நிர்பயா வழக்கில் குற்றவாளியின் மனு தள்ளுபடி – பிப்ரவரி 1 ஆம் தேதி தூக்கு உறுதி!

புதுடெல்லி (29 ஜன 2020): நிர்பயா வழக்கில் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து குற்றவாளி முகேஷ் சிங் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்தது சரியே எனவும் உத்தரவிட்டனர். டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1-ம் தேதி…

மேலும்...

பேருந்து ஆட்டோ மோதி விபத்து: 26 பேர் பலி!

மும்பை (29 ஜன 2020): மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் அரசு பேருந்தும், ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டம் மாலேகான்-தியோலா சாலையில், மேஷி பாட்டா என்ற இடத்தில் நாசிக் நகரில் உள்ள கல்வான் நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, எதிரே வந்த ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் இரண்டு வாகனங்களும் சாலையோரமாக இருந்த கிணற்றில் விழுந்தன. தகவலறிந்து அங்கு சென்ற…

மேலும்...

கவர்னருக்கு எதிராக சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் கோஷம்!

திருவனந்தபுரம் (29 ஜன 2020): கேரள சட்டசபையில் கவர்னர் ஆரிப் முஹம்மது கானுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திற்கு எதராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றத்திலும் மாநில அரசு வழக்கு தொடர்ந்தது. மாநில அரசு தனக்கு தெரியாமல் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்த கவர்னர், தன்னிடம் தகவல் தெரிவிக்காததற்கு அதிருப்தி தெரிவித்தார். இது தொடர்பாக மாநில அரசிடமும் அறிக்கை கோரியிருந்தார். இந்நிலையில், இன்று(ஜன.,29) துவங்கும் இந்த ஆண்டின்…

மேலும்...

அர்ணாபிடம் கேள்வி கேட்டதற்காக பிரபல காமெடியனுக்கு விமானத்தில் பயணிக்க தடை!

புதுடெல்லி (29 ஜன 2020): பிரபல ஊடகவியலாளரும் பாஜக ஆதரவாளருமான அர்ணாப் கோஸ்வாமியிடம் விமானத்தில் கேள்வி கேட்டதற்காக 6 மாதம் விமானத்தில் பயணிக்க பிரபல காமெடியனுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. பிரபல ஸ்டேண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா டெல்லியிலிருந்து லக்னோவுக்கு இன்டிகோ விமானத்தில் பயணிக்கும்போது அவருடன் அர்ணாபும் பயணித்துள்ளார், இதுகுறித்த வீடியோ ஒன்றை குணால் வெளியிட்டுள்ளார், அப்போது அர்னாப் கோஸ்வாமியிடம் பல கேள்விகளை எழுப்புகிறார். ஆனால் அர்னாப் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் கண்டுகொள்ளாதது போல் இருக்கிறார்….

மேலும்...

பொருளாதாரம் குறித்து தெரிந்தால்தானே அதைப்பற்றி சிந்திக்க முடியும் – மோடி மீது ராகுல் பாய்ச்சல்!

ஜெய்ப்பூர் (29 ஜன 2020): பொருளாதாரம் குறித்த புரிதல் பிரதமருக்கு இல்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் யுவ ஆக்ரோஷ் எனும் பெயரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடிக்கு பொருளாதாரம் குறித்த புரிதல் இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பின்பற்றப்பட்ட பொருளாதார மதிப்பீடுகள் மீது கணக்கிட்டால் இப்போதுள்ள பொருளாதார வளர்ச்சி…

மேலும்...

ஷஹீன் பாக் போராட்டக் களத்தில் பரபரப்பு – துப்பாக்கியுடன் நுழைந்த நபர்: வீடியோ!

புதுடெல்லி (29 ஜன 2020): டெல்லி ஷஹீன் பாக் போரட்டக் களத்தில் துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவர் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்த நினைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக…

மேலும்...

ஜே.என்.யூ மாணவர் ஷார்ஜில் இமாம் கைது!

பாட்னா (28 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ஜே.என்.யு மாணவர் ஷர்ஜில் இமாம் கைது செய்யப்பட்டுள்ளார். வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவிலிருந்து பிரித்துவிடலாம் என்று பேசியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஷர்ஜில் இமாம் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் உபி.யில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக உத்தரபிரதேச போலீசாரும் இவர் மீது வழக்கு…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ போர்க்கொடி!

போபால் (28 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மத்திய பிரதேச பாஜக எம்.எல்.ஏ நாராயன் திருப்பதி போர்க்கொடி உயர்த்தியுள்ளார். நாடு முழுவதும் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக(சிஏஏ), தேசிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மத்திய பிரதேச பாஜக எம்.எல்.ஏ நாராயன் திருப்பதி குடியுரிமை சட்டம் நம் நாட்டு இறையாண்மைக்கு எதிரானது என தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவை மதத்தால் பிரிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். “நான் கிராமத்திலிருந்து வந்தவன். அங்கு ஒரு…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பிரபல நடிகை போர்க்குரல்!

மும்பை (28 ஜன 2020): குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு போன்றவற்றை நான் ஆதரிக்கவில்லை என்று பாலிவுட் நடிகை பூஜாபட் தெரிவித்துள்ளார்.. நாடு முழுவதும் ஆங்காங்கே குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு(என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தெற்கு மும்பையில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிரான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பாலிவுட் நடிகை பூஜாபட் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நாம் அமைதியாக இருப்பது நம்மை காப்பாற்றாது….

மேலும்...

நிர்பயா வழக்கில் திடீர் திருப்பம் – தள்ளிப் போகுமா தூக்குத் தண்டனை?

புதுடெல்லி (28 ஜன 2020): நிர்பயா வழக்கின் திடீர் திருப்பமாக சிறையில் தூக்குத் தண்டனை குற்றவாளி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக புதிய மனு நீதிமன்றத்தில் அளிக்கப் பட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தரப்பில் இருந்து இதுவரை தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள், கருணை மனுக்கள் ஆகிய அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், வரும் பிப்ரவரி…

மேலும்...