பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கோரிக்கை!

புதுடெல்லி (27 ஏப் 2020): நாட்டில் தினந்தோறும் 1 லட்சம் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று திரு. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்‍கப்படுவோரின் எண்ணிக்‍கை நாளுக்‍கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் தினந்தோறும் 1 லட்சம் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று திரு. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியாவில் தற்போது நாள் ஒன்றுக்‍கு 40 ஆயிரம் பரிசோதனைகளே மேற்கொள்ளப்படுவதாகவும், குறைந்தபட்சம் நாள்…

மேலும்...

இந்தியாவில் வறுமை தாண்டவமாடும் – முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

புதுடெல்லி (27 ஏப் 2020): லாக்டவும் மேலும் தொடர்ந்தால் இந்தியாவில் வறுமை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ் எச்சரித்துள்ளார். சர்வதேச அளவில் கொரோனா தொற்றானது 2 லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளை மட்டும் ஏற்படுத்திவிடவில்லை. உயிரிழப்புகளோடு சேர்த்து பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பரவலை தடுக்க மே 3 ஆம் தேதி வரை லாக்டவுன் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மந்தன் அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட “கொரோனாவுக்கு பிந்தைய உலகத்திற்கான பாடங்கள்” என்கிற…

மேலும்...

பிளாஸ்மா தானம் எதிரொலி – ட்ரெண்டிங் ஆகும் தப்லீக் கதாநாயகர்கள்!

புதுடெல்லி (27 ஏப் 2020): கொரோனா பாதித்தவர்களுக்கு தங்களது பிளாஸ்மாவை தானமாக கொடுக்க முன்வந்த நிலையில் தப்லீக் ஜமாத்தினர் சமூக வலைதளங்களில் ஹீரோக்களாக ட்ரெண்ட் ஆகி வருகின்றனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. ஜனவரி மாதம் இறுதியிலேயே இந்தியாவில் கொரோனா வைரஸ் உள் நுழைந்துவிட்ட போதிலும் மார்ச் மாதமே அது வீரியமானது. இந்நிலையில் கொரோனா பரவ டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் ஆலோசனை கூட்டமே காரணம் என்பதாக…

மேலும்...

டெல்லி தப்லீக் ஜமாத் தலைவருக்கு கொரோனா இல்லை – பரிசோதனை முடிவுகள் வந்தன!

புதுடெல்லி (27 ஏப் 2020): டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸ் தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் கந்தல்விக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. ஜனவரி மாதம் இறுதியிலேயே இந்தியாவில் கொரோனா வைரஸ் உள் நுழைந்துவிட்ட போதிலும் மார்ச் மாதமே அது வீரியமானது. இந்நிலையில் கொரோனா பரவ டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் ஆலோசனை கூட்டமே காரணம் என்பதாக…

மேலும்...

கொரோனா பரவலை தடுக்க காஷ்மீர் மாணவிகள் செய்த மெச்சத்தக்க செயல்!

ஜம்மு (26 ஏப் 2020): கொரோனா பரவலை தடுக்கும் விதமாக காஷ்மீர் மாணவிகள் சொந்தமாக தைத்த முக கவசத்தை பலருக்கும் இலவசாமக விநியோகித்தனர். உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. ஒவ்வொரு நாடும், அங்கு வாழும் மக்களும் ஏதாவது ஒரு வகையில் இதனை எதிர்த்து போராடி வருகின்றனர். பல உயிரிழப்புகளை சந்தித்துவிட்ட இந்த கொரோனா காலத்தில் இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதமும் வந்துவிட்டது. இந்தியாவிலும் கொரோனா பல பகுதிகளில் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் ஜம்மு…

மேலும்...

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 49 பேர் பலி!

புதுடெல்லி (26 ஏப் 2020): இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 49 பேர் பலியாகியுள்ள்னார், மேலும் 1990 பேருக்கு, புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 826 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49 பேர் பலியாகியுள்ளனர், ஆயிரத்து 990 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26…

மேலும்...

சொந்த நிலத்தை விற்று ஏழைகளுக்கு மூன்று வேளை உணவு வழங்கும் சகோதரர்கள்!

பெங்களூரு (25 ஏப் 2020): லாக்டவுனால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு தங்களது சொந்த நிலத்தை விற்று மூன்று வேளை உணவு வழங்கி வருகின்றனர் முஜம்மில் மற்றும் தஜம்முல் முஹம்மது சகோதரர்கள். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இருவரும், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர்கள், அனாதையாக கூலி வேலை பார்த்து இன்று வரை ஒன்றாகவே இருக்கின்றனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இருவரும் நிலம் பேசி விற்கும் ஏஜெண்ட்களாக பணிபுரிந்து வருகின்றனர். எனினும் சொந்தமாக அவர்களுக்கு வீடு இல்லை. இதற்காக…

மேலும்...

பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி ஐந்து முக்கிய பரிந்துரைகள்!

புதுடெல்லி (25 ஏப் 2020): நாடெங்கும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு ஐந்து முக்கிய பரிந்துரைகளை வைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக மே 3ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி அறிவித்தார். தொடர்ந்து, வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. ஊரடங்கு திட்டமிடப்படாத ஒன்று என காங்., விமர்சனம்…

மேலும்...

பிரதமர் மோடி ரம்ஜான் நோன்பு வாழ்த்து!

புதுடெல்லி (24 ஏப் 2020): பிரதமர் மோடி ரம்ஜான் நோன்பு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் புனித ரம்ஜான் நோன்பு நாளை முதல் தொடங்குகிறது. ஊரடங்கு கடைபிடிக்கப்படும் சூழலில் இந்த நோன்பு தொடங்குகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி ரம்ஜான் நோன்பு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ரம்ஜான் முபாரக்! அனைவரின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக நான் பிரார்த்திக்கிறேன். இந்த புனித மாதம், ஏராளமான கருணை, நல்லிணக்கம் மற்றும் இரக்கத்தையும் கொண்டு வரட்டும்….

மேலும்...

அமைச்சரை தாக்கியது கொரோனா வைரஸ்!

மும்பை (24 ஏப் 2020): மஹாராஷ்டிரா மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜிதேந்திர அவ்ஹாத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிர அமைச்சர் அமைச்சர் ஜிதேந்திர அவ்ஹாத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதியானது. மேலும், ஊரடங்கு காலத்தில் சட்டம் ஒழுங்கை பேணுவது குறித்து கடந்த வாரம் அமைச்சர் ஜிதேந்திர அவ்ஹாத், காவல்துறை மூத்த உயரதிகாரியுடன் ஆலோசனை நடத்திய நிலையில், அந்த காவல் உயரதிகாரிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட…

மேலும்...