கொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயின் இளவரசி மரணம்!

ஸ்பெயின் (29 மார்ச் 2020): கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழந்துள்ளார். கரோனா வைரஸின் (கொவைட்-19) தோற்றுவாயான சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹானில் இருந்து பரவத்தொடங்கி அந்த வைரஸ், உலகம் முழுவதும் 199-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்குள்ளாவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து அச்சத்தை அதிகப்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் 25 பேர் கரோனா வைரஸ்…

மேலும்...

ஐந்து நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் கருவி – அமெரிக்கா வெளியீடு!

வாஷிங்டன் (28 மார்ச் 2020): கொரோனா வைரஸ் உள்ளதா என்பதை ஐந்து நிமிடத்தில் கண்டறியும் கருவியை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆய்வகம் இந்த சோதனைக் கருவியை கண்டறிந்துள்ளது. இக்கருவி மூலம் 5 நிமிடங்களில் கொரோனா வைரஸ் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து விரைவு சோதனை மூலம் கண்டறியப்படும். அபாட் லேபாரட்டரீஸ் உருவாக்கிய இந்த விரைவு சோதனை கருவியை பயன்படுத்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து துறை ஒப்புதல் அளித்துள்ளது. வைரஸ் இருந்தால் 5 நிமிடங்களிலும்…

மேலும்...

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா பாதிப்பு இல்லை – பாகிஸ்தான் அரசு விளக்கம்!

இஸ்லாமாபாத் (28 மார்ச் 2020): பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. உலகை புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் காட்டிலும் அதுகுறித்த வதந்திகள் மிக வேகமாக பரவி வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒரு வதந்தி பரவியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், “இம்ரான் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல்…

மேலும்...

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

லண்டன் (27 மார்ச் 2020): பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகை புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ் தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை. பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகவலை பிரிட்டன் பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது. மேலும் பிரிட்டனின் சுகாதாரத்துறை செயலாளர் மேட் ஹான்காகும் கொரோனா…

மேலும்...

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு!

வாஷிங்டன் (27 மார்ச் 2020): அமெரிக்காவில் கொரோனா வைரஸால் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகில் அதிக அளவில் பரவி வரும் தொற்று நோயான கொரோனா வைரஸ், சீனாவுக்கும் இத்தாலிக்கும் அடுத்தபடியாக அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை அங்கு 69 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும் உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 250 போ் உயிரிழந்தனா். அதையடுத்து, அந்த வைரஸுக்கு அமெரிக்காவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை…

மேலும்...

கொரோனா: கட்டுப்படுத்த முடியாத நிலையில் இத்தாலி – கதறும் மக்கள்!

ரோம் (27 மார்ச் 2020): கொரோனாவின் கோரப் பசிக்கு இத்தாலியில் இதுவரை 8515 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்று வெகு தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இத்தாலி, இந்த கொரோனாவிற்கு அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8215 ஆக அதிகரித்துள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இத்தாலியில் உயிரிழந்தவர்களில் 31 மருத்துவர்களும் 67 பாதிரியார்களும் அடங்கும்.

மேலும்...

ஸ்பெயினில் ஒரே நாளில் பலரை பலி வாங்கிய கொரோனா – துணை பிரதமரையும் தாக்கியது!

ஸ்பெயின் (26 மார்ச் 2020): ஸ்பெயினில் கொரோனா வைரஸுக்கு ஒரே நாளில் 656 பேர் பலியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று வெகு தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதில், ஸ்பெயினில் இன்று ஒரே நாளில் 656 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஸ்பெயினில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3647 ஆக உயர்ந்துள்ளது. இது சீனாவைக் காட்டிலும் அதிகமாகும். அதுமட்டுமல்லாமல் ஸ்பெயின் துணை…

மேலும்...

கொரோனா வைரஸ் : ஸ்பெயினில் ஒரே நாளில் 443 பேர் உயிரிழப்பு!

ஸ்பெயின் (25 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயினில் ஒரே நாளில் 443 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்று வெகு தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதில், ஸ்பெயினில் இன்று ஒரே நாளில் 443 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரே நாளில் 5,552 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயின் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,434 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலமாக…

மேலும்...

பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

லண்டன் (25 மார்ச் 2020): பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் நிலையில் 71 வயதான பிரிட்டன் இளவரசர் சார்லஸும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்...

கொரோனாவுக்கு ஒரே நாளில் 2000 பேர் உயிரிழப்பு!

பெய்ஜிங் (25 மார்ச் 2020): உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு ஒரே நாளில் 2000 பேர் பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் பல உலக நாடுகளிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அந்த பதற்றம் இந்திய மக்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. இதனால் அடுத்த 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு செயல்படுத்தப்படுவதாக நேற்றிரவு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த 21 நாட்களில் மளிகை, காய்கறி, பால், இரைச்சி போன்ற அத்தியாவசிய கடைகள்…

மேலும்...