குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ போர்க்கொடி!

போபால் (28 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மத்திய பிரதேச பாஜக எம்.எல்.ஏ நாராயன் திருப்பதி போர்க்கொடி உயர்த்தியுள்ளார். நாடு முழுவதும் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக(சிஏஏ), தேசிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மத்திய பிரதேச பாஜக எம்.எல்.ஏ நாராயன் திருப்பதி குடியுரிமை சட்டம் நம் நாட்டு இறையாண்மைக்கு எதிரானது என தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவை மதத்தால் பிரிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். “நான் கிராமத்திலிருந்து வந்தவன். அங்கு ஒரு…

மேலும்...

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தமிழக பாஜக!

சென்னை (28 ஜன 2020): தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் ஏதாவது பதிந்துவிட்டு பின்பு நீக்கம் செய்வது வாடிக்கை. அந்த வகையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா குறித்த ஒரு பதிவை பதிந்துவிட்டு தற்போது நீக்கம் செய்துள்ளது. காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்தவருமான ஓமர் அப்துல்லாவின் கடந்த ஐந்து மாதங்களாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவரது தாடியுடன் கூடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இதனை கிண்டல் செய்யும்…

மேலும்...

பாஜகவின் மதவெறிக்கு எதிராக ஸ்டாலின் கடிதம்!

சென்னை (28 ஜன 2020): குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்தில், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இல்லத்திலும் கையெழுத்துப் பதிவாகிட வேண்டும் என தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு தனக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்கிற அதிகார ஆணவத்தினால் இந்திய ஒன்றியத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் உடைக்கும் வகையில் மொழி-பண்பாடு-இனம்-மதம் எனப் பல தளங்களிலும்…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் கொந்தளிப்பு!

புதுடெல்லி (28 ஜன 2020): குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பா.ஜ.க. முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு யஷ்வந்த் சின்ஹா, தனது ஆதரவாளர்களுடன் யாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த 9-ம் தேதி, மும்பையில் பயணத்தை தொடங்கிய அவர், ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களைத் தொடர்ந்து, தற்போது உத்தரபிரதேசத்தை வந்தடைந்துள்ளார். . இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில், அம்மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. அகிலேஷ் யாதவுடன், நிகழ்ச்சியில் பங்கேற்ற திரு. யஷ்வந்த் சின்ஹா, குடியுரிமை…

மேலும்...

திருச்சி பாஜக நிர்வாகி கொலையின் பின்னணியில் மதம் காரணமல்ல – காவல்துறை!

திருச்சி (27 ஜன 2020): திருச்சி பாஜக நிர்வாகி விஜயரகு படுகொலையின் பின்னணியில் மத பிரச்சனை காரணம் அல்ல என்று மத்திய மண்டல ஐ.ஜி.அமல்ராஜ் தெரிவித்துள்ளார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் பாலக்கரை பகுதி பாஜக மண்டலச் செயலாளராக இருந்தவர் விஜய ரகு. இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் பணியை செய்து வந்தார். இந்நிலையில் (27-ம் தேதி) காந்தி மார்க்கெட் வாசலில் ஒரு கும்பல் விஜய ரகுவை வெட்டிக் கொலை செய்தது. அக்கம்பக்கத்தினர் சுதாரிப்பதற்குள்…

மேலும்...

பாஜக அரசு தேசவிரோத செயலில் ஈடுபடுகிறது – பாஜக மூத்த தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு!

புதுடெல்லி (27 ஜன 2020): ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்வது முழுக்க முழுக்க தேசவிரோதமானது என்று பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 100 % பங்குகளையும், விற்பனை செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பங்குகளை வாங்குவதற்கான விருப்பத்தை தெரிவிக்க, தனியார் நிறுவனங்களுக்கு வரும் மார்ச் மாதம் 17ஆம் தேதியைக் கெடுவாக அறிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு கடனில் சிக்கித்…

மேலும்...

பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை -திருச்சியில் பரபரப்பு!

திருச்சி (27 ஜன 2020): திருச்சியில் பாஜக நிர்வாகி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டம் பாலக்கரை பகுதி பாஜக மண்டலச் செயலாளராக இருந்தவர் விஜய ரகு. இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் பணியை செய்து வந்தார். இந்நிலையில் இன்று (27-ம் தேதி) காந்தி மார்க்கெட் வாசலில் ஒரு கும்பல் விஜய ரகுவை வெட்டிக் கொலை செய்தது. அக்கம்பக்கத்தினர் சுதாரிப்பதற்குள் அந்தக் கும்பல் தப்பிவிட்டது. அவரது…

மேலும்...

13 வருடங்கள் என்ன செய்தீர்கள்? – ஸ்டாலினுக்கு எடப்பாடிகேள்வி!

சென்னை (26 ஜன 2020): 13 வருடங்கள் மத்தியில் இருந்து தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்? என்று ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். மொழிப் போர் தியாகிகளுக்கான நினைவுப் பொதுக்கூட்டம் சென்னையில் அதிமுக சார்பாக நடைபெற்றது. இதில் தமிழக முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது- அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு பாஜகவின் அடிமை அரசு என்று செல்லும் இடமெல்லாம் ஸ்டாலின் சொல்லி வருகிறார். அப்படியல்ல….

மேலும்...

குஜராத்தில் பாஜக மாணவர் அணி (ஏபிவிபி) படுதோல்வி!

அஹமதாபாத் (26 ஜன 2020) குஜராத் மத்திய பல்கலைக் கழக தேர்தலில் போட்டியில்ட்ட அனைத்து ஏபிவிபி மாணவர்களும் படுதோல்வி அடைந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில மத்திய பல்கலைக் கழக மாணவர்களுக்கான தேர்தல் நடைபெற்று நேற்று முடிவுகள் அறிவிக்கப் பட்டன. இதில் போட்டியிட்ட பாஜகவின் மாணவர் அணியான ஏபிவிபி படுதோல்வி அடைந்துள்ளது. போட்டியிட்ட ஐந்து மாணவர்களும் தோல்வியை தழுவியுள்ளனர். இவர்களை எதிர்த்து போட்டியிட்ட பிஸ்ரா அம்பேத்கர் புஹ்லே மானவர்கள் அணி, மற்றும் ஃபெடரேஷன்…

மேலும்...

பாஜக மீது விசாரணை – உத்தவ் தாக்கரே உத்தரவு!

மும்பை (24 ஜன 2020): முந்தைய பாஜக ஆட்சியில் பல தலைவர்களின் போன் பேச்சுக்கள் ஓட்டுக் கேட்கப் பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். முந்தைய பாஜக ஆட்சியில் நான் உட்பட பல தலைவர்களின் போன் பேச்சுக்கள் ஓட்டுக் கேட்கப் பட்ட டுள்ளது என்று , சிவசேனா மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் தெரிவித்தார். இது மகாராஷ்டிர அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “மஹாராஷ்டிராவில், கடந்த,…

மேலும்...