நான்காம் வகுப்பு மாணவன் தற்கொலை!

மன்னார்குடி (16 ஏப் 2020): மன்னார்குடியில் நான்காம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் மதன். கும்பகோணத்திலுள்ள உறவினர் வீட்டில் தங்கி 4ம் வகுப்பு படித்து வந்த மதன், ஊரடங்கு பிறப்பித்ததால் பள்ளி விடுமுறையை முன்னிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில், வீட்டிலுள்ள அனைவரும் உணவருந்திக் கொண்டிருந்த போது முருகேசன், மதனை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மதன் வீட்டிலுள்ள அறைக்குச் சென்று…

மேலும்...

தமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை!

சென்னை (16 ஏப் 2020): தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1267 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அதாவது சென்னையில் 217 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 127 பேருக்கும் திண்டுக்கல்லில் 65 பேருக்கும்…

மேலும்...

கொரோனா சிகிச்சைக்கு பின் திருச்சியிலிருந்து 32 பேர் வீடு திரும்பல்!

திருச்சி (16 ஏப் 2020): கொரோனா தொற்று சிகிச்சைக்குப் பின் திருச்சி அரசு மருத்துவமனையிலிருந்து 32 பேர், இன்று தங்களது வீடுகளுக்குத் திரும்பினர். திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 43 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 32 பேர் பூரண குணமடைந்தனர். இதையடுத்து அவர்களை மாவட்ட ஆட்சியர் சிவராசு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வனிதா மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டோர் மருத்துவமனை வளாகத்தில் கைதட்டி உற்சாகப்படுத்தி இன்று காலை…

மேலும்...

தீவிரவாத கும்பல் ஏன் இதை செய்கிறது? – நடிகர் சித்தார்த் பளார் கேள்வி!

சென்னை (16 ஏப் 2020): ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சுட்டிக்காட்டி, “தீவிரவாத கும்பல் இந்த வேலையயை செய்ய யார் அனுமதித்தது?” என்று நடிகர் சித்தார்த் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பாக தமிழகமெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட ஊர்களில் கட்டுப்பாடுகளை மீறி இருசக்கர வாகனத்தில் சிலர் வெளியே வருவதும், போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர் இந்நிலையில், சென்னையில் ஊரடங்கு நேரத்தில் வாகனத்தில் செல்லும் நபர்களை ஆர்.எஸ்.எஸ் கட்சியினர்…

மேலும்...

குடும்ப பெண்களின் ஆபாச படங்களை வைத்துக் கொண்டு மிரட்டல் – பொறியியலாளர் கைது!

சென்னை (16 ஏப் 2020): குடும்ப பெண்களின் ஆபாச படங்களை வைத்துக் கொண்டு மிரட்டல் விடுத்த சிவக்குமார் என்ற பொறியியலாளரை போலீசர் கைது செய்துள்ளனர். சென்னை புதுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாருக்கு இ-மெயில் மூலம் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், தனது மனைவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாக பழகிவந்த நபர், தனது மனைவியின் படங்களை ஆபாசமாக சித்தரித்து வீடியாவாக பதிவு செய்து வைத்துக் கொண்டு, பணம் கேட்டு மிரட்டுகிறார்….

மேலும்...

ரம்ஜான் பண்டிகைக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவன்!

சென்னை (15 ஏப் 2020): ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்திற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த ரூ 5200 ஐ கொரோனா முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார் ஏழம் வகுப்பு மாணவர் சல்மான் ஃபாரிஸ். மேற்கு மாம்பலம் கஸ்தூரிபாய் நகர், கல்யாண சுந்தரம் தெருவில் வசிப்பவர், ஏழாம் வகுப்பு மாணவர் சல்மான் ஃபாரிஸ். இவர் அவரது பெற்றோர் அவ்வப்போது வழங்கும் பணத்தை உண்டியலில் சேமித்து வைத்துள்ளார். எதிர் வரும் ரம்ஜான் பண்டிகைக்காக இந்த பணத்தை அவர் சேர்த்து வைத்ததாக…

மேலும்...

ஏப்ரல் 20 க்குப் பிறகு ஊரடங்கில் சில தளர்வுகள்!

புதுடெல்லி (15 ஏப் 2020): கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஏப்ரல் 20-க்கு பிறகு சில கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி மே 3 வரை கீழ்காணும் நிபந்தனைகளை மத்திய அரசு விதித்துள்ளது. மேலும் ஏப்ரல் 20க்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்றும், ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு…

மேலும்...

மோடியை மீண்டும் சீண்டிய கமல்!

சென்னை (15 ஏப் 2020): மும்பையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல், மோடி அரசையும் விமர்சனம் செய்துள்ளார். நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தொடர்ந்து மத்திய மாநில அரசுகளை விமர்சித்து வருகிறார். அந்த வகையில் மோடி சமீபத்தில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி கூறும் விதமாக வீட்டின் முகப்பில் நின்று கைத்தட்டச் சொன்னார். பால்கனியில் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து ஒற்றுமையை நிலைநாட்டுமாறு கேட்டுக்கொண்டார். இதுகுறித்து கமல்ஹாசன் மோடி அரசை…

மேலும்...

அத்தியாவசிய பொருட்களுக்கு கூட அனுமதி இல்லை – கோவையில் அதிரடி!

கோவை (14 ஏப் 2020): கோவையில் அத்தியாவசிய பொருட்களுக்குக் கூட யாரும் வெளியே வரக்கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் தமிழகம் இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதனால் தமிழகத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட இடத்தில் முதலில் சென்னையும் அடுத்து கோவையும் இருக்கிறது. இதனால் கோவையில் உள்ள 14 முக்கிய இடங்களை மாவட்ட நிர்வாகம் முழுவதுமாக முடக்கியுள்ளது. அதில், ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, மேட்டுப்பாளையம், மேட்டுக்கடை, சுந்தராபுரம், குனியமுத்தூர், உக்கடம், மீன்…

மேலும்...

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 10 ஆயிரம் – திருமாவளவன் வலியுறுத்தல்!

சென்னை (14 ஏப் 2020): குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தது 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதலமைச்சரின் அறிவிப்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மீண்டும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களை விலையில்லாமல் வாங்கிக் கொள்ளலாம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது மே மாதத்தில்…

மேலும்...