மத்திய அரசு மீது சுப்பிரமணியன் சாமி காட்டம்!

சென்னை (04 மே 2020): புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல ரயில்களில் கட்டணம் வசூலிப்பதற்கு பாஜக மூத்த தலைவர் திரு. சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக திரு. சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பதிவில், பாதி பட்டினியில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் வசூலிக்கும் இந்திய அரசின் செயல் மோசமானது என கடுமையாக விமர்சித்தார். வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை இலவசமாக இந்திய அரசு அழைத்துவந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள…

மேலும்...

தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (04 மே 2020): தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3550 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,409 குணமாகி வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று மட்டும் 527 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 266 பேருக்கும் கடலூரில் 122 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில்…

மேலும்...

கொரோனா கொடுமையில் இப்போது இது அவசியமா?

சென்னை (04 மே 2020): கொரோனா வைரஸ் ஒரு புறம் பரவிக் கொண்டு இருக்க டாஸ்மாக் கடைகளை வரும் 7 ஆம் தேதி திறக்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்கூறி இருப்பதாவது: தமிழகத்தில் வரும் 7 ம் தேதி முதல் டாஸ்மாக்கடைகள் திறக்கப்படும். அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டுb செயல்பட வேண்டும். டாஸ்மாக்கடைகள் திறக்கப்பட்டாலும் பார்கள் திறக்க அனுமதிஇல்லை. மேலும் காலை 10 மணி முதல் மாலை 5மணி வரை மட்டுமே…

மேலும்...

நடிகர் ரஜினிக்கு சென்னை மாநகராட்சி கடிதம்!

சென்னை (04 மே 2020): சென்னை மாநகராட்சி சார்பில் நடிகர் ரஜினிகாந்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் ரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார், ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவமனைகளின் சிறப்பு வார்டுகள் நிரம்பியுள்ளது. இதனால் தனியார் கல்லூரிகளில் படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்திலும் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் 50 ஆயிரம் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதற்காக பள்ளிகள்,…

மேலும்...

அலற வைக்கும் கொரோனா – ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் பாதிப்பு!

சென்னை (03 மே 2020): சென்னையில் கொரோனா பாதிப்பால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,341 குணமாகி வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 203 பேரை…

மேலும்...

இதையெல்லாம் நாங்கள் கேட்டால் அரசியல் என்பார் – எடப்பாடி மீது ஸ்டாலின் பாய்ச்சல்!

சென்னை (03 மே 2020): ஊரடங்கிலும் டெண்டர் முறைகேட்டில் முதல்வர் எடப்பாடி படு பிசியாக உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரானோ நோய்த் தொற்றில் மாநிலமே, ஏன், உலகமே கலங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெண்டர் விடுவதில் ரொம்ப பிஸியாக இருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதை நாம் சுட்டிக்காட்டினால், “பேரிடர் நேரத்தில் கூடவா அரசியல்” என்று அப்பாவித்தனமாக ஒரு…

மேலும்...

மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தை மக்கள் வீட்டில் இருந்தபடியே பார்க்கலாம்!

மதுரை (03 மே 2020): மக்கள் வீட்டிலிருந்தே தங்கள் கைபேசி மூலமாகவே இன்று நடக்கும் மீனாட்சி திருக்கல்யாணத்தை பார்த்து மீனாட்சி – சுந்தரேஸ்வரர் அருளை பெறலாம் என்று மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார். மதுரை காமராசர் சாலை, வெங்கடபதி அய்யங்கார் தெரு, பழைய குயவர் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு விலையில்லா இலவச அரிசி,காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 52 -வது வார்டு செயலாளர் அரியனாச்சி…

மேலும்...

கொரோனாவால் அலறும் சென்னை – ஹாட் ஸ்பாட் ஆன கோயம்பேடு!

சென்னை (03 மே 2020): கடந்த 4 நாட்களாக சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. முழு ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பு காய்கறிகளை வாங்க வேண்டும் என்று கோயம்பேடு மட்டுமல்லாமல் மற்ற காய்கறி சந்தையிலும் மக்கள் குவிந்தனர். அதன் விளைவாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது என கூறப்படுகிறது. அதன் தாக்கத்தை சுகாதாரத்துறை வெளியிடும் பாதிப்பு விவரத்தில் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை பார்க்க முடிகிறது. இந்த 10…

மேலும்...

புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு சென்று திரும்பியவருக்கு கொரோனா பாதிப்பு!

கிருஷ்ணகிரி (03 மே 2020): ஆந்திராவின் புட்டபர்த்தி சாய்பாபா கோயிலுக்கு சென்று திரும்பியவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவில் அதி வேகத்தில் பரவி வருகிறது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவியுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மட்டும் அதற்கு விதிவிலக்காக இருந்தது. இந்நிலையில் ஆந்திரா மாநிலம் புட்டபர்த்தி சாய்பாபா கோயிலுக்கு சென்று திரும்பிய கிருஷ்ணகிரியை சேர்ந்தவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பச்சை மண்டலமாக உள்ள கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது….

மேலும்...

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டவாரியாக விவரம்!

சென்னை (03 மே 2020): தமிழகத்தில் இதுவரை 2757 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரம்: தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 256 ஆக உயர்ந்துள்ளது. கோவை மாவட்டத்தில் 142 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 90 பேருக்கும், மதுரை மாவட்டத்தில் 88 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 81 பேருக்கும்,…

மேலும்...