கொரோனா நோயாளி பெண்ணை வன்புணர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் – அதிர வைக்கும் சம்பவம்!

பத்தினம்தட்டா (07 செப் 2020): கேரளாவில் கொரோனா பாதித்த இளம் பெண்ணை ஆம்புலன்ஸ் டிரைவர் வன்புணர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், அவரது 19 வயது மகளுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அந்த இளம்பெண்ணை சிகிச்சை அளிக்கப்பட்ட மருத்துவமனையிலிருந்து கொரோனா சிகிச்சை மையத்திற்கு கடந்த சனிக்கிழமை கொண்டு செல்லப்பட்டார்.. அப்போது அரன்முழா பகுதியில் வாகனத்தை நிறுத்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணை ஆம்புலன்ஸ் டிரைவர்…

மேலும்...

எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஐ.சி.யூவில் கொண்டாட்டம்!

சென்னை (07 செப் 2020): பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் அவரது மனைவியுடன் ஐ.சி.யூ.வில் திருமண நாளை கொண்டாடியுள்ளார். எஸ்பிபி கொரோனா பாதிப்பால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர் காக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ,உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று எஸ்.பி.பி. – சாவித்ரி தம்பதியின் 51வது திருமண நாள் என்பதால், எஸ்.பி.பி.யை பார்க்க மருத்துவமனைக்கு வந்த அவரது மனைவி சாவித்ரி, தங்களது திருமண நாளை கேக்…

மேலும்...

அமெரிக்காவை விஞ்சிவிடும் நிலையில் இந்தியா!

புதுடெல்லி (06 செப் 2020): கொரோனா பாதிப்பில் இந்தியா உலக அளவில் இரண்டாமிடத்தில் உள்ள நிலையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவை தொட்டுவிடும் நிலையில் இந்தியா உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் உள்ள கொரோனா நிலவரம் குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரே நாளில் 90,600 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது உலகளவில் கொரோனாவால் சுமார் 2 கோடியே 70 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்…

மேலும்...

கொரோனா பாதிப்பில் உலக அளவில் இரண்டாமிடம் பிடித்த இந்தியா!

புதுடெல்லி (06 செப் 2020): கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா இரண்டாமிடம் பிடித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 90,600 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எண்ணிக்கை 41,10,839 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இந்தியாவில் கொரோனா மரணங்கள் 70 ஆயிரத்தை கடந்துள்ளது.. ஒரே நாளில் 923 பேர் கொரோனாவுக்கு…

மேலும்...

இந்தியாவில் ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பா? – அதிர்ச்சித் தகவல்!

புதுடெல்லி (06 செப் 2020): கொரோனா பாதிப்பு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளன. இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவில் உச்சம் தொட்டுள்ளது. ஒரே நாளில் 90,600 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த நாட்டிலும் ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியதில்லை. இதன்மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எண்ணிக்கை 41,10,839 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இந்தியாவில் கொரோனா மரணங்கள் 70 ஆயிரத்தை கடந்துள்ளது.. ஒரே நாளில் 923 பேர் கொரோனாவுக்கு…

மேலும்...

25 நாடுகளுக்கான விமான சேவையை மீண்டும் துவங்கும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்!

ரியாத் (03 செப் 2020) சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் மூலம் தனது விமானங்களில் வெளிநாடுகளிலிருந்து திரும்பும் பயணிகளுக்கு ஏழு நிபந்தனைகளை விதித்துள்ளது, 25 நாடுகளிலிருந்து சவூதி திரும்புபவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சவூதி சுகாதார அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறு சவூதி அரேபியன் விமான நிறுவனம் பயணிகளுக்கு உத்தரவு பிறப்பித்ட்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், ஓமான், பஹ்ரைன், எகிப்து, லெபனான், மொராக்கோ, துனிசியா, சீனா, யுனைடெட் கிங்டம், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ்,…

மேலும்...

கொரோனா பாதிப்பால் 8.67 லட்சம் பேர் பலி!

ஜெனீவா (03 செப் 2020): உலக அளவில் கொரோனா பாதிப்பால் இதுவரை 8.67 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில்,…

மேலும்...

முன்னாள் முதல்வரின் உடல் நிலை கவலைக்கிடம்!

கவுஹாத்தி (01 செப் 2020): கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அசாம் மாநில முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான தருண் கோகாய்(85) உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பாதிக்கப்பட்ட தருண் கோகாய் கவுஹாத்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்றிரவு திடீரென அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலைக்கு சென்றது. இதனால் தருண் கோகாய்-க்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை மருத்துவர்கள் செய்து வருகின்றனர். இந்த தகவலை…

மேலும்...

எப்படி இருக்கிறார் S.P.B.? – மருத்துவமனை அறிக்கை!

சென்னை (01 செப் 2020): பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. பிரபல பாடகர் எஸ்.பி.பியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எஸ்.பி.பி-யின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதனை தொடர்ந்து எஸ்.பி.பி குறித்து பல வதந்திகள் வெளியாகின. இதனால் அவ்வப்போது அவரது மகன் வீடியோவின் மூலம் மக்களுக்கு எஸ்.பி.பி உடல்நிலை குறித்து…

மேலும்...

ராமகோபாலனும், இல கணேசனும் விரைவில் நலம்பெற வேண்டும் – கி.வீரமணி!

சென்னை (31 ஆக 2020): உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் ராம கோபாலனும், இல கணேசனும் விரைவில் நலபெற்று வீடு திரும்ப வேண்டும் என்று தி.க.தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டு பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நண்பர் இல.கணேசன் அவர்கள், கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் உள்ளார் என்ற செய்தி கேட்டு வருத்தம் அடைகிறோம். அவர் விரைவில் நலமடைந்து மீண்டும் பொதுப் பணியைத் தொடரவேண்டும் என்ற நம்…

மேலும்...