திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்!

சென்னை (28 பிப் 2020): திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 97 வயதாகும் க.அன்பழகன் மூச்சுத் திணறல் பிரச்னையால், கடந்த 24-ம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அன்பழகனுக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும், புதன் கிழமை இரவு முதல் அவர் கண் திறக்கவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், கவலைக்கிடமான…

மேலும்...

துப்புரவு தொழிலாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜகவை சேர்ந்தவர் கைது!

கோவை (28 பிப் 2020): கோவையில் துப்புரவு தொழிலாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜகவை சேர்ந்த ஜோதி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை வரதராஜபுரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளி பெண், கழிவறையை துப்புரவு செய்துகொண்டிருந்தபோது, அங்கு சென்ற ஜோதி, அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனை அடுத்து அந்த பெண் கூச்சலிடவே, பெண்ணை கடுமையாக தாக்கியும் உள்ளார். இதுகுறித்து அந்த பெண் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்….

மேலும்...

திமுகவின் குடியாத்தம் எம்.எல்.ஏ மரணம் – திமுகவினர் அதிர்ச்சி!

சென்னை (28 பிப் 2020): குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் மாரடைப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை காலமானார். அவர் இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சை முடிந்து 20 நாள்களாக சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை 9.20 மணியளவில் காலமானார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில்தான் குடியாத்தம் தொகுதியில் இவர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது மறைவுக்கு திமுகவினர்…

மேலும்...

ரஜினிக்கு சீமான் திடீர் ஆதரவு!

சென்னை (27 பிப் 2020): ரஜினி கர்நாடகாவில் கட்சி தொடங்கினால் ஆதரவளிப்பதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க போவதாக அறிவித்து பல மாதங்கள் ஆனாலும் இன்னும் கட்சி தொடங்கவில்லை. எனினும் அவ்வப்போது ஏதாவது சொல்லி சிக்கலில் சிக்கிக் கொள்வது வாடிக்கை. சமீப காலமாக ரஜினியை சீமான் அதிகமாக விமர்சித்து வந்தார். தற்போது சற்று அதனை தவிர்த்துவ் வருகிறார். மேலும் கட்சியின் எதிர்கால திட்டம் குறித்து இணையதள பாசறை நாம் தமிழர் கட்சியினருடன்…

மேலும்...

கொரோனா வைரஸ் எதிரொலி – வெளிநாட்டு உம்ரா யாத்ரீகர்கள் சவூதிக்கு வருகை புரிய தற்காலிக தடை!

மக்கா (27 பிப் 2020): உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் எதிரொலியாக சவூதி அரேபியாவிற்கு வரும் உம்ரா யாத்ரீகர்களுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது சவூதி அரசு. இதுகுறித்து சவூதி வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உம்ரா மற்றும் சுற்றுலா விசாவில் சவூதி வருபவர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையே இந்தியாவிலிருந்து வரும் தகவல்படி, பல உம்ரா யாத்ரீகர்கள் இந்திய…

மேலும்...

ரஜினிக்கு பாஜக கண்டனம்!

சென்னை (27 பிப் 2020): டெல்லி வன்முறைக்கு மத்திய உளவுத்துறையே என்று கூறிய நடிகர் ரஜினியின் கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக நேற்றி செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ‘டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு காரணம் மத்திய அரசினுடைய உளவுத்துறையின் தோல்வி. மத்திய அரசைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். டிரம்ப் இந்தியாவுக்கு வந்திருக்கும்போது மத்திய அரசு ஜாக்கிரதையாக இருந்திருக்கவேண்டும். உளவுத்துறை அவர்களது வேலையை சரியாகச் செய்யவில்லை. வன்முறையில் ஈடுபட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும்….

மேலும்...

திமுக எம்.எல்.ஏ. மரணம்!

சென்னை (27 பிப் 2020): திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பிபி சாமி உடல் நலக்குறைவால் காலமானார். 2006-11 திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த கே.பி.பி சாமி, 2011 தேர்தலில் தோல்வியடைந்தார். 2016 தேர்தலில் மீண்டும் அத்தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். தற்போது, அக்கட்சியின் மீனவர் அணி செயலாளராக இருந்த சாமி, கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி தனது 57-வது வயதில் அவர் காலமானார். சாமியின் மறைவுக்கு…

மேலும்...

பாஜகவினரிடமிருந்து பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு தேவை – காவல்துறையிடம் மனு!

திருப்பூர் (27 பிப் 2020): பாஜகவினரிடமிருந்து பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு கோரி திருப்பூர் காவல் நிலையத்தில் பிரியாணி கடைக்காரர்கள் மனு அளித்துள்ளனர். சிஏஏ வுக்கு ஆதரவாக பாஜக சார்பில் திருப்பூரில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெறவுள்ளது. பேரணியின்போது, பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு தர கோரி திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பிரியாணி கடை உரிமையாளர்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் கொல்லப்பட்ட சசிகுமார் என்ற இந்து முன்னணி பொறுப்பாளரின் இறுதி ஊர்வலத்தில் பிரியாணி அண்டா திருடப்பட்ட சம்பவத்தை அடுத்து,…

மேலும்...

அதிமுகவுக்கு எச்.ராஜா பகிரங்க மிரட்டல்!

திருவண்ணாமலை (27 பிப் 2020): சிஏஏவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் தமிழக ஆட்சி கவிழும் என்று எச்.ராஜா மிரட்டல் விடுத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் போளூரில குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எச்.ராஜா, “. தமிழக சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். அப்படி சி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படும். திமுகவை இந்து விரோத கட்சியே அல்ல என்று…

மேலும்...

சபாஷ் ரஜினி – ரஜினியை கமல் எதற்கு பாராட்டியுள்ளார் தெரியுமா?

சென்னை (26 பிப் 2020): சபாஷ் ரஜினி என்று ரஜினியை நடிகர் கமல் பாராட்டியுள்ளார். சென்னையில் புதனன்று திடீரென பேட்டி அளித்த ரஜினி, உள்துறை அமைச்சகத்தின் தோல்வியே டில்லி வன்முறைக்கு காரணம் என, பேசியிருந்தார். இதை, பாராட்டியே மக்கள் நீதி மய்ய தலைவர், நடிகர் கமல்பதிவு வெளியிட்டுள்லார்.. அவரது பதிவில், “சபாஷ் நண்பர் ரஜினி அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை. வருக,…

மேலும்...