இந்நேரம்

நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்!

சென்னை (19 பிப் 2023): நடிகர் மயில்சாமி நகைச்சுவை கதாப்பாத்திரங்களிலும் குணசித்திர வேடங்களிலும் நடித்து வந்தார். உச்ச நட்சத்திரங்கள் பலருடனும் இணைந்து மயில்சாமி நடித்துள்ளார். சினிமாவை தாண்டி பொதுநலம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றவர். கொரோனா காலங்களில் மக்களுக்கு ஏகப்பட்ட உதவிகளை செய்து சினிமாவையும் தாண்டி பொதுவெளியில் நன்கு அறியப்பட்டவர். மேலும் 2021 சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகவும் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர்…

மேலும்...

அதானி விவகாரத்தில் எஸ்பிஐ, எல்ஐசி க்கு அழுத்தம் தரப்பட்டதா? – பிரதமருக்கு ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!

புதுடெல்லி (19 பிப் 22023): அதானி விவகாரத்தில் பிரதமர் மவுனம் கலைக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும் அதானி குழும பங்குகளில் முதலீடு செய்யும்படி எல்ஐசி, எஸ்பிஐ நிறுவனங்களுக்கு அழுத்தம் தரப்பட்டதா? எனவும் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஜெய்ராம் ரமேஷ் தன் டிவிட்டரில், ‘‘அதானி என்டர்பிரைசஸ் பொதுப்பங்குகளில் முதலீடு செய்யும்படி பொதுத்துறை நிறுவனங்களான எல்ஐசி, எஸ்பிஐ வங்கிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதா?. இந்த விவகாரத்தில் இன்னமும் பிரதமர் மோடி…

மேலும்...

அதானி விவகாரத்தில் ஒன்றிய அரசின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி (18 பிப் 2023): அதானி விவகாரத்தில் இதுகுறித்த குழுவிற்கு ஒன்றிய அரசால் சீல் வைக்கப்பட்ட உறையில் சமர்ப்பிக்கப்பட்ட பெயர்களை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவை ஆய்வு செய்ய உச்ச ஒன்றிய அரசு குழு ஒன்றை நியமித்து அதன் பெயரை சீலிடப்பட்ட உறையில் உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்தது அதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் நேரடியாகக் குழுவை நியமிக்கும் என்றும். மத்திய அரசால் சீல் வைக்கப்பட்ட உறையில்…

மேலும்...

ஹஜ் கமிட்டி தலைவர் பதவி – பாஜகவிற்கு காங்கிரஸ் உதவியதா?

புதுடெல்லி (17 பிப் 2023): காங்கிரஸ் உதவியின் மூலம் பாஜக தலைவர் கவுசர் ஜஹான் டெல்லி ஹஜ் கமிட்டியின் தலைவரானார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, காங்கிரஸ் உறுப்பினரை குழுவில் நியமித்ததன் மூலம் அவமானகரமான தலையீட்டை செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் சார்பாக நாஜியா டேனிஷ் பரிந்துரைக்கப்பட்டார். இறுதியாக அவருக்கு வாக்களிக்காமல் விலகி பாஜக பிரதிநிதியின் வெற்றியை உறுதி செய்தனர்….

மேலும்...

முடிவுக்கு வந்தது பிபிசி அலுவலக சோதனை!

மும்பை (17 பிப் 2023): பிபிசியின் மும்பை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை 60 மணி நேரத்திற்கு பிறகு முடிவுக்கு வந்தது. பிபிசியின் 100 ஆண்டு கால வரலாற்றில் இதுபோன்ற செயலை எதிர்கொள்வது இதுவே முதல் முறை. வருமான வரித்துறையினர் 10 ஆண்டு கணக்குகளை விரிவாக ஆய்வு செய்துள்ளனர். நோட்டீஸ் கொடுக்கப்பட்டாலும் பிபிசி தரப்பில் எதிர்மறையான அணுகுமுறை இருந்ததே சோதனைகளுக்கு காரணம் என வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதேவேளை அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறும், அவர்களின் தனிப்பட்ட…

மேலும்...

2023 ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் சவூதி அரேபியா!

ரியாத் (15 பிப் 2023): சவூதி அரேபியாவில் ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை இந்த ஆண்டு டிசம்பர் 12 முதல் 22 வரை நடைபெறும் என்று சவுதி அரேபிய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த போட்டிகள் கடைசியாக மொராக்கோவிலும், 2020 மற்றும் 2021 இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. இது தவிர பிரேசில், ஜப்பான் மற்றும் கத்தார் ஆகியவை முந்தைய ஆண்டுகளில் இந்த போட்டியை நடத்தியுள்ளன. சவூதி தேசிய அணிகள் ஐந்து முறை இந்த போட்டிகளில்…

மேலும்...

மக்கா கிரேன் விபத்து – பின்லேடன் கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

ஜித்தா (15 பிப் 2023) மக்காவில் கிரேன் விழுந்து 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பின்லேடனின் கட்டுமான நிறுவனத்திற்கு 20 மில்லியன் ரியால் அபராதம் விதித்து மக்கா குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 7 பேருக்கும் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து மக்கா குற்றவியல் நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் குழு தீர்ப்பளித்தது. முன்னதாக பின்லேடன் நிறுவனத்தை இந்த வழக்கிலிருந்து விடுவித்த தீர்ப்பை ரத்து செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு கிரேன் விபத்தில்…

மேலும்...

ரகசிய கேமராவில் சிக்கிய பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் சேத்தன்குமார் சர்மா!

புதுடெல்லி (15 பிப் 2023): பிசிசிஐயின் தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன்குமார் சர்மா தனியார் தேசிய ஊடகம் நடத்திய ரகசிய கேமரா நடவடிக்கையில் சிக்கியுள்ளார். பிசிசிஐ அணிக்கு சேத்தன் சர்மா தேர்வு செய்யும் அணி குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனை அடுத்து அவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த நிலையில் ரோஜர் பின்னி தலைமையில் புதிய நிர்வாகம் வந்தவுடன் எந்தப் பதவியில் இருந்து சேத்தன் சர்மா நீக்கப்பட்டாரோ தற்போது அதே பதவிக்கு வந்துள்ளார் இந்நிலையில்…

மேலும்...

பிபிசி ரெய்டு – ஊடக சுதந்திரம் பாழடிப்பு: ஸ்டாலின் கண்டனம்!

சென்னை (14 பிப் 2023): பிபிசி அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த பதிவில் ‘எந்தவொரு துடிப்பான ஜனநாயகத்துக்கும், வெளிப்படைத் தன்மையோடும் சுதந்திரமாகவும் செயல்படும் அமைப்புகள் இன்றியமையாதவை. அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் அரசியல் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன. ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, இந்திய ஜனநாயகத்தையும், ஊடகச் சுதந்திரத்தையும் பாழடித்து வருபவர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள்’ என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக…

மேலும்...

22 நாட்களில் அதானி பங்குகள் பாதிக்கு மேல் இழப்பு!

மும்பை (14 பிப் 2023): ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதில் இருந்து அதானி குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான கௌதம் அதானி தனது நிகர மதிப்பில் சரிவைக் கண்டு வருகிறார். அவரது நிறுவனப் பங்குகள் இன்றும் தொடர்ந்து சரிவை சந்தித்தது. வெறும் 22 நாட்களில் 66 பில்லியன் அமெரிக்க டாலர்களை அதானி இழந்துள்ளார். இன்று மதியம் 1 மணி நிலவரப்படி, அதானி கிரீன், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், என்டிடிவி, அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் உள்ளிட்ட பெரும்பாலான அதானி…

மேலும்...