உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழு தலைவரகிறார் அமைச்சர் ஹர்ஷ் வர்தன்!

புதுடெல்லி (20 மே 2020): உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக்‍குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. ஹர்ஷ் வர்தன், நாளை மறுதினம் பதவியேற்கிறார். உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக்‍ குழு தலைவராக தற்போது, ஜப்பானை சேர்ந்த மருத்துவர் ஹிரோகி நகாதனி இருந்து வருகிறார். இந்நிலையில், புதிய தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. ஹர்ஷ் வர்தனை நியமிக்‍க, 130 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. நாளை மறுதினம் நடைபெறவுள்ள உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக்‍குழு…

மேலும்...

தப்லீக் ஜமாஅத்தினரின் கைது இந்தியாவின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் – எஸ்டிபிஐ!

புதுடெல்லி (20 மே 2020): வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினரின் கைது நடவடிக்கை உலகளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியத் துணைத்தலைவர் வழக்கறிஞர் ஷர்புத்தீன் அஹ்மத் கூறியுள்ளதாவது: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திடீரென்று அறிவிக்கப்பட்ட தேசம் தழுவிய ஊரடங்கால், அயல்நாட்டு தப்லீக் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தம் தாய்நாட்டிற்கு திரும்பச் செல்லமுடியாமல் ஆங்காங்கே சிக்கித் தவிக்கிறார்கள் என்பது அறிந்ததே. மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் சுரேஷ் சர்மா…

மேலும்...

ஜூன் 1 ஆம் தேதி முதல் ரெயில்கள் இயங்கும் – ரெயில்வே அமைச்சர் தகவல்!

புதுடெல்லி (19 மே 2020): வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் ரெயில்கள் இயங்கும் என்று மத்திய ரெயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க நான்காம் முறையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வரும் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இந்நிலையில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், வருகிற ஜூன் 1-ம் தேதி முதல் குளிரூட்டப்பட்ட ஏசி பெட்டி இல்லாத 200 ரயில்கள்…

மேலும்...

ஜீ நியூஸ் சேனலுக்கு சீல் – 28 பேருக்கு கொரோனா பாதிப்பு!

நொய்டா (18 மே 2020): ஜீ மீடியா சேனல் பணியாளர்கள் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த சேனல் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உலக அலவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பாகுபாடு இல்லாமல் அனைவரையும் கொரோனா தாக்கி வரும் நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனமான ஜீ மீடியாவையும் அது விட்டு வைக்கவில்லை. இதுகுறித்து அதன் தலைமை நிர்வாக இயக்குநர் சுதிர் சவுத்ரி தெரிவிக்கையில், ” எங்கள் ஊழியர்களில் ஒருவர்…

மேலும்...

பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடிக்கான அறிவிப்பு எங்கே? – ப.சிதம்பரம் அதிர்ச்சி கருத்து!

புதுடெல்லி (18 மே 2020): கொரோனா வைரஸுக்கு பின்னான காலத்தில் இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த, 20 லட்சம் கோடியில் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதனை தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறப்பு பொருளாதார திட்டங்களை வெளியிட்டார். தற்போது, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அதிர்ச்சி தரும் கருத்தொன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ப.சிதம்பர்ம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ” பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடிகளுக்கான…

மேலும்...

சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு பல்வேறு சலுகைகள் – பினராயி விஜயன் அதிரடி!

திருவனந்தபுரம் (18 மே 2020): கொரோனா நெருக்‍கடி இடையே தொடர்ந்து பணியாற்றி வரும் காவல்துறையினருக்‍கு ஓய்வளிக்‍கும் வகையில், ஒரு வாரம் பணி செய்து, ஒரு வாரம் ஓய்வெடுத்துக்‍கொள்ளும் திட்டத்தை கேரள அரசு அமல்படுத்தியுள்ளது. கேரளாவில், கொரோனா அச்சுறுத்தலுக்‍கு இடையே பணி செய்யும் போலீசாருக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆராய, 2 குழுக்‍கள் அமைக்‍கப்பட்டன. இந்த குழுக்‍குள், மாநில அரசிடம் சில பரிந்துரைகளை அளித்துள்ளன. அதன்படி, போலீசார், ஒரு வாரம் பணி செய்து, ஒரு வாரம்…

மேலும்...

ஏழை தொழிலாளர்கள் யாக்கூப், அம்ரீத்: இணைபிரியாத நண்பர்களின் சோக சம்பவம்!

போபால் (18 மே 2020): புலம்பெயர்ந்த தொழிலாளர்களும், இணைபிரியாத நண்பர்களுமான முஸ்லிம் யாக்கூப் மற்றும் இந்துவான அம்ரீத் இருவருக்கும் இடையேயான இணைபிரியாத நட்பை சுட்டிக்காட்டும் சம்பவம் இது. யாக்கூப் மற்றும் அம்ரீத் இருவரும் குஜராத்தில் பணிபுரிந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். ஊரடங்கு காரணமக வேலை இழந்து, இருவரும் சொந்த மாநிலமான உத்திர பிரதேசத்தை நோக்கி ஒரு ட்ரக்கில் ரூ 4000 கொடுத்து அதில் இருக்க இடமில்லாமல் நின்று கொண்டே பயணித்தனர். அதில் 50 முதல் 60 பேர்…

மேலும்...

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கும் தப்லீக் ஜமாஅத்தினர் -வீடியோ

கந்த்வா (17 மே 2020): மத்திய பிரதேச தப்லீக் ஜமாஅத்துடன் தொடர்புடைய காத்ரி முஸ்லிம்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவுகள் வழங்கி வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு அறிவித்த திடீர் ஊரடங்கு பல்வேறு மாநிலங்களீல் வசிக்கும் தொழிலாளர்களை பெரிதும் பாதித்துள்ளது. இதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது ஊருக்கு நடந்தே செல்லும் அவலம் நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பலர் பசி மற்றும் உணவிண்மை, விபத்து உள்ளிட்டவைகளால் உயிரிழக்கவும் செய்கின்றனர். இந்நிலையில்…

மேலும்...

குடியரசுத் தலைவர் மாளிகை மூத்த காவல்துறை அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (17 மே 2020): குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள உதவி போலீஸ் கமிஷனர் (ஏசிபி)க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஜனாதிபதி மாளிகை பணியாளர்கள் உட்பட பலர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். கடந்த மாதம், ராஷ்டிரபதி பவன் வளாகத்தில், அங்குள்ள ஒரு ஊழியரின் உறவினர் கொரோனா வைரஸ் பாதிக்கபப்ட்டிருந்தது. இதனை அடுத்து குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள 115 வீடுகளில் உள்ளவர்கள் தனினைப் படுத்தப்பட்டனர். எனினும் அதனை தொடர்ந்து யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இந்நிலையில்…

மேலும்...

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அதிர்ச்சி கருத்து!

புதுடெல்லி (17 மே 2020): கொரோனாவை பாஜக அரசால் கட்டுப்படுத்த முடியாது, எனவே பொதுமக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நேற்று கொரோனா தொற்று 4675 பேருக்குப் பரவியது. தற்காப்பு நடவடிக்கைகளை ஒவ்வொரு மனிதரும் மேற்கொண்டு தொற்றுலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதே ஒரே வழி. கொரோனா தொற்று பரவுவதை பாஜக அரசால் தடுக்க முடியாது. காரணம், அரசின் நிர்வாக…

மேலும்...