திருப்பூரில் விசாரணை கைதி மர்ம மரணம்!

திருப்பூர் (22 செப் 2020): திருப்பூரில் சென்ற கைதி மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். திருப்பூர் நல்லூர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் மரணம் அடைந்ததால், ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விசாரணைக்காக வந்த கோட்டாட்சியரை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும்...

விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி திடீர் மரணம்!

சென்னை (10 செப் 2020): விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 45. நடிகர் வடிவேலு போன்றே தோற்றம் கொண்ட வடிவேலு பாலாஜிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மரணம் திரையுலகினரையும், டிவி நடிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வடிவேல் பாலாஜிக்கு, மனைவி, ஒரு…

மேலும்...

தொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு!

ஐதராபாத் (28 மே 2020): தெலுங்கானா மாநிலத்தில் 3 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்திய கிராமங்களில் ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்க அரசோ, மாவட்ட நிர்வாகங்களோ எவ்வித முயற்சியும் மேற்கொண்டதாக தெரியவில்லை. அந்த வகையில் தெலுங்கானா மாநிலம் மடாக் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் புதன்கிழமை இரவு 3 வயது குழந்தை சாய் வரதன் 120 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார்….

மேலும்...

பிரபல இந்தி நடிகர் இர்ஃபான் கான் மரணம்!

மும்பை (29 ஏப் 2020): பிரபல இந்தி நடிகர் இர்ஃபான் கான் (54) மும்பையில் புதன்கிழமை காலமானார். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் இர்ஃபான் கான். பெருங்குடல் நோய் தொற்று காரணமாக மும்பையில் உள்ள கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். இர்ஃபான் கான் கடந்த 2018 ஆம் ஆண்டு முதலே…

மேலும்...

திமுக எம்.எல்.ஏ. மரணம்!

சென்னை (27 பிப் 2020): திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பிபி சாமி உடல் நலக்குறைவால் காலமானார். 2006-11 திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த கே.பி.பி சாமி, 2011 தேர்தலில் தோல்வியடைந்தார். 2016 தேர்தலில் மீண்டும் அத்தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். தற்போது, அக்கட்சியின் மீனவர் அணி செயலாளராக இருந்த சாமி, கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி தனது 57-வது வயதில் அவர் காலமானார். சாமியின் மறைவுக்கு…

மேலும்...

முன்னாள் எகிப்து அதிபர் ஹுஸ்னி முபாரக் மரணம்!

கெய்ரோ (25 பிப் 2020): எகிப்து முன்னாள் அதிபர் ஹுஸ்னி முபாரக் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். ஹுஸ்னி முபாரக் எகிப்து ராணுவ மருத்துவமனையில் 91வது வயதில் காலமானார். முர்ஸி ஆட்சியில் ஹுஸ்னி முபாரக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்பு 2017ல் விடுதலை ஆனார். எகிப்த்தை 30 ஆண்டுகள் ஆட்சி புரிந்தவர் ஹுஸ்னி முபாரக் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

கொரோனா நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மரணம்!

பீஜிங் (06 பிப் 2020): சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரசால் இதுவரை, 563 பேர் உயிரிழந்துள்ளனர்; 28 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளனர் இந்ந்நிலையில் வுஹான் நகரில் உள்ள மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 10 நாட்களாக, ஓய்வுறக்கமின்றி நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த, சாங்…

மேலும்...

குழந்தையை இழந்தும் போராட்டத்தை கைவிடாத தாய் – ஷஹீன் பாக்கில் நிகழ்ந்த சோகம்!

புதுடெல்லி (04 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் போராட்டக் களத்தில் உயிரிழந்து  பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார் நான்கு மாத குழந்தை. இந்தியாவின் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் மேன்மேலும் தீவிரமடைந்து வருகிறது. டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள ஷஹீன் பாக்கில் பெண்கள் 50 நாட்களை தாண்டியும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மிரட்டல் துப்பாக்கிச் சூடு போன்றவை நிகழ்ந்த போதும் எதற்கும் அச்சப்படாமல் அங்கு…

மேலும்...

நடிகர் ஷாருக்கானின் உறவினர் பாகிஸ்தானில் மரணம்!

பெஷாவர் (29 ஜன 2020): நடிகர் ஷாருக்கானின் உறவினர் பாகிஸ்தான் பெஷாவரில் காலமானார். பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான். அவரது உறவினர் நூர்ஜஹான் பாகிஸ்தான் பெஷாவரில் வசித்து வந்தார். இந்நிலையில் புற்று நோய் காரணமாக அவர் பாகிஸ்தான் பெஷாவரில் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை நூர்ஜஹானின் சகோதரர் மன்சூர் அஹமது உறுதிபடுத்தியுள்ளார். ஷாருக்கானுடன் நூர்ஜஹான் குடும்பத்தினர் தொடர்பிலேயே இருந்துள்ளனர். இந்நிலையில் நூர்ஜஹானின் இறுதிச் சடங்கிற்கு ஷாருக்கான் பாகிஸ்தான் செல்லக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது. நூர்ஜஹான் பாகிஸ்தானில் அரசியலில் மிகுந்த…

மேலும்...

பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

கோலாலம்பூர் (28 ஜன 2020): பிக்பாஸ் பிரபலம் முகன் ராவ் தந்தை மலேசியாவில் உயிரிழந்தார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை வென்று புகழ்பெற்றவர் மலேசியாவைச் சேர்ந்தவர் முகென்ராவ். முகென்ராவின் தந்தை பிரகாஷ்ராவ்(52). இவருக்கு நேற்று மாலையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். பிரகாஷ்ராவின் இறுதிச்சடங்குகள் இன்று மலேசியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. இது பிக்பாஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்...