கொரோனாவை தொடர்ந்து மிரட்டும் அடுத்த வைரஸ் ஹன்டா!

யூனான் (24 மார்ச் 2020): உலகையே கொரோனா மிரட்டிக் கொண்டிருக்க சீனாவில் ஹான்டா வைரஸுக்கு ஒருவர் பலியாகியுள்ளார். சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரொனா வைரஸ் தற்போது உலகின் 160க்கும் மேலான நாடுகளில் பரவி உள்ள மக்களை அசாத்தியமாக புரட்டி போட்டு வருகிறது. இதற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில் வைரஸிலிருந்து மக்களை கட்டுப்படுத்த உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் புதிதாக ஹன்டா வைரஸ் (HantaVirus) எனும் நோய் ஒன்று…

மேலும்...

கொரோனா பாதிப்பில் அசுர வேகத்தில் முன்னேறும் அமெரிக்கா!

நியூயார்க் (23 மார்ச் 2020): உலக அளவில் கொரோனா பாதிப்பில் இத்தாலிக்கு அடுத்தபடியாக அமெரிக்கா அதிக நோயாளிகளைக் கொண்ட நாடாக முன்னேறியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 32 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா பாதித்தவர்களில் சீனா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இத்தாலி உள்ளது. இத்தாலிக்கு அடுத்தபடியாக கரோனா பாதிப்பில் ஸ்பெயினைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அமெரிக்காவும், ஈரானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஜெர்மனியும் முன்னிலை வகிக்கின்றன. இதற்கிடையே உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு…

மேலும்...

கனடா பிரதமரின் மனைவி பெயரில் பரவும் போலி வீடியோ!

டொராண்டோ (23 மார்ச் 2020): கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகோயர், கொரோனா சிகிச்சை குறித்து பேசுவதாக போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவின் மனைவி யையும் விட்டு வைக்கவில்லை. பிரிட்டன் சென்று வந்த அவருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைபடுத்தப்பட்டு…

மேலும்...

கொரோனாவுக்கு 18 வயது வாலிபர் பலி!

பிரிட்டன் (23 மார்ச் 2020): பிரிட்டனில் கொரோனாவுக்கு 18 வயது வாலிபர் பலியாகியுள்ளார். எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கும் கரோனா வைரஸால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகளில் பெரும்பாலானவை திணறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பிரிட்டனில் கரோனா நோய்த் தொற்றால் 18 வயதுள்ள ஒருவர் உயிரிழந்தார். பிரிட்டனில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 281 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே மிகவும் குறைந்த வயதில் கரோனாவுக்குப் பலியானவர்…

மேலும்...

அரசின் உத்தரவை மீறும் மலேசிய மக்கள் – கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தொட்டது!

கோலாலம்பூர் (22 மார்ச் 2020): மலேசிய அரசின் பொது நடமாட்ட கட்டுப்பாடு நடவடிக்கைக்கு பொது மக்கள் சரிவர ஒத்துழைக்காத நிலையில் மலேசியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தொட்டுள்ளது. மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,030ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆகவும் அதிகரித்துள்ளது. பொது நடமாட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்ட போதும், மலேசியர்கள் பலர் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கவில்லை. பொதுமக்கள் பலர் அரசாங்கத்தின் அறிவுறுத்தலை…

மேலும்...

கொரோனா வைரஸால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மரணம்!

வாஷிங்டன் (22 மார்ச் 2020): அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அதி வேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. நாளுக்கு நாள் இதனால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த குடும்பத்தினரின் உறவினர்கள் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூ…

மேலும்...

உலக அளவில் கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது!

ரோம் (20 மார்ச் 2020): கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை உலக அளவில் 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் சீனாவில் உருவாகி உலகத்தின் பல நாடுகளை தாக்கி, உயிர்களை காவு வாங்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை190 ஐ எட்டியுள்ளது.. சீனா, தென்கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உலகம் முழுவதும் உள்ள அந்தந்த…

மேலும்...

ஜப்பான் தயாரிப்பு மருந்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதாக சீனா தகவல்!

பீஜிங் (18 மார்ச் 2020): ஜப்பானின் கண்டுபிடிப்பான புளூ (flu) மருந்து கொரோனாவை கட்டுப்படுத்த உதவுவதாக சீனா தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள்… நொடிக்கு நொடி… பீதியை ஏற்படுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பல்வேறு நாடுகள் இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்து முதல் நிவாரணம் பெறும் மருந்து வரை ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஜப்பான் கண்டுபிடிப்பு மருந்தான flu drug favipiravir (also known as Avigan) என்ற மருந்து…

மேலும்...

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி!

சியாட்டில் (17 மார்ச் 2020): அமெரிக்காவிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி முயற்சியில் தாங்கள் கண்டுபிடித்துள்ள மருந்தை பரிசோதனை முயற்சியாக ஒருவருக்குத் தடுப்பூசியாகச் செலத்தியுள்ளனர். இது இந்த நோய் பரவுவதிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் வேட்டையைத் துவக்கி வைத்துள்ளது. சியாட்டில் நகரிலிலுள்ள கைசர் பெர்மனென்ட் வாஷிங்டன் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Kaiser Permanente Washington Research Institute) விஞ்ஞானிகள், வெகு குறைந்த நேரத்தில் உருவாக்கியுள்ள COVID-19 தடுப்பூசியை திங்களன்று தன்னார்வலர் ஒருவரின் கையில் கவனமாகச் செலுத்தி தங்களது முதல் கட்ட…

மேலும்...

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து சோதனை – திங்கள் முதல் தொடக்கம்!

வாஷிங்டன் (16 மார்ச் 2020): கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து சோதனை அமெரிக்காவில் திங்கள் முதல் தொடங்கியது. உலகை ஆட்டுவித்து வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அமெரிக்காவும், சீனாவும் தடுப்பு ஊசி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் ஆரம்ப நிலை தடுப்பு ஊசி மருந்து கண்டறியப்பட்டு முதல் தடுப்பு ஊசி மருந்து சோதனை திங்கள்கிழமை அமெரிக்காவில் பரிசோதிக்கப்படும் என்ற தகவலை அசோசியேட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை அமெரிக்க அதிகாரிகள்…

மேலும்...