தாஜ்மஹாலில் தொழுகை – வைரலாகும் வீடியோ – உண்மை தன்மையை ஆராய உத்தரவு!

ஆக்ரா(22 நவ 2022): : தாஜ்மஹால் வளாகத்திற்குள் உள்ளதாக கூறப்படும் தோட்டப் பகுதியில் ஒரு பெண் தன்னுடன் அமர்ந்து ஆண் ஒருவர் ‘தொழுகை’ செய்வதாகக் கூறப்படும் வைரலான வீடியோவின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தொல்லியல் துறையின் ஆக்ரா வட்டத்தின் கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் குமார் படேல் கூறுகையில், “தாஜ்மஹால் வளாகம் என்று கூறப்படும் பகுதியில் ஒரு நபர் தொழுகை நடத்துவதைக் காணும் ஒரு வீடியோ வைரலாவதை…

மேலும்...

ரெயிலில் தொழுகை நடத்தியவர்கள் மீது பாஜக தலைவர் புகார் – வீடியோ!

லக்னோ (22 அக் 2022): ரயிலில் தொழுகை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்திர பிரதேச பாஜக தலைவர் ரெயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். ரயிலில் நான்கு பேர் தொழுகை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை உத்தரபிரதேச முன்னாள் எம்எல்ஏ தீப்லால் பார்தி படம் பிடித்துள்ளார். கடா ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது நான்கு பேர் தொழுகை செய்துகொண்டு இருந்ததாகவும் மற்ற பயணிகள் செல்ல இடையூறாக வழியை…

மேலும்...

தொழுகைக்கு சென்றவர்கள் மீது கும்பல் தாக்குதல்!

குருகிராம் (13 அக் 2022): அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள போரா கலான் பகுதியில் உள்ள மசூதிக்கு புதன்கிழமை மாலை தொழுகைக்கு வந்தவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஒரு கும்பல் மசூதியையும் சேதப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்த சுபேதார் நாசர் முஹம்மது, போரா கலான் பகுதியில் நான்கு முஸ்லிம் குடும்பங்கள் மட்டுமே வசித்து வருவதாக தெரிவித்தார். புதன்கிழமை அவர்கள் மசூதிக்கு தொழுகைக்காக வந்தபோது, ​​சிலர் மசூதிக்குள் புகுந்து தாக்கினர். இனி இங்கு தங்கக்கூடாது…

மேலும்...

லூலூ மாலில் தொழுகை நடத்தியது முஸ்லிம்கள் அல்ல – அதிர்ச்சித்தகவல்

லக்னோ (18 ஜூலை 2022): உத்திர பிரதேசம் லூலூ மாலில் தொழுகை நடந்ததாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அங்கு தொழுகை நடத்தியவர்கள் முஸ்லிம்களாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரியவந்துள்ளது. லூலூ வணிக வளாகத்தின் மீது அவதூறு பரப்புவதற்கும் சமூகங்களுக்கிடையில் பகைமை மற்றும் வெறுப்பை ஏற்படுத்துவதற்கும் வேண்டுமென்றே சிலர் செய்த செயல் என்று தெரியவந்துள்ளது. லூலூ மாலின் சிசிடிவி காட்சிகளில் எட்டு ஆண்கள் ஒன்றாக மாலுக்குள் நுழைவதைக் காட்டுகிறது. அவர்களில் யாரும் மாலைச்…

மேலும்...

பாங்கு நேரத்தில் கோவில்களில் இந்து பிரார்த்தனைகளை ஒளிபரப்ப இந்து அமைப்புகள் திட்டம்!

பெங்களூரு (04 ஏப் 2022): கர்நாடகாவில் தொழுகைக்கு அழைக்கும் (பாங்கு) நேரத்தில் இந்து பிரார்த்தனைகளை ஒளிபரப்ப இந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. ஹிஜாப் தடை, ஹலால் இறைச்சி விவகாரம் என கர்நாடகாவில் முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், புனித ரம்ஜான் நோன்பு தொடங்கியுள்ள சூழலில் மசூதிகளில் பாங்கு அழைக்கும் நேரங்களில் “ஓம் நம சிவா”, “ஜெய் ஸ்ரீராம்” கோஷங்கள் மற்றும் பிற பக்தி பிரார்த்தனைகளை ஒளிபரப்ப இந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. பெங்களூரில் உள்ள ஆஞ்சநேயா கோவிலில் பாங்கு…

மேலும்...

