அதிமுக முன்னாள் எம்.பி கைது!

கோவை (25 ஜன 2020): அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பழனிசாமி, அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தி வந்ததால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவைச் சேர்ந்த முட்டுகவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி புகாரின் பேரில் கே.சி.பழனிசாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 11 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைதான பழனிசாமி விசாரணை மேற்கொள்ள கே.சி.பழனிசாமி சூலூர் காவல் நிலையத்துக்கு கொண்டு…

மேலும்...

அராஜக செயலில் ஈடுபட்டவர்களுக்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்!

சென்னை (25 ஜன 2020): தந்தை பெரியார் சிலை உடைக்கப் பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கத்தில் தந்தை பெரியாரின் சிலையைக் கயவர்கள் சிலர் உடைத்துள்ளனர். இந்த சிலை உடைப்பு சம்பவத்தை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன். தந்தை பெரியார் தமிழகத்தில் சமூகநீதி தழைத்தோங்க அரும்பாடுபட்டவர். தமிழகத்தில் சமூகநீதி போராட்டத்தின் தலைவர் தந்தை பெரியார் தான். அவரின்…

மேலும்...

சென்னையிலும் ஷஹீன் பாக் – பெண்கள் முன்னெடுத்த போராட்டம்!

சென்னை (24 ஜன 2020): சென்னையில் டெல்லி ஷஹீன் பாக்கைப் போன்று பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக பெண்கள் கலந்துகொண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல்…

மேலும்...

ரஜினிக்கு எதிரான மனுவை வாபஸ் பெற்றது ஏன்?: திராவிடர் விடுதலைக் கழகம் விளக்கம்!

சென்னை (24 ஜன 2020): நடிகர் ரஜினி மீது நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெற்றது ஏன் என்று திராவிடர் விடுதலைக் கழகம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பெரியார் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அது பற்றி மன்னிப்பு கேட்க முடியாது என்று…

மேலும்...

மத்திய அரசிடம் போராடிக் கொண்டு இருக்கிறோம் – தமிழக அமைச்சர் பரபரப்பு தகவல்!

சென்னை (24 ஜன 2020): மாநிலங்களின் உரிமைகள் மத்திய அரசின் கைக்கு சென்று கொண்டிருப்பதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பாண்டியராஜன், “மாநில அரசுகளுக்கு இருக்கும் அதிகாரம் சிறுகச் சிறுக மத்திய அரசுக்குக் கீழ் செல்வதாகவே தெரிகிறது. இதற்கு ஒரு நல்ல உணாரணம். ஜி.எஸ்.டி வரிமுறை. ஜி.எஸ்.டி வந்ததில் இருந்து நமக்கு சுமார் 4,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதைப் பெற மத்திய அரசிடம் போராடிக் கொண்டிருக்கிறோம். ஜி.எஸ்.டி…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அதிரடி முடிவு: திமுகவின் அடுத்த மூவ்!

சென்னை (24 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்த திமுக முடிவு செய்துள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் மத அடிப்படையில் நாட்டை பிளவு படுத்துகிறது என கூறி, அந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பொதுமக்கள், எதிர் கட்சிகள், மாணவர்கள் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று…

மேலும்...

குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவருக்கு நீதிபதி வழங்கிய வேற லெவல் தண்டனை!

திருச்சி (24 ஜன 2020): திருச்சியில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவருக்கு நீதிபதி புதுவிதமான தண்டனை வழங்கி உத்தரவிட்டார். திருச்சி கே.கே நகரைச் சேர்ந்த பாலமுருகன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரர் மற்றும் நண்பர்கள் ஐந்து பேருடன் மதுபோதையில் வாகனத்தை ஓட்டினார். இவரை போக்குவரத்து போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் அபராதமும் விதித்தனர். 2018-ஆம் ஆண்டு பாலமுருகனுக்கு 17 வயது என்பதால் இளம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பயிற்சி வகுப்பில் பங்கேற்கவும் அறிவுறுத்தப்பட்டது….

மேலும்...

பெரியார் விவகாரம் – ரஜினிக்கு எதிரான மனு வாபஸ்!

சென்னை (24 ஜன 2020): பெரியார் குறித்து பேசிய நடிகர் ரஜனிகாந்த் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை திராவிடர் விடுதலைக் கழகம் வாபஸ் பெற்றுள்ளது. கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பெரியார் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அது பற்றி மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினி கூறியதால்,…

மேலும்...

காயல்பட்டினம் மக்கள் அடித்த ரிவீட்டு – அதிராம்பட்டினம் மக்களுக்கு ட்ரீட்டு!

அதிராம்பட்டினம் (24 ஜன 2020): காயல்பட்டினம் மக்கள் ஒட்டுமொத்தமாக வங்கிக் கணக்கை முடித்துக் கொள்வதாக அறிவித்த நிலையில் அதிராம்பட்டினம் தனியார் வங்கி வெளிநாடு வாழ் அதிரையர்களுக்கு விருந்து வைத்து உபரசிக்க அழைப்பு விடுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தலைமை அலுவலகம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாளிதழில் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த விளம்பரத்தில் பணம் எடுப்பதற்கோ, பணம் செலுத்துவதற்கோ, சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களாக…

மேலும்...

தமிழக பெண்களுக்கு தொடரும் அதிர்ச்சி – மருத்துவர்கள் கவலை!

சென்னை (24 ஜன 2020): தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 4 சதவீதம் அளவிற்கு மார்பக புற்றுநோய் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நிபுணர் டாக்டர் சாமிநாதன் இதுபற்றி கூறுகையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 4 சதவீதம் அளவிற்கு மார்பக புற்றுநோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. அடிக்கடி பரிசோதனை செய்து முன்கூட்டியே கண்டுபிடித்தால் பாதிப்புகளை குறைக்கலாம் என்று அவர் தெரிவித்தார். மேலும் நாட்டிலேயே அதிகமாக உத்தரபிரதேசத்தில் 24, 181 பேருக்கு மார்பக…

மேலும்...