இந்நேரம்

எடப்பாடிக்கு துணிச்சல் வந்துவிட்டதா? – பின்பு பார்த்தால் வேறு கதை!

ஈரோடு (01 பிப் 2023): ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் எடப்ப்பாடி அணியின் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார் என அதிமுக இபிஎஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே இரண்டு முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார். அதிமுக தேர்தல் பணிமனையில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் வைக்கப்பட்ட பதாகைகளில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி…

மேலும்...

ஒன்றிய பட்ஜெட்டில் வருமான வரி வரம்பு அதிகரிப்பு!

புதுடெல்லி (01 பிப் 2023): 2023-2024 நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதில், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், புதிய வரி முறையில் வருடத்திற்கு ரூ. 7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது. ஏற்கனவே ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது என இருந்த நிலையில், தற்போதைய பட்ஜெட்டில் அது ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய வரி…

மேலும்...

மழை பொழிவுக்குக் காரணமான மற்றுமொருவர்!

ரியாத் தமிழ்ச் சங்கத்தின் மூத்த தலைவர் அஹமது இம்தியாஸ் சற்றுமுன் பகிர்ந்துகொண்ட இந்த வியப்பளிக்கும் செய்தி ஒளவையார் பாடிய வெண்பாவின் செய்தி வடிவம். ரியாத் தமிழ்ச் சங்கத்தின் எதிர்வரும் முப்பெரும் விழாவுக்காக இந்தியப் பன்னாட்டுப் பள்ளியின் தாளாளர் முதல்வர் உள்ளிட்டோரை அழைக்க ஒரு குழு அப்பள்ளிக்குச் சென்றிருந்தது. அச்சமயம் பள்ளி முதல்வர் தெரிவித்த செய்தி, நம் குழுவினரைக் கலங்கடித்துள்ளது. அதாவது மேல்நிலை (+2) படிக்கும் ஒரு மாணவனின் தந்தை அண்மையில் எதிர்பாரா விதமாக ரியாத்தில் இறந்துவிட்டார். இந்நிலையில்…

மேலும்...

ஆர்.எஸ்.எஸ் இஸ்லாமிய அமைப்புகள் இடையே ரகசிய சந்திப்பு!

புதுடெல்லி (31 ஜன 2023): ஆர் எஸ் எஸ் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளிட்ட முஸ்லீம் அமைப்புகள் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த மாதம் ஜனவரி 14ஆம் தேதி டெல்லியில் ஆர்எஸ்எஸ் உடனான கலந்துரையாடல் நடைபெற்றதாக இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு தவிர, ஜமியத்-உல்-உலமாயே ஹிந்த் மற்றும் தியோபந்தின் தாருல்-உலூம் அறிஞர்களும் இந்த விவாதத்தில் கலந்து கொண்டுள்ளனர். ஆர்எஸ்எஸ் சார்பில் இந்திரேஷ் குமார், ராம் லால், கிருஷ்ண கோபால் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு…

மேலும்...

உம்ரா மற்றும் சுற்றுலாவிற்கு செல்ல சவூதியில் இலவச விசா தொடக்கம்!

ஜித்தா (31 ஜன 2023): உம்ரா மற்றும் சுற்றுலாவிற்கு செல்ல நான்கு நாள் இலவச போக்குவரத்து விசாக்கள் சவூதி அரேபியாவில் தொடங்கப்பட்டுள்ளன. சவுதி ஏர்லைன்ஸ் மற்றும் சவூதி அரேபியாவின் தேசிய விமான நிறுவனமான ஃப்ளைனாசின் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு நான்கு நாள் பயண விசா இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு வருபவர்கள் உம்ரா செய்யவும், மதீனாவுக்குச் செல்லவும், நாட்டின் எந்தப் பகுதிக்கும் செல்லவும் அனுமதிக்கப்படுவர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கலாம். சவுதி விமான…

மேலும்...

பாஜகவுடன் இணைவதைவிட சாவதே மேல் – நிதிஷ்குமார்!

பாட்னா (30 ஜன 2023): மீண்டும் பா.ஜ.க.வுடன் கைகோர்ப்பதை விட சாவதே மேல் என பீகார் முதல்வர் நிதிஷ் கூறியுள்ளார். முதல்வர் நிதிஷ் குமாருடன் மீண்டும் இணைய மாட்டேன் என்று பீகார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறியிருந்தார். நிதிஷின் செல்வாக்கற்ற தன்மையால் 2020 சட்டசபை தேர்தலில் ஜே.டி.(யு) பல இடங்களை இழக்க நேரிட்டுள்ளதாக ஜெய்ஸ்வால் கூறினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள நிதிஷ்குமார், சாக நேரிட்டாலும் பாஜகவுடன் இணையமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், தாம்…

மேலும்...

முஹம்மது நபியை இழிவு படுத்தியவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

போபால் (30 ஜன 2023): முஹம்மது நபியை இழிவு படுத்தும் வகையில் கோஷம் எழுப்பியவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 25 ஆம் தேதி அன்று ஷாருக்கான் நடித்த பதான் படத்திற்கு எதிராக திரையரங்கம் முன்பு நடந்த போராட்டத்தின் போது பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர்க முஹம்மது நபியை இழிவுபடுத்து வகையில் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் எழுப்பட்ட முழக்கங்கள் சர்ச்சையாகி எதிர்ப்பு வலுத்து பல முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து குற்றவாளிகள்…

மேலும்...

சவூதி அரேபியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் இந்திய குழந்தை மரணம்!

ரியாத் (29 ஜன 2023): சவூதி அரேபியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஆறுமாத இந்தியக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஹசிம் மற்றும் அவரது மனைவி ஜார்யா, ஆறுமாத குழந்தை அர்வா, மகன்கள் அயன் மற்றும் அஃப்னான் மற்றும் ஹசிமின் மாமியார் நஜ்முன்னிசா ஆகியோர் சவூதியில் உம்ரா செய்துவிட்டு அல்கோபரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். ரியாத்தில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள அல்…

மேலும்...

முஸ்லிம் தோற்றத்தில் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்!

மஸ்கட் (28 ஜன 2023): திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் ஓமன் மசூதிக்குச் சென்று அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தைத் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்ற தமிழச்சி தங்கபாண்டியன், அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஓமன் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்குள்ள மஸ்கட்டில் அமைந்துள்ள சுல்தான் கபூஸ் பெரிய மசூதிக்குச் சென்று இஸ்லாமிய உடையில் புகைப்படங்கள் எடுத்து பகிர்ந்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி…

மேலும்...

சவூதியில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

ரியாத் (28 ஜன 2023): சவுதி அரேபியாவில், எதிர்வரும் நாட்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காலநிலை மாற்றத்தின் விளைவாக, சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் குளிர் நிலவும் எனவும் மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ஜித்தாவில் பலத்த மழை பெய்தது. ரியாத் நகரிலும் இதே நிலைதான் இருந்தது. இதைத் தொடர்ந்து இந்த புதிய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. கிழக்கு மாகாணம், ரியாத் உள்ளிட்ட…

மேலும்...