கொரோனா நோயாளிக்கு எச் ஐ வி மருந்து செலுத்தி சோதனை – கேரள டாக்டர்கள் முயற்சி!

கொச்சி (19 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு எச் ஐ வி மருந்தை செலுத்தி கேரள மருத்துவர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர். கொரோனா உலகமெங்கும் பரவி வரும் நிலையில் இதற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் சீனா ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் எச் ஐ வி நோயாளிகளுக்கு செலுத்தப்படும் மருந்து (Lopinavir and Ritonavir) ஆகியவற்றை கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தியுள்ளனர். இந்நிலையில் கேரளா மாநிலம் எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐரோப்பாவை சேர்ந்த கொரோனா…

மேலும்...

கொரோனா வைரஸ் குறித்து மத்திய அமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்து – விளாசும் நெட்டிசன்கள்!

புதுடெல்லி (19 மார்ச் 2020): கொரொனா வைரஸ் நிவாரணமாக பாஜக அமைச்சர் அஸ்வினி குமார் சௌபாய் ஆதாரமில்லாத சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார். சீனாவில் மட்டுமே பரவிய கொரோனா உலகமெங்கும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இன்றுவரை 169 பேர் பாதிக்கப் பட்டனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா குறித்த வதந்தியும் பரவி மக்களை அச்சப்பட வைத்துள்ளது. இது இப்படியிருக்க பொறுப்புடன் கருத்து தெரிவிக்க வேண்டிய மத்திய அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில்…

மேலும்...

வெளிநாடுகளில் உள்ள 276 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (19 மார்ச் 2020): ஈரான், இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களில் 276 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் உலக அளவில் பலியானோர் எண்ணிக்கை 9000 த்தை நெருங்கி உள்ளது. இந்தியாவில் இதுவரை 169 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும், வைரஸ் அறிகுறியுடன் உள்ள 5,700 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உலக அளவி இதுவரை 276 இந்தியர்கள்…

மேலும்...

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 169 ஆக உயர்வு!

புதுடெல்லி (18 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் இந்தியாவில் 169 ஆக உயர்ந்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் உலகமெங்கும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவின் பரவல் அதிகரித்து வருகிறது. இன்றைய கணக்கின்படி ஒரே நாளில் 30 பேர் கொரோனா பாதிக்கப் பட்ட நிலையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவாமல் தவிர்க்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பள்ளிகள், கல்லுரிகள், திரையரங்குகள்,…

மேலும்...

கொரோனா வைரஸுக்கு மாட்டு சிறுநீர் விற்பனை செய்தவர் கைது!

கொல்கத்தா (18 மார்ச் 2020): மேற்கு வங்கத்தில் ரூபாய் 500 க்கு மாட்டு சிறுநீர் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். மபூத் அலி என்ற பால் வியாபாரி, மாட்டு முத்திரம் விறபனை செய்வதாக போலீசாருக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மேஜை வைத்து மாட்டு மூத்திரம் விற்பனை செய்வதை போலீசார் அறிந்தனர். உடனே மபூத் அலியை கைது செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது, டெல்லியில் இந்து மகா சபா மாட்டு…

மேலும்...

இந்திய ராணுவ வீரருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

புதுடெல்லி (18 மார்ச் 2020): இந்திய ராணுவத்திலும் கொரோனா வைரஸ் நோய் நுழைந்துவிட்டது. கடந்த பிப்ரவரி 25 முதல் மார்ச் 1 வரை விடுப்பில் இருந்த சிப்பாயின் தந்தை ஈரான் சென்று திரும்பியதாகவும், அவரின் தந்தை வழியே இவருக்கு தொற்று பரவியிருக்கலாம் எனவும் தெரிகிறது. இதனிடையே இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) செவ்வாயன்று இந்தியா தற்போது 2-வது கட்டத்தில் உள்ளது, வைரஸ் தொற்றுநோயின் 3-வது கட்டத்தில் இல்லை என்று வலியுறுத்தியது. நிலைமையைச் சமாளிக்க ICMR சோதனைக்கு…

மேலும்...

கொரோனாவுக்காக மாட்டு சிறுநீர் கொடுத்த பாஜக நிர்வாகி கைது!

கொல்கத்தா (18 மார்ச் 2020): கொரோனா வராது எனக்கூறி, சீருடையில் இருந்த பாதுகாவலருக்கு மாட்டு சிறுநீர் கொடுத்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கு கொல்கத்தா பாஜக நிர்வாகியான நாராயணன் சாட்டர்ஜி என்பவர், மாட்டு மூத்திரம் கொடுக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். அதில் கொரோனா வராது என்று கூறி அனைவருக்கும் மாட்டு சிறுநீர் கொடுத்துள்ளார். மேலும் சீருடையில் இருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கும் மாட்டு மூத்திரம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக…

மேலும்...

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில் 148 ஆக உயர்வு!

புதுடெல்லி (18 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் இந்தியாவில் 148 ஆக உயர்ந்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் உலகமெங்கும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவின் பரவல் அதிகரித்து வருகிறது. இன்றைய கணக்கின்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவாமல் தவிர்க்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பள்ளிகள், கல்லுரிகள், திரையரங்குகள், மால்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் பொதுக் கூட்டங்களுக்கும் தடை…

மேலும்...

டெல்லியில் குவியும் நோயாளிகள் – திணறும் மருத்துவமனைகள்!

புதுடெல்லி (18 மார்ச் 2020): டெல்லியில் காய்ச்சல் இருமல் மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் நோயாளிகள் மருத்துவமனைகளில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் உலகமெங்கும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 139 ஐ தொட்டுள்ளது. மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் கொரோனா அறிகுறிகளுன் பொது மக்கள் மருத்துவமனைகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆனால் வரும் நோயாளிகளில் கேட்கப்படும் கேள்விகள்…

மேலும்...

கணவர் திடீர் மரணம் – மனைவிக்கு தெரியாமல் ஒரே விமானத்தில் பயணித்த கணவரின் உடலும் மனைவியும்!

கண்ணூர் (17 மார்ச் 2020): ஓமனில் கணவர் திடீரென மரணம் அடைந்துவிட அங்கிருந்த மனைவிக்கு கணவர் இறந்ததை கூறாமல் ஒரே விமானத்தில் கணவரின் உடலையும் மனைவியையும் நண்பர்கள் அனுப்பி வைத்துள்ளனர். கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள புத்தியபுரத்தைச் சேர்ந்தவர் முகமது ஜாகீர் (30). இவர் 6 வருடங்களாக ஓமனில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு ஷிபானா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்குப் பின் ஷிபானாவை ஓமனுக்கே அழைத்துச் சென்றுள்ளார். இதற்கிடையே, ஜாகீர்…

மேலும்...