தமிழகத்துக்கு இது மிகப்பெரிய ஆறுதல்!

சென்னை (24 ஏப் 2020): தமிழகத்தில் கொரோனாவிலிருந்து நிவாரணம் பெற்று வீடு திரும்புபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவும் வேகம் அதிகரித்துள்ளது. அதேசமயம் நோய்த்தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோரில் பலர் குணமடைந்து வீடு திரும்புவது ஆறுதல் அளிக்கிறது. தமிழகத்திலும் நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் பலர் குணமடைந்துள்ளனர். கடந்த சில தினங்களாக குணமடைந்தோர் விகிதம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில்…

மேலும்...

கொரோனா பாதிப்பு – பெயர்களை வெளியிட உத்தரவிட முடியாது: உயர் நீதிமன்றம்!

சென்னை (23 ஏப் 2020): கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை அரசு இணையதளத்தில் வெளியிட உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னையை சேர்ந்த நாராயணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவசர மனுவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் பெயர் மற்றும் சார்ந்துள்ள பகுதியை அரசு இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்‍கொண்டார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், நிர்மல்குமார் அமர்வு முன்பு,…

மேலும்...

ஊரடங்கில் மது போதையில் அதிமுக பிரமுகர் – வெளுத்து வாங்கிய பெண் போலீஸ் (வீடியோ)

கள்ளக்குறிச்சி (23 ஏப் 2020): ஊரடங்கில் மதுக்கடைகள் மூடியிருக்க, மது போதையில் பெண் போலீசிடம் தன் திமிரைக் காட்டிய அதிமுக பிரமுகர் மீது எதற்கும் அச்சப்படாமல் ஆக்‌ஷன் எடுத்திருக்கிறார் அந்த பெண் போலீஸ். கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், சிலர் ஊரடங்கு விதிமுறைகளை மீறி தேவையின்றி வெளியில் சுற்றித் திரிகின்றனர். இந்த நிலையில் நாடெங்கிலும் மது கடைகள் மூடப்பட்டிருக்க, மது அருந்திவிட்டு…

மேலும்...

எல்லாரும் நிறுத்திட்டாங்க அதனால நாங்களும் நிறுத்திட்டோம் – சுகாதாரத்துறை விளக்கம்!

சென்னை (22 ஏப் 2020): சரியான ரிசல்ட் தராததால் தமிழகத்திலும் ரேபிட் டெஸ்ட் முறை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பை PCR சோதனை மூலம் உறுதி செய்து வரும் நிலையில், இந்த பரிசோதனை முடிவுகள் வெளியாக தாமதம் ஆவதால், கொரோனா பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களை விரைந்து பரிசோதிக்க Rapid kit- மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் பரிசோதனை முடிவுகள் அரை மணி நேரத்தில் கிடைக்கும் என்பதால், இந்த பரிசோதனையின் முடிவில் இருப்பவருக்கு PCR சோதனை…

மேலும்...

தமிழகத்தில் கொரோனாவிலிருந்து நிவாரணம் பெற்று ஒரே நாளில் 178 பேர் வீடு திரும்பல்!

சென்னை (21 ஏப் 2020): தமிழகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 178 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 20 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். அங்கு கொரோனா பாதிப்பினால் அனுமதிக்கப்பட்ட 124 நபர்களில் 71 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 20 பேர்…

மேலும்...

சத்தியம் தொலைக்காட்சிக்கு ஒரு நீதி பாலிமருக்கு ஒரு நீதியா?- ஜவாஹிருல்லா கேள்வி!

சென்னை (21 ஏப் 2020): கொரோனா பாதிப்பு காரணமாக சத்தியம் தொலைக்காட்சி முடக்கப்பட்ட நிலையில் பாலிமர் தொலைக்காட்சி முடக்கப்படாதது ஏன்? என்று மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சத்தியம் தொலைக்காட்சி ஊழியர்கள் சிலருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில் அந்த தொலைக்காட்சி முடக்கப்பட்டுள்ளது. அதேவேளை பாலிமர் தொலைக்காட்சி ஊழியருக்கும் கொரோனா இருப்பது உறுதியான நிலையில் அந்த தொலைக்காட்சி முடக்கப்படாதது ஏன்? ஒரு ஊரில் ஒருவருக்கு கொரோனா இருந்தால்…

மேலும்...

எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பாஜகவினர் முஸ்லிம்களுக்கு திடீர் பாராட்டு!

சென்னை (21 ஏப் 2020): பிற கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்க தங்களது தங்களது பிளாஸ்மாவை வழங்க முன் வந்துள்ள தப்லீக் ஜமாத்தினருக்கு எஸ்வி சேகர் பாராட்டு தெரிவித்துள்ளார். பாஜக வை சேர்ந்த எஸ்வி சேகர் முஸ்லிம்களை குறி வைத்து தாக்கி பதிவிட்டு வருவார். ஒட்டு மொத்த இந்துத்வா கொள்கையினரும் கொரோனா பரவ முஸ்லிம்களே காரணம் என்பதாக பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைத்து பரப்பி வந்தனர். இது இப்படியிருக்க திடீர் திருப்பமாக முஸ்லிம்களை பாஜகவினர்…

மேலும்...

ஸ்டாலின் மீதான கிண்டல் எதிரொலி – சன் டிவி தலைமை செய்தியாளர் நீக்கம்!

சென்னை (21 ஏப் 2020): சன் டிவி தலைமை செய்தியாளர் ராஜாவை நீக்கம் செய்து சன் டிவி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாறன் பிரதர்ஸ் நடத்தும் சன் நியூஸ் தொலைக்காட்சியில் திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டலடித்து வந்த வந்த வாட்ஸ் அப் மீம் ஒளிபரப்பு செய்யப் பட்டதாகவும் இதன் எதிரொலியாக, சன் டிவியின் தலைமை செய்தியாளரான ராஜா நீக்கம் செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ராஜா உட்பட மேலும் மூவரும் நீக்கப் பட்டுள்ளதாக ட்விட்டரில்…

மேலும்...

பத்தாம் வகுப்பு தேர்வு நடக்குமா? நடக்காதா? – தமிழக கல்வித்துறை அமைச்சர் தகவல்!

சென்னை (21 ஏப் 2020): கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவர் என தமிழக அரசு முன்னமே அறிவித்துள்ளது. இதனிடையே 10ம் வகுப்புகளுக்கு தேர்வு ஒத்தி வைக்கப்படுமா என்ற எண்ணம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்தது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பள்ளி…

மேலும்...

வாரணாசிக்கு ஆன்மீக சுற்றுலா சென்று வந்த தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (20 ஏப் 2020): தமிழகத்திலிருந்து வாரணாசிக்கு ஆன்மீக சுற்றுலா சென்று திரும்பிய இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து 127 பேர் தனிமைப் படுத்தப்படுள்ளனர். தமிழகத்தில் இருந்து சென்னை, சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 127 பேர் வாரணாசிக்கு ஆன்மீக பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டதால் அவர்கள் அங்கிருந்து அவர்கள் திரும்ப முடியவில்லை. பின்னர் உத்தரப் பிரதேச மாநில அரசு உதவியுடன்…

மேலும்...