இந்தியாவிற்கு வரும் மாடர்னா கொரோனா தடுப்பூசி!

புதுடெல்லி (29 ஜூன் 2021): இந்தியவிற்கு மாடர்னா கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் உள்ள சிப்லா மருந்து நிறுவனத்திற்கு மாடர்னா கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்ய உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...

பரவும் டெல்டா பிளஸ் – தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

புதுடெல்லி (27 ஜூன் 2021): இந்தியாவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ‘டெல்டா பிளஸ்’ கொரோனா வைரஸ், புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த புதிய வகை வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்டா பிளஸ் பாதிப்புகளைக் கண்டறியத் தேவையான மாதிரிகளை ஆய்வகங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் ஒன்றிய அரசு…

மேலும்...

ஜூலை 6 வரை துபாய்க்கு விமான சேவை இல்லை – ஏர் இந்தியா அறிவிப்பு!

புதுடெல்லி (24 ஜூன் 2021): வரும் ஜூலை 6 ஆம் தேதி வரை துபாய்க்கான விமான சேவை தொடங்கப்படாது என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விமான சேவைகள் நேற்று மீண்டும் தொடங்கவிருந்த நிலையில், . பயண ஏற்பாடுகள் தொடர்பான தெளிவின்மை நீங்காததால் துபாய்க்கான எந்த விமான சேவையும் தொடங்கவில்லை. இந்நிலையில், ஜூலை 6 வரை துபாய்க்கு எந்த சேவையும் இருக்காது என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இரண்டு டோஸ்…

மேலும்...

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கோவிட் மரணத்தை தவிர்க்கலாம்!

புதுடெல்லி (23 ஜூன் 2021): கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ் போட்டுக்கொண்டவர்கள் 95 சதவீதமும் கோவிட் இறப்புகளை தவிர்க்கலாம் என்று ஐசிஎம்ஆர்) வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின்படி முதல் டோஸ் 82 சதவீதமும், இரண்டாவது டோஸ் 95 சதவீதமும் கோவிட் உயிரிழப்புகளை தடுப்பதில் பயனுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரியவந்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (என்ஐஇ) இணைந்து, ‛தமிழகத்தில் அதிக ஆபத்துள்ள குழுக்களிடையே…

மேலும்...

இந்தியாவிலிருந்து துபாய்க்கு விமான டிக்கெட் முன்பதிவு திடீர் நிறுத்தம்!

புதுடெல்லி (23 ஜூன் 2021): பயணத் தடை தொடர்பான தெளிவான அறிப்பு இல்லாததால், விமான நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கான முன்பதிவுகளை நிறுத்தி வைத்துள்ளன. தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் முழுமையாகப் பெறுவதுடன், பயணம் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு கோவிட் டெஸ்ட் நெகட்டிவ் ஆன சான்றிதழை வழங்க வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் இன்று முதல் துபாய் செல்ல அனுமதி வழங்கப் பட்டிருந்தது. ஆனால் விமான சேவை இன்று தொடங்கப்படுமா என்பது குறித்து எந்த பெரிய…

மேலும்...

சிஏஏ மற்றும் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் – ஸ்டாலின் அதிரடி!

சென்னை (22 ஜூன் 2021): 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த அவர், ஒன்றிய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் ஜூலையில் நடக்கும் பட்ஜெட் தொடரில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும். என்று தெரிவித்தார். மேலும் ஆளுநர் உரை யாற்றிய கூட்டத்தொடரில் தீர்மானங்கள் கொண்டு வரப்படவில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

மேலும்...

யோகா கண்டுபிடிக்கப்பட்டபோது, இந்தியாவே இல்லை – நேபாள பிரதமர் பரபரப்பு கருத்து!

காத்மண்டு (22 ஜூன் 2021): கா கண்டுபிடிக்கப்பட்டபோது, இந்தியா உருவாக்கப்படவில்லை. என்றும் நேபாளில் தான் யோகா கண்டுபிடிக்கப்பட்டது என்று நேபாள நாட்டின் பிரதமர் கே.பி. சர்மா ஓலி. பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். நேற்று (21.06.2021) சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சிறப்புரையாற்றிய கே.பி. சர்மா ஓலி, யோகாவையும் தங்கள் நாட்டுக்குச் சொந்தமானது என கூறியுள்ளார். இதுதொடர்பாக கூறிய அவர், , “இந்தியா ஒரு தேசமாக உருவாவதற்கு முன்பே, நேபாளத்தில் யோகா பயிற்சி செய்யப்பட்டது. யோகா கண்டுபிடிக்கப்பட்டபோது,…

மேலும்...

இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் வர அனுமதி!

துபாய் (21 ஜூன் 2021): இந்தியாவில் கோவிஷீல்ட் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவலை அடுத்து அங்கிருந்து இந்தியர்களுக்கு பயணம் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் ஜூன் 23 ஆம்தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவிற்கான பயணத்தடையை நீக்குகிறது. அதேவேளை ஐக்கிய அரபு அமீரகம் அங்கிகரித்துள்ள தடுப்பூசி இரண்டு டோஸ் பெற்றிருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி துபாயில்…

மேலும்...

இந்தியாவில் அடுத்த 6 முதல் 8 வாரங்களில் கோவிட் 19 மூன்றாவது அலை!

புதுடெல்லி (19 ஜூன் 2021): கோவிட் 19, 3வது அலை அடுத்த 6 முதல் 8 வாரங்களில் அது துவங்க வாய்ப்பு உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கோவிட் 19 இரண்டாவது அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் 3வது அலை தவிர்க்க முடியாதது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், கோவிட் பரவலில் கடந்த முதல்…

மேலும்...

பயாலாஜிக்கல் – இ கோவிட் தடுப்பூசி 90 சதவீத பாதுகாப்பு!

புதுடில்லி (17 ஜூன் 2021): : இந்தியாவில் தற்போது மருத்துவ பரிசோதனையில் உள்ள பயாலிஜிக்கல் – இ நிறுவனத்தின் தடுப்பூசி, கோவிட்டிற்கு எதிராக 90 சதவீதம் திறனுடையது எனவும், இந்த தொற்றை பரவலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என, மத்திய அரசின் ஆலோசனை குழு டாக்டர் தெரிவித்து உள்ளார். 90 சதவீத திறன் பெற்ற இந்த மருந்து தற்போது 3வது கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது என்றும் வரும் அக்டோபர் மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும் என்றும்…

மேலும்...