பிளஸ் டூ பொதுத் தேர்வு மார்ச் 20-ல் திட்டமிட்டபடி தொடங்கும் – பள்ளி கல்வித்துறை!

சென்னை (20 மார்ச் 2020): பிளஸ் டூ பொதுத் தேர்வு திட்டமிட்டபடி மார்ச் 20 ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் தேர்வில் மாற்றம் எதுவும் வரலாம் என எதிர் பார்க்கப் பட்டது. ஆனால் இது குறித்து அவை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் திட்டமிட்ட படி நாளை(மார்ச்-20) பிளஸ் 2 பொது தேர்வுகள் நடத்தப்படும். மேலும்…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் மூன்றாக உயர்வு!

சென்னை (19 மார்ச் 2020): தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் கரோனா பாதிப்பு மூன்றாக உயர்ந்திருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த தகவலைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது, அயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்த 21 வயது மாணவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களின்…

மேலும்...

கொரோனா வைரஸ் – கனிமொழி எம்பி கோரிக்கை!

சென்னை (19 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் கனிமொழி எம்பி மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா வைரஸ் உலகமெங்கும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவிலும் 169 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது பரவாமல் தடுக்கும் வகையில், ” போராட்டங்கள், திருமண நிகழ்வுகள் போன்ற ஒன்றுகூடல்களை சற்று ஒத்திவைக்கலாம். ஒரு சமூகமாக நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாகவும், அக்கறையோடும் இருப்போம்.” என்று கனிமொழி எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்...

சிஏஏ வை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேரணி!

சென்னை (19 மார்ச் 2020): சிஏஏவை எதிர்த்து ததஜ சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இணைந்து நேற்று சென்னையில் பேரணி நடத்தினர். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டை தவிர தமிழகத்தின் பல பகுதிகளில் டெல்லி ஷாஹீன் பாக் மாடலில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அரசின் உத்தரவை ஏற்று, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க பல இஸ்லாமிய…

மேலும்...

கொரோனா பாதிகப்பட்டால் உதவ தயார் நிலையில் இலவச ஆம்புலன்ஸ் – VIDEO

கரூர் (18 மார்ச் 2020): கரூர் எம்.ஆர்.வி டிரஸ்ட் மற்றும் கொங்கு ஆம்புலன்ஸ் இணைந்து கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உதவ கொங்கு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலையடுத்து ஆங்காங்கே பொதுமக்கள் பெருமளவில் அச்சத்திற்குள்ளாகியுள்ள நிலையில். இந்தியாவில் ஒரு சில இடங்களிலும், ஒரு சில மாநிலங்களிலும் பரவிவரும் இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரிக்கின்றது. இந்நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள்…

மேலும்...

மதக் கலவரத்தை தூண்ட மீண்டும் ஒரு நாடகம் – வசமாக சிக்கிய இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்!

திருப்பூர் (18 மார்ச் 2020): மதக் கலவரத்தை தூண்ட தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டு நடகமாடிய இந்துமக்கள் கட்சியை சேர்ந்த நந்த கோபால் என்பவர் போலீசின் பிடியில் வசமாக சிக்கியுள்ளார். திருப்பூரைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் நந்து, எஸ்.ஆர். எலக்ட்ரிக்கல்ஸ் கடையை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீடு திரும்பும் போது தம்மை பிற மதத்தினர், மற்றும் காவி வேட்டி கட்டியவர்கள் கத்தியால் குத்தியதாக போலீசில் புகார் அளித்தார். இதனால் திருப்பூரில்…

மேலும்...

தமிழகத்தில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – தனிமைப் படுத்தப்பட்ட 2984 பேர்!

சென்னை (18 மார்ச் 2020): தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டுள்ளதாக தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கொரோனா பாதித்த நபர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கொரோனா பாதித்த இளைஞர் 20 வயதுடையவர். அவர் ரயில் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ளார்….

மேலும்...

கொரோனாவிலிருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை எடுக்கும் முன்மாதிரி கிராமம்!

தஞ்சாவூர் (18 மார்ச் 2020): அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே செந்தலை பட்டினம் கிராமத்து மக்கள், தங்களை கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன்படி ஊரை விட்டு வெளியூருக்குச் சென்று திரும்பி வரும் கிராம மக்கள்…

மேலும்...

கோவையில் அதிர்ச்சி – கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மரணம்!

கோவை (17 மார்ச் 2020): கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட தாய்லாந்து இளைஞர் உயிரிழந்துள்ளார். தாய்லாந்து நாட்டில் இருந்து தமிழகத்துக்கு 7 பேர் கொண்ட குழு சுற்றுலா வந்தது. அந்த குழு தாய்லாந்து திரும்பிச் செல்ல இருந்த நிலையில் இவர்களில் டான் ரோசாக் என்பவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக கூறிய கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அவரை கொரோனா வார்டில் அனுமதித்தனர். மேலும் அவருக்கு சிறுநீரக பிரச்சனையும்…

மேலும்...

காங்கிரஸ் தலைவர் காலில் விழுந்த ரஜினி!

சென்னை (17 மார்ச் 2020): சென்னையில் விழா ஒன்றில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் காலில் விழுந்து ரஜினிகாந்த் ஆசி வாங்கியுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார். எனினும் அவர் எப்போது கட்சி தொடங்குவார் என பரவலாக எதிர்பார்ப்புகள் இருந்து வரும் நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்…

மேலும்...