
பிரபல பின்னணி பாடகி கனிகா கபூருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – பீதியில் 96 எம்பிக்கள்
புதுடெல்லி (20 மார்ச் 2020): பிரபல இந்தி பின்னணி பாடகி கனிகா கபூருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதை அடுத்து இந்தி திரையுலகத்தினர் மட்டுமின்றி எம்.பிக்கள் எம்.எல்.ஏக்களும் பீதியடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் பிரபல இந்தி பிண்ணனி பாடகி கனிகா கபூருக்கும் கொரோனா பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது….