தமிழக பாஜக முன்னாள் தலைவர் மரணம்!

சேலம் (02 ஜூன் 2020): தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் (92) உடல் நலக்குறைவால் காலமானார். கே.என் லட்சுமணன். 2 முறை தமிழக பாஜ தலைவராக இருந்தார். 2001 சட்டப்பேரவை தேர்தலில், மயிலாப்பூர் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சேலம் செவ்வாய்பேட்டையில் வசித்து வந்த அவர், உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு காலமானார். கே.என்.லட்சுமணன் மறைவிற்கு பிரதமர் மோடி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, திமுக…

மேலும்...

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து அனைத்து சமய தலைவர்களுடன் ஆலோசனை!

சென்னை (01 ஜூன் 2020): தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறப்பது குறித்து அனைத்து சமய தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு அறிவிக்கப் பட்டதால் வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் தலைமைச் செயலாளர் சண்முகம் அனைத்து சமய தலைவர்களுடன் நாளை மறுநாள் மாலை 4.45 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை எப்போது திறப்பது குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

மேலும்...

இறுதிச் சடங்கில் 50 பேர் பங்கேற்க தமிழக அரசு அனுமதி!

சென்னை (01 ஜூன் 2020): இறுதி சடங்கில் 50 பேர் பங்கேற்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையே, கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், தொடர்ந்து, 5-ம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தளர்வு குறித்த அறிவிப்பில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் மாவட்டத்திற்கான தளர்வுகள் என்னென்ன என்பது தொடர்பாக வெளியிடும் போது…

மேலும்...

பள்ளிகளை திறக்கலாமா? – பெற்றோர்களை அணுக தமிழக அரசு முடிவு!

சென்னை (01 ஜூன் 2020): பள்ளிகளை திறந்தால் பிள்ளைகளை பெற்றோர் பள்ளிகளுக்கு அனுப்புவார்களா? என்பது குறித்து பெற்றோர்களிடம் ஆலோசனை பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா பரவல் மற்றும் தற்போதைய கொரோனா சூழலில் பள்ளிகள் திறப்பு என்பது சாத்தியமாக இருக்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். ஜூன், 15 முதல் 25 வரை தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடக்கிறது. தேர்வு முடிந்த பின், ஜூலை மாதத்தில் தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்படும். அதன்பின் அப்போதைய…

மேலும்...

சென்னை அம்மா உணவகத்தில் இலவச உணவு நிறுத்தம்!

சென்னை (01 ஜூன் 2020): கொரோனா வைரஸ் ஊரடங்கையொட்டி, அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த உணவை சென்னை மாநகராட்சி நிறுத்தம் செய்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏழை-எளிய மக்‍கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில் கட்டணம் வசூலிக்‍காமல் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. ஆனால், இந்த இலவச உணவுக்‍கு, 4-ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பின்போது கட்டணம் வசூலிக்‍கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசுக்‍கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், மே 31-ம் தேதி…

மேலும்...

தள்ளிப்போகிறதா தமிழக சட்டப்பேரவை தேர்தல்?

சென்னை (01 ஜூன் 2020): கொரோனா பரவலால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல் தள்ளிப் போகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியுள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளும் தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் அடுத்த வாரம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். இதனையடுத்து, தமிழக அரசியல் கட்சி தலைவர்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தும்,…

மேலும்...

மதம் கடந்த நட்பு – முகமதுஅசன் ஆரிபின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய ராஜசேகர்!

வேதாரண்யம் (31 மே 2020): எல்லா மதமும் மனிதத்தைத்தான் போதிக்கின்றன என்பதற்கு மற்றுமொரு உதாரணம் அப்துல் ரஹீம், ராஜசேகர் நட்பு. வங்க தேசத்தை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் இவர் ஓமனில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் ஒமனில் முத்துப்பேட்டை அருகே உள்ள வேதாரண்யத்தை சேர்ந்த ராஜசேகரும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அப்துல் ரஹீமின் சகோதரி மகன் 9 வயது முஹம்மது அசன் ஆரிஃப் என்ற சிறுவனின் இதயத்தில் ஓட்டை உள்ளதாகவும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள்…

மேலும்...

திறமைக்கு பரிசு – மதுரை மாணவருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் அளித்த இன்ப அதிர்ச்சி!

மதுரை (31 மே 2020): ஃபேஸ்புக்கில் உள்ள குறையை கண்டுபிடித்து தெரிவித்த மதுரை மாணவருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் 1000 டாலர் பரிசு வழங்கியுள்ளது. ஆண்ட்ராய்டு போன் அத்தியாவசியமாகிவிட்ட இக்காலகட்டத்தில் அதில் சில அசவுகரியங்கள் உள்ளதையும் மறுக்க முடியாது. தகவல் திருட்டு, ஊடுருவல் போன்றவை ஆண்ட்ராய்டு போன்களில் அதிகரித்துவிட்டன. இந்நிலையில் ஃபேஸ்புக்கில் உள்ள ரைட்ஸ் மேனேஜரில் உள்ள குறையை கண்டுபிடித்து ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளார் மதுரை மாணவர் கிஷோர். இவரை பாராட்டிய ஃபேஸ்புக் நிறுவனம் அவருக்கு 1000…

மேலும்...

இஸ்லாத்தில் எனக்கு பிடித்த விஷயங்கள் – யுவன் சங்கர் ராஜா அதிரடி பதில்!

சென்னை (31 மே 2020): “என்னிடம் இருக்கும் பல கேள்விகளுக்கு குர்ஆனில் பதில் கிடைத்தது” என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறிய யுவன் சங்கர் ராஜா 2016 ஆம் ஆண்டு ஷப்ருன் நிஷா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு யுவனின் மனைவி ஷப்ருன் நிஷா இன்ஸ்டாகிராமில் பலரின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது சிலர்…

மேலும்...

சென்னையிலிருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்!

சென்னை (31 மே 2020): கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதலுக்கான கூடுதல் நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு… மண்டலங்களுக்குள் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை. ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலம் செல்பவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை. சென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்கிற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம்….

மேலும்...