பொது இடங்களில் தொழுகை நடத்துவதற்கு இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு!

குருகிராம் (28 மார்ச் 2022): அரியானா மாநிலம் குருகிராமில் பொது இடங்களில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து சன்யுக்த் ஹிந்து சங்கர்ஷ் சமிதி என்ற இந்துத்துவ அமைப்பு குருகிராமில் உள்ள மில்லினியம் சிட்டி முழுவதும் பொது இடங்களில் தொழுகை நடத்துவதை உடனடியாகத் தடை செய்யாவிட்டால், மாநிலம் முழுவதும் மாபெரும் போராட்டத்தை நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. அதன் தலைவர் மகாவீர் பரத்வாஜ் தலைமையிலான 5 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு,…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் பக்ரீத் பெருநாள் தொழுகை நேரங்கள் பட்டியல்!

துபாய் (18 ஜூலை 2021): வளைகுடா நாடுகளில் பக்ரீத் பெருநாள் வரும் ஜூலை 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஜூலை 20 ஆம் தேதி பக்ரீத் பெருநாள் தொழுகை எந்தெந்த பகுதிகளில் எப்போது நடைபெறும் என்பது குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முழு பட்டியல் : –அபுதாபி: காலை 6.02 -அல் ஐன்: காலை 5.56 -மதினத் சயீத்: காலை 6.07 -துபாய்: காலை 5.57 -ஷார்ஜா: காலை 5.54 –…

மேலும்...

மயிலாடுதுறை அருகே மசூதியில் பெருநாள் தொழுகை நடந்ததால் பரபரப்பு!

மயிலாடுதுறை (25 மே 2020): மயிலாடுதுறை அருகே மசூதியில் பெருநாள் தொழுகை நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகமெங்கும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப் பட்டு வருகிறது. 30. நாட்கள் நோன்பிருந்த முஸ்லிம்கள் இன்று ரம்ஜான் பண்டிகையை வீட்டில் இருந்தபடி கொண்டாடி வருகின்றனர். மேலும் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டிருப்பதால் பெருநாள் தொழுகை வீட்டிலேயே தொழுதுகொண்டனர். இந்நிலையில் மயிலாடுதுறாஇ அருகே வடகரை மசூதியில் 75க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி பெருநாள் தொழுகைநடத்தியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதனை தடுக்காத…

மேலும்...

முஸ்லிம்களின் தொழுகைக்காக திறக்கப்பட்ட தேவாலயம் – கொரோனாவால் நிகழ்ந்த அதிசயம்

பெர்லின் (24 மே 2020): ஜெர்மனியில் சமூக விலகலுடன் தொழுகை நடத்த அரசு அனுமதித்துள்ள நிலையில் கிறிஸ்தவ தேவாலயத்திலும் முஸ்லிம்கள் தொழுகை நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் பெரும்பாலான நாடுகளில் தேவாலயங்கள், மசூதிகள், கோவில்கள் என அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜெர்மனியில் சமூக விலகல் விதிமுறைகளின்படி தேவாலயங்கள், மசூதிகளை திறந்து வழிபாடு நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது இப்படியிருக்க ஜெர்மனியின் பெர்லின் நியோகோலின் மாவட்டத்தில் உள்ள தார் அல்…

மேலும்...

அமெரிக்க நகரங்களில் ஒலிக்கும் தொழுகைக்கான அழைப்பு (பாங்கு)

வாஷிங்டன் (26 ஏப் 2020): அமெரிக்காவில் தொழுகைக்கான அழைப்பு (பாங்கு) பல இடங்களில் ஒலிக்கிறது. அமெரிக்காவில் ஒலிப்பெருக்கி மூலம் பாங்கு சொல்ல பல இடங்களில் கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் இவ்வருட புனித ரமலான் மாதத்திற்காக அக் கட்டுப்பாடுகள் நீக்கப் பட்டுள்ளன. அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் நகரின் மேயர் ஜேக்கப் பிரே, நகரின் அனைத்து பகுதிகளிலும் ரமலான் மாதத்தின் அனைத்து தினங்களிலும் ஐந்து வேளைக்கும் ஒலிப் பெருக்கி மூலம் பாங்கு அழைப்புக்கு அனுமதி அளித்துள்ளார். அமெரிக்கா கொரோனாவால் அதிக…

மேலும்...