தீபாவளி பட்டாசு – காவல்துறை எச்சரிக்கை!

சென்னை (20 அக் 2022): தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது குறித்து தமிழக போலீசார் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும்,125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பும் பட்டாசுகளை தயாரிக்கவோ, வெடிக்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர். பெட்ரோல் பங்க், எரிபொருள் கிடங்குகள், குடிசை பகுதிகளில் வாணவேடிக்கை நிகழ்த்தவும், பட்டாசுகளை கொளுத்தவும் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், மருத்துவமனை, பள்ளி, நீதிமன்றம் மற்றும்…

மேலும்...

ஜெயலலிதா மரண விவகாரத்தில் எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார் – சசிகலா!

சென்னை (19 அக் 2022): ஜெயலலிதா சிகிச்சையில் குளறுபடி செய்யப்படவில்லை, எந்த விசாரணையையும் சந்திக்க தயார் என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் இதற்கு சசிகலாவே முழு பொறுப்பு என்றும் ஆறுமுகசாமி கமிஷன் நேற்று அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வி.கே.சசிகலா ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கையை நிராகரித்தார். ஜெயலலிதாவின் சிகிச்சையில் தான் உட்பட 3 பேர் தலையிடவில்லை என்றும், எந்த விசாரணையையும் சந்திக்க தயார் என்றும்…

மேலும்...

வந்தார் ஓபிஎஸ் வராத ஈபிஎஸ்!

சென்னை (17 அக் 2022): சட்டபேரவை கூட்டத்தில் ஈபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏக்கள் ஒருவர் கூட பங்கேற்கவில்லை. அதே நேரம் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டுக்கான 2வது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முன்னதாக எதிர்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயக்குமாரை அங்கீகரித்து அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியும் கடிதம் கொடுத்திருந்தார். அதேபோல ஓபிஎஸ் தரப்பிலிருந்தும் கடிதம் கொடுக்கப்பட்டது. சபாநாயகர் என்ன முடிவெடுப்பார்…

மேலும்...

திசைமாறும் திருமாவளவன் – கலக்கத்தில் திமுக!

சென்னை (07 அக் 2022): தமிழக அரசியலில் சமீபத்தில் புயலை கிளப்பி வருபவர் விசிக தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்தாலும், திமுகவை விமர்சிக்கத் தொடங்கியுள்ளார். கடந்த 2 ஆம் தேதி நடைபெறவிருந்த ஆர் எஸ் எஸ் பேரணியை தடுத்து நிறுத்தியதில் திருமாவின் பங்கு மிக முக்கியமானது. எனினும் திருமா தலைமையில் நடைபெறவிருந்த சமூக நல்லிணக்க பேரணிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு அரசை விமர்சித்திருந்தார் திருமா. இந்நிலையில் அடுத்த மாதம் 6ம் தேதி தமிழகத்தில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு…

மேலும்...

ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட ஊர்வலங்களுக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு!

சென்னை (29 செப் 2022): தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்திருந்த ஊர்வலங்களை தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்க பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து வரும் அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அறிவித்திருந்தது. இந்நிலையில் பல்வேறு சட்டம் ஒழுங்கு காரணமாக ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்த்துள்ளது. மேலும் ஒன்றிய அரசால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்…

மேலும்...

பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீடுகளில் தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சு!

கோவை (25 செப் 2022): தமிழகத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில், நேற்று முன்தினம் பா.ஜ. க, ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களின் வீடு, வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி, தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு காரணமாக கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 4,000க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஈரோடு, திண்டுக்கல், ராமநாதபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், நேற்று இரண்டாவது நாளாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது. இதன்…

மேலும்...

உத்தர்காண்டில் வரலாறு காணாத நிலச்சரிவு – பக்தர்கள் அவதி!

டேராடூன் (24 செப் 2022): உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் வெள்ளியன்று மலையின் பெரும் பகுதியில் நிலைசரிவு ஏற்பட்டு, மண், பாறைத் துண்டுகள் மற்றும் தூசிகள் பரவும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து ஆதி கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு பக்தர்கள் பயன்படுத்தும் முக்கிய பாதை மூடப்பட்டது. வெள்ளிக்கிழமை மாலை நஜாங் தம்பா கிராமத்திற்கு அருகே நிலச்சரிவு ஏற்பட்டு தேசிய நெடுஞ்சாலையை மூடியதால் ஆதி கைலாஷ் யாத்ரீகர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் தவாகாட் அருகே சிக்கித்…

மேலும்...

பாப்புலர் பிரெண்ட் அலுவலகங்கள் மீது ரெய்டு – ஜவாஹிருல்லா கண்டனம்!

பாப்புலர் ப்ரெண்ட் இடங்களில் என் ஐ ஏ சோதனைக்கு கண்டனம் தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: இன்று நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் அமலாக்க துறை ஒன்றிய அரசின் காவல் படைகள் புடைசூழ நடத்திய சோதனைகளும் செய்துள்ள கைதுகளும் வன்மையான கண்டனத்திற்குரியவை. ஒன்றிய அரசின் சிறுபான்மை வெறுப்புணர்வின் பிரதிபலிப்பாகவே இந்த தீய நடவடிக்கைகள்…

மேலும்...

தமிழ் நாட்டிற்கு நன்றி – நாளுக்குநாள் ராகுல் காந்திக்கு பெருகும் ஆதரவு!

கன்னியாகுமரி (11 செப் 2022): காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற பெயரிலான இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் தனது நடைபயணத்தை ராகுல் காந்தி நிறைவு செய்தார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடை பயணத்தில் 56 கி.மீ தூரத்தைக் கடந்துள்ளார் ராகுல். குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் நடைபயணம் சென்ற ராகுல்காந்தி, இன்று கேரள எல்லையில் தனது பயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். கேரளா, செறுவாரகோணத்தில் இருந்து…

மேலும்...

இன்றுமுதல் அமலுக்கு வரும் மின்கட்டண உயர்வு!

சென்னை (10 செப் 2022): தமிழகத்தில் புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்தின் நிதிச்சுமையை சமாளிக்கும் வண்ணம் தற்போது இந்த கட்டணம் உயர்த்தப்படுவதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் 27.50 ரூபாய் என இரண்டு மாதங்களுக்கு ரூ 55 கூடுதலாக வசூலிக்கப்படும்.இரு மாதங்களுக்கு 300 யூனிட் வரை பயன்படுத்தினால் கூடுதலாக 145 ரூபாயும்,…

மேலும்...