையும் ரத்து செய்தனர். டெல்லியில் மார்கஸில் கலந்து கொண்ட தப்லீக் வெளிநாட்டினரை பலிகடாக்களாக தேர்வு…

மேலும்...

தீ விபத்தில் நான்கு உயிர்களை காப்பற்றிவிட்டு உயிரிழந்த உஸ்மா பாத்திமா!

ஐதராபாத் (23 ஆக 2020): தெலுங்கானாவில் ஸ்ரீ சைலம் நீர் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு உயிர்களை காப்பாற்றி விட்டு உயிரிழந்துள்ளார் உஸ்மா பாத்திமா என்ற பொறியாளர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாதிலிருந்து, 200 கிலோ மீட்டர் தொலைவில்,ஆந்திர எல்லையை ஒட்டி, கிருஷ்ணா ஆற்றின் மீது, ஸ்ரீசைலம் நீர் மின் உற்பத்தி திட்டம் அமைந்துள்ளது.இந்த நீர் மின் நிலையத்தை, தெலுங்கானா மாநில மின் உற்பத்திக் கழகம் நடத்தி வருகிறது. இங்கு கடந்த 19 ஆம் தேதி…

மேலும்...

நீட் தேர்வு ஒத்தி வைப்பா? – மத்திய அமைச்சகம் பதில்!

புதுடெல்லி (21 ஆக 2020): நீட் மற்றும் ஜே.இ.இ.தேர்வுகளை ஒத்தி வைக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று மத்திய அமைச்சக செயலர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் காலவரையரையின்றி மூடப்பட்டுள்ள நிலையில் கடந்த மே மாதமே நடைபெற இருந்த நீட் தேர்வு கரோனா காரணமாக ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செப்டம்பர் 13 அன்று தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் செப்டம்பர்…

மேலும்...