கத்தார் சாலையில் ஸ்டண்ட் செய்த கார் நசுக்கி அழிப்பு! (வீடியோ)

கத்தார் சாலையில் ஸ்டண்ட் செய்த கார் நசுக்கி அழிப்பு! (வீடியோ)

தோஹா, கத்தார் (22 ஜனவரி 2024): தோஹா நகரின் சாலைகளில், ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த கார் ஒன்று காவல்துறையினரால் கைப்பற்றி நசுக்கி அழிக்கப்பட்டது. கத்தார் நகர சாலைகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் “லேண்ட் க்ரூஸர்” கார் டிரைவர் ஒருவர் சாகசங்களைச் செய்தார். இதனை சிலர் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். பின்பு இந்த வீடியோ பல்வேறு சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி வந்ததை அடுத்து, காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். விசாரணையைத் தொடர்ந்து, ஸ்டண்ட் செய்த கார்…

மேலும்...
ஆன்லைன் சூதாட்டம் நடத்தியதில் கைது!

ஆன்லைன் சூதாட்டம், மது – கத்தாரில் பலர் கைது! (வீடியோ)

தோஹா, கத்தார் (10 டிசம்பர் 2023): கத்தார் நாட்டின் தலைநகரான தோஹா-வில், ஆன்லைன் சூதாட்டம், மது, மற்றும் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட நபர்களை இரவோடு இரவாகக் கைது செய்துள்ளனர் காவல்துறையினர். தோஹாவில் சில இடங்களில் ஆன்லைன் சூதாட்டங்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி), நேற்று நள்ளிரவில் திடீர் சோதனைகள் நடத்தியது. அதிரடி சோதனை இச் சோதனையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஆண்களும்…

மேலும்...

பிரமிக்க வைக்கும் கல்ஃப் ரயில்வே – முழுமையான தகவல்கள்!

தோஹா (05 டிசம்பர் 2023): வளைகுடா நாடுகளுக்கான Gulf Co-operation Council இன் 44வது அமர்வு இன்று தோஹாவில் நடைபெறுகிறது. இந்த அமர்வில், வளைகுடா நாடுகளை வலுப்படுத்தும் திட்டங்கள் அலசப்படுகின்றன. வளைகுடா நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக ஒருங்கிணைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின்றன. இந்த ஒப்பந்தங்களில் முக்கியமாகக் கருதப்படுவது, வளைகுடா-வின் ஆறு நாடுகளை ஒன்றிணைக்கும் அதிவேக ரயில்வே திட்டமாகும். இதற்கு கல்ஃப் ரயில்வே (Gulf Railway) எனப் பெயரிடப் பட்டுள்ளது. அதிவேக ரயில் திட்டம் –…

மேலும்...

கத்தாரில் நடைபெறும் ராட்சதப் பலூன் திருவிழா!

தோஹா (03 டிசம்பர் 2023): கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் ராட்சதப் பலூன் திருவிழா நடைபெறுகிறது. ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும் இந்த திருவிழா சமயத்தில், நகரங்கள் முழுக்க பல்வேறு வடிவங்களினால் ஆன பலூன்கள் வானில் பறப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். எதிர்வரும் டிசம்பர் 7-ஆம் தேதி துவங்கும் இந்த பலூன் திருவிழா, கத்தார் நாட்டின் தேசிய நாளான டிசம்பர் 18, 2023 வரை நடைபெறும். தோஹாவில் உள்ள கட்டாரா (Katara) பகுதியில் இந்தத் திருவிழா நடைபெறும். திருவிழாவின் சிறப்பு…

மேலும்...

கத்தார் தோஹாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில் உள்ள லுலு எக்ஸ்பிரஸ்ஸின் பின்புறம் உள்ள பல மாடி கட்டிடம் அருகில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தின் மேல் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இடிபாடுகளில் இருந்து 7 பேர் மீட்கப்பட்டனர். இந்த தகவலை கத்தார் சிவில் டிஃபென்ஸ்…

மேலும்...

காங்கிரஸும் கம்யூனிஸ்டும் இணைய வேண்டும் – கம்யூனிஸ்ட் தலைவர் அதிரடி!

