பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரையை முன்னிட்டு மோடி வாழ்த்து!

புதுடெல்லி (23 ஜூன் 2020): பூரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் இன்று தொடங்கவுள்ள நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம், பூரியில் உள்ள ஜெகன்நாதர் கோயில் தேர் திருவிழா ஆண்டுதோறும் ஜூன் 23ம் தேதி தொடங்கி, 9 நாட்கள் நடப்பது வழக்கம். இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில், இந்தாண்டு கொரோனா அச்சம் காரணமாக இந்த தேர் திருவிழாவிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், இந்த உத்தரவை மாற்றும்படி கோரி ஜகன்நாத்…

மேலும்...

பூரி ஜகந்நாதர் ஆலய ரதயாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!

புதுடெல்லி (22 ஜூன் 2020): ஒடிசா மாநிலம் பூரியில் ஜகந்நாதர் கோயில் ரதயாத்திரைக்கு நிபந்தனையுடன் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஒடிஷா மாநிலத்தின் கடற்கரை நகரான பூரியில் புகழ்பெற்ற ஜகந்நாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் புது தேர் செய்யப்பட்டு தேரோட்டம் நடப்பது பொது வழக்கம். இந்த ரத யாத்திரை கோவிலில் இருந்து கிளம்பி 2 KM தூரத்தில் உள்ள மவுசிமா என்னும் இவர்கள் அத்தை கோவில் வரை செல்லும். அங்கு 9 நாள் தங்கி இருந்து…

மேலும்...

மோடியை புகழும் சீனா – சந்தேகம் கிளப்பும் ராகுல் காந்தி!

புதுடெல்லி (22 ஜூன் 2020): இந்திய வீரர்களை கொலை செய்துவிட்டு, இந்திய இடத்தையும் கைபற்றிக் கொண்டு, இந்திய பிரதமரை சீனா பாராட்டியுள்ளது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய, சீன எல்லையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் தயார் படுத்தப்பட்டுள்ள்ன. இந்நிலையில், இந்திய எல்லையில் யாரும் ஊடுருவவில்லை என பிரதமர் கூறியதற்கு சீன பத்திரிகை பாராட்டு தெரிவித்து இருந்தது. அதை மேற்கோள் காட்டியுள்ள…

மேலும்...

எல்லையில் இந்தியா சினா இரு நாட்டு படைகள் குவிப்பால் எல்லையில் பதற்றம்!

லடாக் (22 ஜூன் 2020): லடாக் கிழக்கு எல்லையில் இந்தியா சீனா படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு போர் பதற்றம் நிலவுகிறது. லடாக் கிழக்கு எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கை கைப்பற்ற சீனா முயற்சித்தது. இதை இந்திய வீரர்கள் முறியடித்தனர். இம்மோதலில் மொத்தம் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 43 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் எல்லையில் நீடித்து வரும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர இருநாட்டு…

மேலும்...

நரேந்திர மோடி அல்ல சரண்டர் மோடி – ராகுல் காந்தி தாக்கு!

புதுடெல்லி (21 ஜூன் 2020): “பிரதமர் நரேந்திர மோடி அல்ல சரண்டர் மோடி” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமான அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் ராகுல்…

மேலும்...

படுத்தபடி வாதிட்ட வழக்கறிஞர் – கண்டித்த உச்ச நீதிமன்ற நீதிபதி!

புதுடெல்லி (21 ஜூன் 2020): உச்ச நீதிமன்ற விசாரணை ஒன்றில் ஆன்லைன் விசாரணையில் வழக்கறிஞர் ஒருவர் கட்டிலில் படுத்தபடி ஆஜரானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நீதிமன்ற விசாரணைகள் காணொலி காட்சி மூலம் நடந்து வருகிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் நடத்திய காணொலி காட்சி அமர்வு ஒன்றில் வழக்கு விசாரணைக்கு ஆஜரான வழக்கறிஞர் ஒருவர் ‘டி-சர்ட்’ அணிந்தவாறு கட்டிலில் சாய்ந்து படுத்து கொண்டு வாதாடினார். இதனால் ஆத்திரம் அடைந்த நீதிபதி எஸ்.ரவீந்திர பட், “நாம்…

மேலும்...

நாங்கள் பாஜக பக்கம் இருக்கிறோம்: ஸ்டாலின் – கொந்தளிப்பில் காங்கிரஸ்!

புதுடெல்லி (21 ஜூன் 2020): இந்திய சீனா எல்லை விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்து வரும் காங்கிரஸுக்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவளிக்கவில்லை என்பதால் காங்கிரஸ் கட்சி கடும் கொந்தளிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.. லடாக் கிழக்கு எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கை கைப்பற்ற சீனா முயற்சித்தது. இதை இந்திய வீரர்கள் முறியடித்தனர். இம்மோதலில் மொத்தம் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 43 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் இந்தியர்களிடையே அதிர்ச்சியை…

மேலும்...

கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெற யோகா செய்யுங்கள் – பிரதமர் மோடி வேண்டுகோள்!

புதுடெல்லி (21 ஜூன் 2020): சுவாச மண்டலத்தை தாக்‍கும் கொரோனா வைரசிலிருந்த விடுபட யோகா செய்யுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்‍கிய நாடுகள் சபை அறிவித்தது. கடந்த 2015-ம் ஆண்டு முதல், யோகா தினம் கடைபிடிக்‍கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும், சர்வதேச யோகா தினத்தன்று பிரதமர், சிறப்பு நேரலை யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக, ஊரடங்கு…

மேலும்...

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி அப்படி பேசவில்லை- பிரதமர் அலுவலகம் விளக்கம்!

புதுடெல்லி (20 ஜூன் 2020): நேற்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் பேசியது தவறாக திசை திருப்பப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. லடாக் எல்லையில் கடந்த திங்கட்கிழமை இந்திய- சீன ராணுவத்துக்கு இடையே நடந்த கடும் மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பின. தொடர்ந்து, லடாக் நிலவரம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கும் வகையில் பிரதமர் மோடி…

மேலும்...

இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை கொச்சைப் படுத்தாதீர் – பிரதமருக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்!

புதுடெல்லி (20 ஜூன் 2020): சீன ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ள நிலையில், “20 இந்திய வீரர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள்?” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா-சீனா இடையே கிழக்‍கு லடாக்‍கின் கல்வான் பகுதியில் நடைபெற்ற மோதல் தொடர்பாக, மத்திய பா.ஜ.க. அரசு மீது திரு. ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தினர் மீது சீனா திட்டமிட்டே தாக்‍குதல்…

மேலும்...