
கொரோனா மீண்டும் பரவல் – இரண்டு நாள் முழு ஊரடங்கு!
திருவனந்தபுரம் (10 ஜூலை 2021): கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் இன்றும் (ஜூலை10), நாளையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் வார இறுதி நாட்களான இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கேரளாவில் கெரோனா உறுதி செய்யப்படும் நபர்களின் விகிதம் 10 சதவீதத்திற்கு மேல் உள்ளது. இதனால், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்தது. முழு ஊரடங்கையொட்டி அரசு, தனியார்…