கற்பனையை மிஞ்சும் மோசடி – ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை (29 ஜன 2020): குரூப்-4 தேர்வு முறைகேடு குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, இளைஞர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தாவிட்டால், தி.மு.க இளைஞரணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கியில் கூறியிருப்பதாவது: “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில், “தரகர்களின்” புகலிடமாக மாற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. “குரூப்-4 தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள்” வெளிச்சத்திற்கு வந்து, அதன் காரணமாக, தமிழக…

மேலும்...

திருச்சி பாஜக நிர்வாகி படுகொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மிட்டாய் பாபு கைது!

திருச்சி (29 ஜன 2020): திருச்சி பாஜக நிர்வாகி படுகொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மிட்டாய் பாபு போலீசாரால் கைது செய்யப்பட்டார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் பாலக்கரை பகுதி பாஜக மண்டலச் செயலாளராக இருந்தவர் விஜய ரகு. இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் பணியை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த (27-ம் தேதி) காந்தி மார்க்கெட் வாசலில் ஒரு கும்பல் விஜய ரகுவை வெட்டிக் கொலை செய்தது. இந்த கொலை தொடர்பாகஅதே பகுதியை…

மேலும்...

அழகாய் இல்லாததால் கணவன் துன்புறுத்தல் – புது மணப்பெண் தற்கொலை

நாகர்கோவில் (29 ஜன 2020): அழகாக இல்லாததை காரணம் காட்டி கணவன் துன்புறுத்தியதால் மனம் உடைந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகர்கோவில் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகா்கோவில் காற்றாடித்தட்டையை சோ்ந்த அா்சனா (24) சிறு வயதிலேயே தாயை இழந்தவர். அதே பகுதியை சோ்ந்த சிவனை பல கனவுகளோடு கரம் பிடித்தார். திருமணமாகி 7 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளது. இந்நிலையில்தான் அர்ச்சனா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அர்ச்சனாவின் தந்தை பொன்னு முத்து கூறும்போது, மூன்று…

மேலும்...

முதலில் அறிக்கை பின்பு மறுப்பு – மீண்டும் தமிழக அரசின் குளறுபடி!

சென்னை (29 ஜன 2020): பொதுத் தேர்வை முன்னிட்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினம் 1 மணிநேரம் சிறப்பு வகுப்பு நடத்தப்பட மாட்டாது என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற அடிப்படையில் இதுவரை பள்ளிகள் நடைபெற்று வந்தனர். ஆனால் மத்திய அரசு அமைத்திருந்த கஸ்தூரிரங்கன் தலைமையிலான தேசியக் கல்விக்கொள்கை வடிவமைப்புக் குழுவின் வரைவு அறிக்கையும் கடந்த ஆண்டு வெளியானது. அந்த அறிக்கையில் 5 மற்றும்…

மேலும்...

மதுரையில் பயங்கரம் – மளிகைக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு!

மதுரை (29 ஜன 2020): மதுரையில் மளிகைக் கடைக்காரரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி விட்டு மேலும் பெட்ரோல் குண்டைவ்யும் வீசிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அனுப்பானடி சின்னகன்மாய் பகுதியை சேர்ந்த கனேசன் என்பவரது மளிகைக் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு, கடைக்குள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடியுள்ளது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சந்தேகத்தின் பேரில் சிலரிடம் விசாரணை நடைபெற்று…

மேலும்...

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மேலும் அழுத்தம் – சிறப்பு வகுப்புகளுக்கு உத்தரவு!

சென்னை (29 ஜன 2020): பொதுத் தேர்வை முன்னிட்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினம் 1 மணிநேரம் சிறப்பு வகுப்பு நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற அடிப்படையில் இதுவரை பள்ளிகள் நடைபெற்று வந்தனர். ஆனால் மத்திய அரசு அமைத்திருந்த கஸ்தூரிரங்கன் தலைமையிலான தேசியக் கல்விக்கொள்கை வடிவமைப்புக் குழுவின் வரைவு அறிக்கையும் கடந்த ஆண்டு வெளியானது. அந்த அறிக்கையில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு…

மேலும்...

வரலாற்று சாதனை – பிரதமர் மோடிக்கு எடப்பாடி நன்றி!

சென்னை (28 ஜன 2020): பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்துள்ளார். அரியலூர், கள்ளக்குறிச்சியில் 2 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரே நேரத்தில் 2 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. ஆண்டில் 11 புதிய…

மேலும்...

ரஜினிக்கு எதிரான வழக்கு வாபஸ்!

சென்னை (28 ஜன 2020): நடிகர் ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வருமான வரித்துறை வாபஸ் பெற்றுள்ளது. நடிகர் ரஜினி சரியாக வருமான வரி கட்டவில்லை என கடந்த 2014 ஆம் ஆண்டு வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் 50லட்சத்துக்கும் குறைவான அபராதங்களில் வழக்கு தொடரக்கூடாது என்ற வரம்பை ஒரு கோடியாக உயர்த்தி மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் முடிவெடுத்துள்ளதால் வழக்கை வாபஸ் பெறுவதாக…

மேலும்...

குரூப் 4 தேர்வு ரத்தாகுமா? – தொடரும் கைது!

சென்னை (28 ஜன 2020): குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரூப் 4 தேர்வு எழுதிய சிவராஜ் உட்பட 2 பேரை கைது செய்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக…

மேலும்...

சென்னையில் போராட்டம் நடத்த தடை!

சென்னை (28 ஜன 2020): சென்னையில் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப் பட்டுள்ளது. குடியுரிமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத சட்டங்கள், கொள்கைகளுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை நகரில் இன்று முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. போராட்டங்கள், உண்ணாவிரதம், மனிதசங்கிலி, பொதுக்கூட்டம் நடத்துவதற்கு சென்னை காவல் ஆணையர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும்...