சென்னை ஷாஹீன் பாக் – முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை குவியும் கூட்டம் -வீடியோ!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அங்கு பொதுமக்களின் கூட்டம் அதிகரித்த வண்ணமே உள்ளது. முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை போராட்டக் களத்தில் குவிந்தபடி உள்ளனர். மேலும் எதிர் கட்சித்தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் போராட்டக் களத்தில் வந்து தங்களது ஆதரவை தெரிவித்தும் வருகின்றனர். நாளை சட்டசபை தொடங்கும் நிலையில் சென்னை ஷாஹின் பாக் போராட்டம் மேலும் சூடுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

ஜாமியா வளாகத்தில் குண்டர்கள் நடத்திய தாக்குதலின் பரபரப்பு வீடியோ காட்சிகள்!

புதுடெல்லி (16 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போது டெல்லி ஜாமியா பல்கலைக்கழக நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களை குண்டர்கள் தாக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி அமைதியாக நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தில் பயங்கரவாத குண்டர்கள் புகுந்து மாணவர்களை பயங்கரமாக தாக்கினர். மேலும் ஜாமியா மாணவர்கள் மீது…

மேலும்...

சென்னை ஷாஹின் பாக்கில் சீமானின் சீற்றம்!

சென்னை (16 பிப் 2020): சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்பகுதிக்கு வந்து இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது மேடையில் பேசிய சீமான் கூறுகையில், “எனக்கு என் பாஸ்போர்டை கொடுங்கள் வேறு நாட்டுக்கு செல்கிறேன் என்ற நிலை தான் உள்ளது. ஜக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில்…

மேலும்...

சென்னை ஷஹீன்பாக்: பிப் 19 ல் அனைத்து கலெக்டர் அலுவலகம் முற்றுகை – VIDEO

சென்னை (16 பிப் 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வரும் பிப்ரவரி 19ல் அனைத்து கலெக்டர் அலுவலகங்களையும் முற்றுகையிட அனைத்து மாவட்ட மக்களும் முடிவு செய்துள்ளனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் நடத்திய கண்மூடித் தனமான தாக்குதலுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனை இஸ்லாமிய கூட்டமைப்பினர் நேற்று மாலை சந்தித்தனர். அதன் பின் “தேசிய குடிமக்கள்…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கோடிக்கணக்கான கையெழுத்துக்கள் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

சென்னை (16 பிப் 2020): CAA-NRC-NPRக்கு எதிரான கோடிக்கணக்கான கையழுத்துக்கள் குடியுரசு தலைவருக்கு அனுப்பப்பட்டது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான கையழுத்துக்களை பெற்று குடியரசு தலைவருக்கு அனுப்பும் “கையெழுத்து இயக்கம்” நடைப்பெற்றது. தமிழகமெங்கும் பெறப்பட்ட கையெழுத்துக்களை இன்று 16.02.2020 இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பும் நிகழ்வு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைப்பெற்றது. இதில் திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் MLA, மனிதநேய மக்கள் கட்சி…

மேலும்...

விழுப்புரம் அருகே பயங்கரம் – தலித் இளைஞர் அடித்துக் கொலை!

விழுப்புரம் (16 பிப் 2020): விழுப்புரம் அருகே தலித் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் பகுதி நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் தலித் சமூகத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டிற்கும், பெட்ரோல் பங்கிற்கும் இடையிலான தொலைவு அதிகம் என்பதால், இருசக்கர வாகனத்தில் சென்று வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவுப்பணிக்கு சென்ற அவர், புதன்கிழமை காலை வீட்டிற்கு வந்து படுத்துள்ளார். சிறிதுநேரத்தில், சக ஊழியரிடமிருந்து…

மேலும்...

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னை மண்ணடியும் போராட்டக் களமானது!

சென்னை (16 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை பொதுமக்கள் மீதான போலீஸ் தாக்குதலை எதிர்த்து சென்னை மண்ணடியில் நேற்று இரவு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வண்ணாரப்பேட்டை சென்னை ஷஹீன் பாக்காக மாறி தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை மண்ணடியில் நேற்று இரவு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். நேற்று முன்தினம் இரவு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு கடும் கண்டனம்…

மேலும்...

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசல் மீது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

புதுடெல்லி (16 பிப் 2020): ஜம்மு காஷ்மீரில், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசல் மீது பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஷா பைசல். ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆ,ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து 2019 மார்ச் 16-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம் என்ற கட்சியைத் தொடங்கினார். இதற்கிடையே, கடந்த…

மேலும்...

மக்களைப் பற்றி சிந்திப்பவர்களைதான் மக்களும் சிந்திக்க வேண்டும்: ஸ்டாலின்!

தூத்துக்குடி (16 பிப் 2020): மக்களைப் பற்றி சிந்திப்பவர்களைத்தான் மக்களும் சிந்திக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி பெரியசாமி பேரன் திருமண விழாவில் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியபோது, மேலும் தெரிவித்ததாவது: தூத்துக்குடியில் தி.மு.க.வுக்கு தூணாக, தலைவர் கலைஞரின் முரட்டு பக்தனாக விளங்கிய பெரியசாமியின் பேரன் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சி இது. பெரியசாமி இயக்க தோழர்களோடு இணைந்து, பிணைந்து அவர் செய்துள்ள பணிகளை எல்லாம் நாம் இன்றும் நினைத்து பெருமைப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். அதனால்தான்…

மேலும்...

இன்றைய கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் சீஃப் கெஸ்ட் இவங்கதான்!

புதுடெல்லி (16 பிப் 2020): டெல்லி முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்கும் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் முக்கிய பிரமுகராக இணையத்தை கலக்கிய பேபிமப்ளர் மேனுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. டெல்லியில் பல கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து கெஜ்ரிவால், மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். 70 தொகுதிகளில் 62ஐ கைபற்றி சாதனை படைத்தார். பாஜகவின் மக்கள் விரோத பிரச்சாரம் டெல்லியில் பலிக்கவில்லை. காங்கிரஸ் அனைத்து இடங்களையும் இழந்தது. மக்கள் முதல்வர் என்று அழைக்கப் பட்ட கெஜ்ரிவால் அதற்கேற்ற வகையில்…

மேலும்...