சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் 2022 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க அரபு தலைவராக தேர்வு!

ரியாத் (10 ஜன 2023): சவூதி அரேபிய பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் 2022 ஆம் ஆண்டில் மிகவும் செல்வாக்கு மிக்க அரபுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ரஷ்யாவை தளமாகக் கொண்ட உலகளாவிய பன்மொழி தொலைக்காட்சி செய்தி சேனல் ஆர்டி அரபு நடத்திய கருத்துக் கணிப்பில் முகமது பின் சல்மான் ‘மிகவும் செல்வாக்கு மிக்க அரபு தலைவர் 2022’ என்ற பட்டத்தை வென்றார். வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களின் மொத்த வாக்குகளில் 7.4 மில்லியன் (62.3 சதவீதம்)…

மேலும்...

இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே இந்த ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்து!

ஜித்தா (10 ஜன 2023): இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே இந்த ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஒன்றே முக்கால் லட்சம் யாத்ரீகர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தத்தில் இந்திய தூதரகம் முஹம்மது ஷாஹித் ஆலம் மற்றும் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான சவுதி அமைச்சர் டாக்டர் அப்துல்பத்தாஹ் சுலைன் ஆகியோர் கையெழுத்திட்டனர். ஜித்தா சுப்பர்டோமில் நடைபெற்ற ஹஜ் எக்ஸ்போவில் இந்த பேச்சுவார்த்தை கையெழுத்தானது. இந்த…

மேலும்...

சவூதியில் மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

ரியாத் (08 ஜன 2023): சவுதி அரேபியாவில் குளிர் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த வாரம் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சவூதி வானிலை ஆய்வு மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுசைன் அல்கஹ்தானி கூறுகையில், சவுதி அரேபியாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த வாரம் மழை தொடரும் என்று தெரிவித்துள்ளார். மேலும் நாம் இப்போது குளிர்காலத்தின் முதல் காலாண்டில் இருக்கிறோம், அப்போது மழையும் தொடரும், மேலும் வெப்பநிலை குறையும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே…

மேலும்...

சவூதி அரேபியாவில் ஓடும் பயணிகள் பேருந்து தீ விபத்து!

ரியாத் (07 ஜன 2023): சவுதி அரேபியாவில் ரியாத் அருகே ஓடும் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்தது. தீ பிடித்த பேருந்து தனியாருக்கு சொந்தமானது. ரியாத்தில் இருந்து 500 கிமீ தொலைவில் உள்ள அஃபிஃப்-தாரா ஈயா சாலையில் வியாழக்கிழமை இரவு 40 பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது பஸ்சின் பின்பக்க டயர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. எனினும் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது….

மேலும்...

சர்வதேச குர்ஆன் மற்றும் பாங்கு (தொழுகைக்கு அழைப்பு) போட்டி – சவூதி அரேபியா அறிவிப்பு!

ரியாத் (05 ஜன 2023): சவூதி அரேபியா அறிவித்துள்ள சர்வதேச குர்ஆன் மற்றும் அதான் (முஸ்லிம்களின் தொழுகைக்கான அழைப்பு) போட்டியின் இரண்டாம் பதிப்பு ஆன்லைன் விண்ணப்பம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மிகப்பெரிய பரிசுகள் வழங்கப்படவுள்ளன. 12 மில்லியன் சவூதி ரியால் வரை பரிசாக வழங்கப்படவுள்ளன. ‘இணையாதளம் மூலம் போட்டி நடத்தப்படும்’ என்று சவூதி பொது பொழுதுபோக்கு ஆணையத்தின் (GEA) வாரியத்தின் தலைவரான அவரது மேன்மையான ஆலோசகர் துர்கி அலல்ஷிக் தெரிவித்துள்ளார். இந்த போட்டிகளுக்கு…

மேலும்...

ஓரியோ பிஸ்கட் சர்ச்சை – சவுதி உணவு மற்றும் மருந்து ஆணையம் விளக்கம்!

