சீமானை சீண்டும் விஜய் பட நடிகை!

சென்னை (08 பிப் 2020): நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானை மீண்டும் சீண்டியுள்ளார் நடிகை விஜயலட்சுமி. விஜய் நடித்த ஃப்ரெண்ட்ஸ் படம் மூலம் அறிமுகம் ஆனவர் விஜயலட்சுமி, இவர் ஏற்கனவே சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். இந்நிலையில் ஒரு காலத்தில் கடவுள் மறுப்பு கொள்கையாளராக இருந்து தற்போது சிவ பக்தராக மாறியுள்ள சீமானிடம் நடிகை விஜயலெட்சுமி எழுப்பி உள்ள கேள்விகள் எழுப்பியுள்ளார். சீமான் , தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு சென்று சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது தொடர்பாக,…

மேலும்...

நடிகர் ரஜினி மீது டி.ராஜேந்தர் விமர்சனம்!

சென்னை (08 பிப் 2020): ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியான படம் தர்பார். பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. இந்நிலையில் இந்த படம் போதுமான பணத்தை வசூலீட்டவில்லை என்று படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். இழப்பீட்டுக்காக அவர்கள் இயக்குனர் முருகதாஸை சந்திக்க முயற்சி செய்தபோது அவர் அனுமதிக்கவில்லை, அதேபோல ரஜினிகாந்தும் நேரில் பார்த்து பேச அனுமதிக்கவில்லை என்று விநியோகஸ்தர்கள்…

மேலும்...

கோவில் வாசலில் நடந்த கொடூர கொலை!

வேலூர் (08 பிப் 2020): வேலூர் அருகே கோவில் வாசலில் நடந்த கொடூர கொலை பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், கொசப்பேட்டை திருப்பூர் குமரன் தெருவில் வசித்து வந்தவர் கட்டிட மேஸ்திரி குட்டி (எ) குமரவேல்(48). இவருக்கு திருமணமாகி மனைவி, பிள்ளைகள் உள்ளனர். இவர் கொசப்பேட்டை ஆனைகுளத்தம்மன் கோவில்க்கு வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்துள்ளார். வெள்ளிக்கிழமை என்பதால் நூற்றுக்கணக்கான பெண்கள் கோவிலுக்கு வந்து சென்றபடி இருந்துள்ளனர். பிப்ரவரி 7 ந்தேதி இரவு…

மேலும்...

பாஜக காரர்களுக்கு பாதுகாப்பு – விஜய் ரசிகர்களுக்கு தடியடி!

நெய்வேலி (07 பிப் 2020): நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்திற்குள் நடிகர் விஜய்-யைக் காண வந்த ரசிகர்கள் மீது, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அப்பகுதி ரணகளமானது. “மாஸ்டர்” திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்து வருகிறது. இதில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். கடந்த 5-ஆம் தேதி, “மாஸ்டர்” படப்பிடிப்பு தளத்தில் இருந்து விசாரணைக்காக நடிகர் விஜய்-யை சென்னைக்கு அழைத்துச் சென்றனர், வருமான வரித்துறையினர். பல மணி நேர விசாரணைக்கு பின்னர்…

மேலும்...

ரஜினி குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தில் ஒரு பின்னணி உண்டாம்!

சென்னை (07 பிப் 2020): ஐ.டி.ரெய்டு வந்துவிடுவார்கள் என்பதால்தான் குடியுரிமை சட்டத்திற்கு ரஜினி ஆதரவு தெரிவித்துள்ளார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் கம்பத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டார். அப்போது நிருபர்களிடம் பேசிய அழகிரி, “நடிகர் ரஜினிகாந்த்துக்கு குடியுரிமை சட்டம் பற்றி தெரியாது. வருமான வரி…

மேலும்...

உண்மை ஒருநாள் வெளியே வரும் – ஊடகங்கள் மீது ஸ்டாலின் பாய்ச்சல்!

சென்னை (07 பிப் 2020): ஊடகங்கள் உண்மையை மறைக்கின்றன என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் தி.மு.க சென்னை வடக்கு மாவட்ட துணை செயலாளர் இளைய அருணா இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய ஸ்டாலின் ஊடகங்களை கடுமையாக விமர்சித்தார். மேலும் அவர் பேசியதாவது: “ஒருகாலத்தில் வைதீக திருமணங்களை நடத்தி வைப்பதற்கு புரோகிதர்களை தேடி அலையும் நிலை இருந்தது. தற்போது நிலைமை தலைகீழாகி சீர்திருத்தத் திருமணங்கள் அதிகளவில் நடக்கின்றன. இப்போதெல்லாம்…

மேலும்...

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் – தொடரும் கைதுகள்!

கிருஷ்ணகிரி (07 பிப் 2020): நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக மேலும் ஒரு மாணவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். நீட் தேர்வு ஆள்மாறாட்டம் குறித்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேனி CBCID அலுவலகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த மாணவர், ஒரு மாணவி என இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, கிருஷ்ணகிரியை சேர்ந்த பவித்ரன் என்பவரும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், சென்னை, தனியார் மருத்துவ…

மேலும்...

திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்!

சென்னை (07 பிப் 2020): அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் திமுகவில் இணைகிறார். ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 96-ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தவர் ராஜ கண்ணப்பன். கருத்து வேறுபாடு காரணமாக அ.தி.மு.க.வில் இருந்து விலகி கடந்த 2000-ம் ஆண்டில் ’மக்கள் தமிழ் தேசம்’ எனும் பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். பின்னர், 2006-ம் ஆண்டு தி.மு.க.வில் தனது கட்சியை இணைத்தார். இதையடுத்து 3 ஆண்டுகளுக்கு பிறகு 2009-ல் மீண்டும்…

மேலும்...

செருப்பை கழட்டி விட்ட சிறுவனிடம் சந்திப்பு – மன்னிப்பு கோரினாரா அமைச்சர்?!

குன்னூர் (07 பிப் 2020): அமைச்சரின் செருப்பை கழட்டி விட்ட சிறுவனை அழைத்து குடும்பத்துடன் சந்தித்துள்ளார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் 48 நாட்கள் நடைபெறும் யானைகள் முகாமை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்த நிகழ்வின் போது, அமைச்சர் சீனிவாசனின் அவரது செருப்பை ஒரு சிறுவனை ‘டேய் வாடா வாடா, செருப்பை கழற்றுடா’ என அழைத்தார். உடனே அருகிலிருந்த பழங்குடியின சிறுவன் அவரது செருப்பை கழற்றி விட்டார். அமைச்சரின்…

மேலும்...

முன்னாள் முதல்வர்கள் மீது பொது பாதுகாப்பு சட்டம் – ப.சிதம்பரம் அதிர்ச்சி!

சென்னை (07 பிப் 2020): ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, சர்தாஜ் மதானி உள்ளிட்ட தலைவர்கள் மீது பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளமை அதிர்ச்சி அளிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை தொடர்ந்து அங்கு மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இன்னும் காஷ்மீர் ராணுவ கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த…

மேலும்...