தீண்டாமை நோயில் பற்றி எரியும் மற்றொரு தீண்டாமை – பதற வைக்கும் தகவல்!

குஷிநகர் (12 ஏப் 2020): கொரோனா அறிகுறிகளுடன் தனிமை படுத்தப்பட்டுள்ள இருவர் பட்டியல் இனப் பெண் தயாரித்த உணவை உண்ண மறுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் குஷிநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட கிராமத்தில் கொரோனா அறிகுறியுடன் உள்ள 5 நபர்களை அங்குள்ள ஆரம்ப பள்ளியில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் நடுத்தர வயது மதிக்கத்த இருவர் மட்டும் அங்கு உணவு சமைத்து கொடுக்கும் பெண்ணிடம் உணவு உண்ண மறுத்து இருவரும் அவர்களது…

மேலும்...

கையில் லத்தியுடன் சோதனைச் சாவடியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் அடாவடி!

ஐதராபாத் (12 ஏப் 2020): தெலுங்கானாவில் ஒரு சோதனைச் சாவடியில் கையில் லட்தி ஏந்தி வாகன ஓட்டிகளிடம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அடாவடியில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் உள்ள யாதத்ரி புவனகிரி மாவட்ட சோதனைச் சாவடியில் காவல்துறையினர் இருக்க அவர்கள் முன்னிலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அவ்வழியே செல்லும் வாகனங்களை சோதனை செய்வதுபோல் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சமூக ஊடகங்களில் பலர் காவல்துறையை குறிச்சொல் செய்து குடிமக்களின் ஆவணங்களை சரிபார்க்க RSS-க்கு அனுமதி…

மேலும்...

முஸ்லிம்களை தவறாகச் சித்தரித்த ரிபப்ளிக் டிவி, நியூஸ் 18 – மன்னிப்பு கேட்டது ரிபப்ளிக் டிவி!

புதுடெல்லி (12 ஏப் 2020): கொரோனா வைரஸ் பரவலை விட முஸ்லிம்களுக்கு எதிரான பொய் விமர்சனங்களே அதி வேகமாக பரவி வருகின்றன. அந்த வகையில் அர்ணாப் கோஸ்வாமி தலைமை ஆசிரியராக பணிபுரியும் ரிபப்ளிக் டிவி முதலிடம் வகிக்கிறது. முஸ்லிம்களை தவறாக சித்தரிப்பதில் அர்ணாப் முதலிடம் வகிக்கிறார். பலமுறை உண்மைக்குப் புறம்பான தகவல் என்று நிரூபணம் ஆனாலும் தொடர்ந்து இத்தகைய செயல்களில் அர்னாப் ஈடுபட்டு வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில்தான் ரிபப்ளிக் டிவியின் ஒரு விவாத நிகழ்ச்சியில்…

மேலும்...

கொரோனா வைரஸ் லாக்டவுன்: நூற்றுக் கணக்கானோருடன் பிறந்தநாள் கொண்டாடிய பாஜக தலைவர்!

பெங்களூரு (11 ஏப் 2020): உலகமே கொரோனாவால் திண்டாடிக் கொண்டிருக்க எதைப் பற்றியும கவலைப்படாமல் தனது பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டடியுள்ளார் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. ஜெயராம். தும்கூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கூட்டமாக கூடுவது தவிர்க்கப்பட்டு, சமூக விலகல் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதனால் மத பிரார்த்தனைக் கூட்டங்களைக்கூட அனைத்து…

மேலும்...

வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலன்களை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் – வைகோ!

சென்னை (10 ஏப் 2020): “கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் வளைகுடா நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழ்கின்ற இந்தியத் தொழிலாளர்கள் நலன்களையும் பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு (International Labour Organisation-ILO) உலகின் தற்போதைய பொருளாதாரச் சூழல் பற்றி ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்….

மேலும்...

கொரோனா தொற்று குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுல்சில் அதிர்ச்சி தகவல்!

புதுடெல்லி (10 ஏப் 2020): இந்தியாவில் எந்த வித பயணமும் மேற்கொள்ளாமல், கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பு எதுவும் வைத்துக் கொள்ளாத நிலையில் 40 சதவீதத்தினர் கொரோனா தொற்றிற்கு ஆளாகி இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் 15 மாநிலங்களில் 36 மாவட்டங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் மொத்தமாக பாதிக்கப்பட்ட 104 நபர்களில் 40 பேர் எவ்வித பயண வரலாற்றையும் கொண்டிருக்கவில்லை. இந்த குறிப்பிட்ட…

மேலும்...

வேத பாடசாலையில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு – அதிர்ச்சி தகவல்!

திருமலை (10 ஏப் 2020): திருமலை வேத பாடசாலையில் தங்கி படிக்கும் 5 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு படிக்கும் 470 மாணவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் நாட்டின் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு பொதுத் தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டன். விடுதிகளில் தங்கி படித்த நாட்டின் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுதிகளிலிருந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் இதனை பொருட்படுத்தாமல்  திருமலையில் உள்ள…

மேலும்...

தப்லீக் ஜமாஅத் மீது ஊடகங்களின் அவதூறு செய்தி – ஆனால் அரசு சொல்லும் தகவல் வேறு.

புதுடெல்லி (10 ஏப் 2020): அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்றால் 11 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக ஜீ தொலைக்காட்சி செய்தி வெளியிட்டு இருந்தது. ஆனால் அச்செய்தி உண்மையில்லை என்பதை அரசு சொல்லும் தகவல் உறுதிபடுத்தியுள்ளது. கொரோனா தொற்று உலகமெங்கும் அதிவேகமாக பரவி பல உயிர்களை பலிகொண்டுள்ளது. வளர்ந்த நாடுகளே இதனை எதிர்த்து கடுமையாக போராடி வருகின்றன. ஆனால் இந்தியாவில் இவ்விவகாரத்தை வைத்து மத அரசியல் கொடி கட்டி பறக்கிறது. குறிப்பாக இந்துத்வா ஆதரவு ஊடகங்கள் பல போலி…

மேலும்...

தப்லீக் ஜமாஅத் மீது அவதூறு – உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

புதுடெல்லி (09 ஏப் 2020): தப்லீக் ஜமாஅத் மீது பொய்யான தகவல்களை பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப் பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் அதி வேகமாக பரவி வருகிறது. ஜனவரியின் இறுதியிலேயே இந்தியாவில் கொரோனா நுழைந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், மார்ச் இறுதி வாரங்களிலேயே இந்திய அரசு இவ்விவகாரத்தில் விழித்துக் கொண்டு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது. ஆனால் மார்ச் இரண்டாவது வாரங்களில் கூடிய டெல்லி…

மேலும்...

கொரோனா வைரஸ் தனிமை வார்டில் இருந்த பெண் வன்புணர்ந்து கொலை!

பாட்னா (09 ஏப் 2020): கொரோனா வைரஸ் தனிமை வார்டில் இருந்த பெண் வன்புணர்ந்து கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் கயா மாவட்டத்தில் வசிக்கும் 25 வயது பெண் ஒருவர் பஞ்சாபிலிருந்து திரும்பியிருந்தார். அவர் பஞ்சாபின் லூதியானாவில் இரண்டு மாத கர்ப்பினியாகவும் இருந்தார். ஆனால் அவருக்கு திடீரென குழந்தை கலைந்து விட்டது. உடனே மருத்துவர்களின் பரிந்துரைப்படி பஞ்சாபில் D and C செய்யப்பட்டது. அதன் பின்பு பீகாருக்கு திரும்பியிருந்தார். ஆனால் அவருக்கு இரத்தப் போக்கு…

மேலும்...