தோஹா (10 மார்ச் 2023): எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மட்டுமே, அடுத்த பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த முடியும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும், தேசிய மகளிர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஆனி ராஜா கூறினார். யுவ கலாசாஹிதி 17வது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக அனி ராஜா தோஹா வந்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸை ஒதுக்கி வைத்துக்கொண்டு பாஜகவை எதிர்கொள்ள முடியாது. பிராந்தியக் கட்சிகளும், தேசிய அளவில் பலம் வாய்ந்த காங்கிரஸும் ஒன்றுபட்டால் மட்டுமே…

மேலும்...

உலகிலேயே பாதுகாப்பான நாடு எது தெரியுமா?

கத்தார் (15 ஜன 2023): உலகிலேயே சிறந்த வாழ்க்கைத் தரமும், மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய சூழ்நிலைகளும் கொண்ட நாடுகளின் பட்டியல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் தர ஆய்வதில் உலகில் முன்னணி வகிக்கும் Numbeo நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. (இந்நேரம்.காம்) உலகில் 142 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் வெளியான இந்த பட்டியலில் கத்தார் நாடு முன்னணி வகிக்கிறது. Numbeo எனும் பன்னாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் மற்றும்…

மேலும்...
கத்தாரின் தலைநகரம் தோஹா (இந்நேரம்.காம்)

உலகின் அதிவேக இண்டெர்நெட் சேவையில் கத்தார் முதலிடம்!

கத்தார் (11 ஜன 2023): உலகின் அதிவேக மொபைல் இண்டர்நெட் சேவை வழங்குவதில் உலகிலேயே முதல் இடத்தை (தோஹா) கத்தார் நாடு பெற்றுள்ளது. உலகக் கால்பந்தாட்டப் போட்டி நடத்தி சர்வதேச அளவில் அனைவரையும் வாய் பிளக்க வைத்திருக்கும் கத்தார், சாதனைகளை தொடர்ந்து படைத்த வண்ணம் இருக்கிறது.  குறிப்பாக உலகத் தரத்திலான சேவைகளை மக்களுக்கு வழங்குவதில் முன்னணி வகிக்கிறது. கத்தாரில் Ooredoo மற்றும் Vodafone ஆகிய இரு பெரும் நிறுவனங்கள் இணையச் சேவையை வழங்கி வருகின்றன. நடைபெற்று முடிந்த கால்பந்தாட்டப்போட்டிகளுக்கு…

மேலும்...

கத்தாரில் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்ட டாக்டர்.ஜாகிர் நாயக் நிகழ்ச்சிகள்!

தோஹா (09 டிசம்பர் 2022): பிரபல இஸ்லாமிய மதபோதகர் டாக்டர். ஜாகிர் நாயக், FIFA World Cup 2022 நடந்து வரும் கத்தாருக்குச் சென்றுள்ளார். அங்கே அவரது தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் பொதுக்கூட்டங்களும் நடந்து வருகின்றன. கத்தாரில் நடக்கும் சர்வதேச உலகக் கால்பந்தாட்ட போட்டியைக் காண, லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், இன்று (09 டிசம்பர் 2022, வெள்ளிக்கிழமை) கத்தார் நாட்டில் உள்ள அல் வக்ரா வில் உள்ள பிரபலமான பள்ளிக்கூடமான தி…

மேலும்...

கத்தார் விமான நிலையத்தில் நடந்தது என்ன?

தோஹா (28 அக் 2020): பெண்களிடம் பரிசோதனை செய்தமைக்காக கத்தார் ஏர்வேஸ் விமானம் மன்னிப்பு கோரோப்பியது. கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு கடந்த 2 ஆம் தேதி கத்தார் ஏர்வேஸ் விமானம் புறப்பட இருந்தது. விமான நிலையத்தில் குளியலறையில், அடையாளம் தெரியாத குறைமாதத்தில் பிறந்த குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதன் தாயை உடனடியாகக் கண்டுபிடிப்பதற்காக, விமான நிலையத்தில் வெளிநாடு செல்லத் தயாராக இருந்த பெண் பயணிகளுக்கு கட்டாய மருத்துவப் பரிசோதனை செய்து, யாருக்கேனும்…

மேலும்...