எஸ்.ஐ.வில்சன் கொலை வழக்கு தொடர்பாக காயல்பட்டினத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

காயல்பட்டினம் (24 பிப் 2020): களியக்காவிளையில் எஸ்ஐ வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் உள்ள மொய்தீன் பாத்திமா என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் கடந்த ஜனவரி 8-ஆம் தேதி இரவு சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்தக் கொலை தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி, நாகா்கோவில் கோட்டாறு இளங்கடையைச் சோ்ந்த தவ்பீக், தக்கலையை அடுத்த திருவிதாங்கோட்டைச் சோ்ந்த…

மேலும்...

அனுமதி இருந்தால் நானும் புர்கா அணிவேன் – ஏ.ஆர்.ரஹ்மான் அதிரடி!

சென்னை (23 பிப் 2020): மகள் கதீஜா அணியும் புர்கா குறித்த சர்ச்சைக்கு அமைதியாக இருந்த ஏ.ஆர்.ரஹ்மானும் தற்போது வாய் திறந்துள்ளார். சர்ச்சை எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் சமூக வலைதள பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா பர்தா அணிவது குறித்து விமர்சித்து பதிவிட்டிருந்தார். இதற்கு கதீஜா சரியான பதிலடி கொடுத்தார். இந்நிலையில் இவ்விவகாரத்தில் அமைதியாக இருந்த ஏ.ஆர்.ரஹ்மானும் தற்போது மகளுக்கு ஆதரவாக வாய் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “நான் உங்களுக்கு (கதீஜா) முழு சுதந்திரம் தருவதாக…

மேலும்...

நாங்கள் அம்பேத்கரின் பிள்ளைகள், சாவர்க்கரின் பிள்ளைகளல்ல – ரஜினியை விளாசிய ஜேஎன்யூ மாணவர் தலைவர்!

சென்னை (23 பிப் 2020): மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் ரஜினிக்கு ஜே.என்.யு மாணவர் தலைவர் அய்ஷி கோஷ் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அனைவருக்குமான கல்வியை உறுதி படுத்த வேண்டும், கல்வியை தனியார்மயமாக்கக் கூடாது. கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கு பெற்ற ஜே.என்.யு. மாணவர் தலைவர் அய்ஷி கோஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது,…

மேலும்...

அமெரிக்க அதிபரை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி!

சென்னை (23 பிப் 2020): இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது மனைவியுடன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை இந்தியா வருகிறார். இந்தச் சுற்றுப்பயணத்தின்போது ட்ரம்ப்புக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன் விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ட்ரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். அந்த வகையில் தமிழ்நாடு…

மேலும்...

பாஜகவில் இணைந்தார் சந்தன கடத்தல் வீரப்பனின் மகள்!

சென்னை (23 பிப் 2020): சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்துள்ளார். சென்னை வியாசர்பாடியில் கணவருடன் வசித்து வரும் வித்யாராணி நேற்று கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ், முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார். இந்நிலையில் தமிழர் வாழ்வுரிமை கட்சியில் நிர்வாகியாக உள்ள வீரப்பனின் மனைவி, மகள் பாஜகவில் இணைந்தது குறித்து கருத்து சொல்ல மறுத்துவிட்டர்.

மேலும்...

திருச்சி மாநாட்டில் திருமாவளவன் திமுக மீது மறைமுக பாய்ச்சல்!

திருச்சி (23 பிப் 2020): விடுதலை சிறுத்தைகள் கட்சி விரைவில் கோட்டையில் கொடியேற்றும் என்றும் திமுகவுக்கு பல மெஸேஜ்களையும், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சியில் நேற்று நடைபெற்ற தேசம் காப்போம் என்ற பெயரில் குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களை கண்டித்து தேசம் காப்போம் என்ற பெயரில் நேற்று திருச்சியில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. அதில் பேசிய திருமாவளவன், திமுகவுக்கு பல மறைமுக மெஸேஜ்களை தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெறுமனே கோஷம்…

மேலும்...

தமிமுன் அன்சாரிக்கு சிறந்த இளம் எம்.எல்.ஏ விருது – மகாரஷ்டிர பல்கலைக் கழகம் கவுரவம்!

புனே (22 பிப் 2020): மகாராஷ்டிராவின் பல்கலைக் கழகம் ஒன்று மனித நேய ஜனநாயக கட்சியின் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரிக்கு சிறந்த இளம் எம்.எல்.ஏ விருது வழங்கி கவுரவித்துள்ளது. . மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த தனியார் பல்கலைக்கழகம் ஒன்று, நாட்டில் உள்ள முன் மாதிரி இளம் அரசியல் தலைவர்களை கண்டறிந்து விருதுகளை வழங்கி ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில், சிறந்த இளம் எம்.எல்.ஏ. விருதிற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான…

மேலும்...

வேறொரு பெண்ணுடன் கள்ள காதல் – திமுக பிரமுகர் மீது மனைவி பரபரப்பு புகார்!

சென்னை (22 பிப் 2020): வேறொரு பெண்ணுடன் கணவருக்கு கள்ள உறவு இருப்பதாக திமுக பிரமுகர் மீது அவரது மனைவி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். சென்னை: “என் கணவரை விட 15 வயசு பெரியவங்க அவங்க.. அக்கா, அக்கான்னு கூப்பிட்டார்.. கடைசியில 2 பேருக்கும் கள்ள உறவு இருந்திருக்கு… அவருடன் சேர்ந்து என் கணவர் கும்மாளம் அடிக்கிறார்.. இதை பற்றி திமுக தலைவர் ஸ்டாலினிடம் புகார் கூறியதால், கொலை செய்து விடுவதாக என்னை மிரட்டுகிறார்’ என,…

மேலும்...

சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

சென்னை (22 பிப் 2020): சென்னைக்கு ஆறு மாதத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவ மழையின் மூலம் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் முழுமையாக நிரம்பவில்லை என்றாலும் ஓரளவுக்கு நீர் மட்டம் உயர்ந்தது. தற்போது சென்னைக்கு கடல் நீர் குடிநீர் திட்டம், வீராணம் ஏரி போன்றவை கை கொடுத்து வருகிறது. 4 ஏரிகளில் இருந்தும் தினமும் தண்ணீர் எடுத்து வினியோகிக்கப்படுகிறது. மேலும் சென்னைக்கு…

மேலும்...

என்னை கூப்பிடாதீங்க – நீதிமன்றம் செல்ல அஞ்சும் ரஜினி!

சென்னை (22 பிப் 2020): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராவதற்கு விலக்கு கேட்டு நடிகர் ரஜினி மனு அளித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூடு குறித்தும், போராட்டம் குறித்தும் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, போராட்டக்காரர்களுக்குள் சமூக விரோதிகள் நுழைந்ததாக கருத்து தெரிவித்தார். இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்…

மேலும்...