தப்பியோடிய ஐஏஎஸ் அதிகாரி மீது கேரள அரசு அதிரடி நடவடிக்கை!

திருவனந்தபுரம் (28 மார்ச் 2020): கொரோனா சந்தேகத்தின் பேரில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த கேரள ஐஏஎஸ் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில், உதவி கலெக்டராக பணியாற்றி வருபவர் அனுபம் மிஷ்ரா. இவரது சொந்த மாநிலம் உத்தர பிரதேசம். சில மாதங்களுக்கு முன், இவருக்கு திருமணம் நடந்தது. இதற்காக விடுமுறையில் சென்ற அவர், பின்னர் மலேஷியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்று விட்டு, ஒரு வாரத்துக்கு முன்னர் கேரளாவுக்கு வந்தார்….

மேலும்...

வைரமுத்துவின் வரிகளில் எஸ்பி பாலசுப்ரமணியம் பாடியுள்ள கொரோனா பாடல் – வீடியோ!

கொரோனா வைரஸ் உலகை புரட்டிப் போட்டுள்ள நிலையில் கவியரசு வைரமுத்துவின் வரிகளில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடல். https://www.facebook.com/SPB/videos/742064302992047/

மேலும்...

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

லண்டன் (27 மார்ச் 2020): பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகை புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ் தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை. பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகவலை பிரிட்டன் பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது. மேலும் பிரிட்டனின் சுகாதாரத்துறை செயலாளர் மேட் ஹான்காகும் கொரோனா…

மேலும்...

பரவும் கொரோனா – தமிழகத்தில் பாதித்தோர் 35 ஆக உயர்வு!

சென்னை (27 மார்ச் 2020): கொரோனா வைரஸ் உலக அளவில் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த செவ்வாய்க்கிழமை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 29 ஆக இருந்த நிலையில் மதுரை, ஈரோடு, சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா இரண்டு பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை இன்று தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது….

மேலும்...

கொரோனா வைரஸும் காதர் பாயின் மனிதாபிமானமும்!

கோவை (27 மார்ச் 2020): கொரோனா வைரஸ் காரணமாக நாடெங்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவை காதர் பாய் அவரால் இயன்ற உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளார். கோவை குறிச்சி பகுதியைச் சேர்ந்த காதர், உக்கடம் லாரிபேட்டையில் மீன் கடை நடத்தி வருகிறார். அதுமட்டுமல்லாது தனக்கு சொந்தமான 15 வீடுகளையும் கூலி தொழிலாளிகளுக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார். இந்நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவரது வீட்டில் தங்கியுள்ள கூலி தொழிலாளிகள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களின்…

மேலும்...

தமிழக நோயாளிக்கு தண்டு உயிரணுக்களை (Stem Cells) தானமாக வழங்கும் கேரள மாணவி!

சென்னை (27 மார்ச் 2020): தமிழக நோயாளிக்கு தண்டு உயிரணுக்களை தானமாக வழங்க முன்வந்துள்ளார் கேரள மாணவி ஹிபா ஷமார். சென்னை மருத்துவமனையில் தண்டு உயிரணுக்கள் (Stem Cells) பற்றாக்குறையால் உயிருக்கு போராடி வரும் நோயாளி ஒருவருக்கு கேரளாவை சேர்ந்த 18 வயது மாணவி ஹிபா என்பவர் தனது தண்டு உயிரணுக்களை தானமாக வழங்க முன்வந்துள்ளார். ஹிபா கேரள மாநிலம் எர்ணாகுளம் தெரஸா கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். ஷமார், ஜீனத் தம்பதிகளின் மகளான…

மேலும்...

நாடே அல்லோலப்பட்டு கிடக்குது, உங்களுக்கு காதல் கேட்குதா – கொந்தளிக்கும் மக்கள்!

மதுரை (27 மார்ச் 2020): கொரோனா அறிகுறிகளுடன் கொரோனா முகாமில் வைக்கப்பட்டிருந்த இளைஞரின் செயலால் ஒட்டு மொத்த மக்களும் ஆதங்கத்தில் உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், துபாயிலிருந்து கடந்த 21-ம் தேதி மதுரை வந்தார். அவரை சோதனை செய்தபோது கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரிந்தது. அதனால் அவரை சின்ன உடைப்பு சிறப்பு முகாமில் வைத்துக் கண்காணித்து வந்தார்கள். இந்த நிலையில் நேற்று அங்கிருந்து அவர்  தப்பிச் சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அவரைத் தேடும் பணியில்…

மேலும்...

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு!

வாஷிங்டன் (27 மார்ச் 2020): அமெரிக்காவில் கொரோனா வைரஸால் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகில் அதிக அளவில் பரவி வரும் தொற்று நோயான கொரோனா வைரஸ், சீனாவுக்கும் இத்தாலிக்கும் அடுத்தபடியாக அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை அங்கு 69 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும் உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 250 போ் உயிரிழந்தனா். அதையடுத்து, அந்த வைரஸுக்கு அமெரிக்காவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை…

மேலும்...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு – பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு!

புதுடெல்லி (27 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளன. கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் திட்டமிடுகிறது. ஸ்பெயின், இத்தாலி மற்றும் அமெரிக்காவில் நிலைமை மிகவும் தீவிரமாகிவிட்டது இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளன. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது. இதில் 47 பேர் வெளிநாட்டினர். மேலும் 17 பேர் பலியாகியுள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் 4 பேரும், குஜராத்தில் 3 பேரும், கர்நாடகாவில் 2…

மேலும்...

கொரோனா: கட்டுப்படுத்த முடியாத நிலையில் இத்தாலி – கதறும் மக்கள்!

ரோம் (27 மார்ச் 2020): கொரோனாவின் கோரப் பசிக்கு இத்தாலியில் இதுவரை 8515 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்று வெகு தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இத்தாலி, இந்த கொரோனாவிற்கு அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8215 ஆக அதிகரித்துள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இத்தாலியில் உயிரிழந்தவர்களில் 31 மருத்துவர்களும் 67 பாதிரியார்களும் அடங்கும்.

மேலும்...