ரியாத் (04 ஜன 2023): பன்றிக்கொழுப்பு கொண்ட பிஸ்கட்டுகள் சவுதி சந்தையில் இல்லை என்று சவுதி உணவு மற்றும் மருந்து ஆணையம் தெரிவித்துள்ளது. ஓரியோ பிஸ்கட் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ள சவுதி உணவு மற்றும் மருந்து ஆணையம், இந்த தகவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் அளித்துள்ள விளக்கத்தில், சவூதி சந்தையில் விற்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களும் ஹலால் என்றும். சவூதி அரேபியாவில் விற்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களையும் தொடர்ந்து கண்காணித்து, அவை அங்கீகரிக்கப்பட்ட தரத்தை அடைவதை…

மேலும்...

சவூதியில் பெய்துவரும் கனமழையால் 3 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

ஜித்தா (04 ஜன 2023): சவூதி அரேபியாவில் பெய்து வரும் கனமழைக்கு மூன்று குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை குன்ஃபுடாக்கின் வடக்கே அல்முதைலிஃப் என்ற இடத்தில் உள்ள முகபாப் கிராமத்தில் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூன்று குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உறவினர்களான 5 குழந்தைகள் நீர்நிலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​அவர்களில் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இரண்டு பேர் உயிர் தப்பினர். குழந்தைகளுக்கு 9 முதல் 12 வயதுவரை இருக்கும். உயிரிழந்த…

மேலும்...

உலக கால்பந்து நாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியாத் வந்தடைந்தார்!

ரியாத் (03 ஜன 2023): – சவுதி கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணம் வந்துவிட்டது. உலக கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியாத் வந்தடைந்தார். கிறிஸ்டியானோ அண்ணாஸ்ர் கிளப்பில் சேர்ந்துள்ள நிலையில் அவர் ரியாத் வந்துள்ளார். அவருடன் அவரது மனைவியும் வந்துள்ளார். ரியாத்தில் உள்ள அன்னாஸ்ர் கிளப்புடன் இரண்டு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ரொனால்டோ, செவ்வாய்கிழமை ரசிகர்கள் முன்னிலையில் மஞ்சள் ஜெர்சியில் தோன்றுவார். வரும் வியாழன் அன்று ரொனால்டோவின் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என எதிர்…

மேலும்...

சவூதி அரேபியா ரியாத்தில் ஆடல் பாடலுடன் நடந்த புத்தாண்டு கொண்டாட்டம்!

ரியாத் (02 ஜன 2023): சவூதி அரேபியா ரியாத் நகரில் ஆடல், பாடல் மற்றும் வான வேடிக்கைகளின் வண்ணமயமான காட்சிகளுடன் ரியாத் நகரம் புத்தாண்டை வரவேற்றது. ரியாத்தின் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்வுகளில் இளைஞர்கள் புத்தாண்டுக்கு பெரும் வரவேற்பு அளித்தனர். அரபு உலகின் முன்னணி பாடகர்களை ஒன்றிணைத்து, ரியாத் பவுல்வர்டில் நடைபெற்ற “ட்ரையோ நைட்” இசை நிகழ்ச்சியின் போது புத்தாண்டு கொண்டாடப் பட்டது.  இது சவூதி அரேபியாவின் மிக முக்கியமான புத்தாண்டு நிகழ்வாகவும் இருந்தது. ஜார்ஜ்…

மேலும்...

சவூதி அரேபியா ஜித்தாவில் பாதாள வழிகள் மூடல் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

ஜித்தா (02 ஜன 2023): சவூதி அரேபியா ஜித்தாவில் பெய்த பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பல்வேறு பாதாள சாலைகள் மூடப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது. பாலஸ்தீன சாலையில் இணையும் அமீர் மஜித் சுரங்கப்பாதை வடக்கிலும், அல்ஜாமியா சுரங்கப்பாதை இருபுறமும், கிங் அப்துல்லா சாலை மற்றும் மதீனா சாலையும், கிங் அப்துல்லா சாலை மற்றும் கிங் ஃபஹத் சாலையும் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த பாதாள சாலைகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் மாற்று வழிகளை பயன்படுத்த…

மேலும்...