இந்நேரம்

சவூதி அரேபியா ஜித்தாவில் உடல் நலக்குறைவு காரணமாக எட்டு வயது சிறுமி மரணம்!

ஜித்தா (16 ஜன 2023): சவூதி அரேபியா ஜித்தாவில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எட்டு வயது சிறுமி உயிரிழந்துள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்த சிறுமி காய்ச்சல், வாந்தி, தலைவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், ஸ்கேன் செய்து பார்த்ததில் இடுப்புப் பகுதியில் ரத்தக்கசிவு இருப்பது தெரியவந்தது. வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த குழந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது. நடைமுறைகள் முடிந்து இன்று பிற்பகல் அல் பைசலியா சமாதியில் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என ஜித்தா கேஎம்சிசி தெரிவித்துள்ளது.

மேலும்...

ஈரோட்டில் நடைபெறும் ஜமாத்துல் உலமாவின் தேச ஒற்றுமை மாநாடு – வீடியோ!

ஈரோடு (16 ஜன 2023): ஈரோட்டில் ஜமாத்துல் உலமா சார்பில் தேச ஒற்றுமை மாநாடு நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு அறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி வருகின்றனர். பிளாட்டினம் மஹாலில் நேற்று தொடங்கிய இந்த மாநாடு இன்று இரவு நிறைவுறும். இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும்...

முஸ்லிமாகும் நடிகர் ரஜினி?

சென்னை (16 ஜன 2023): நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் ஆந்திராவில் உள்ள தர்காவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுடன் சென்றிருந்தார். அச்சமயத்தில் நடிகர் ரஜினி முஸ்லிம் ஆகி விட்டார் என்ற செய்தி பரவி வந்தது. இந்நிலையில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதில் கிரிக்கெட் பயிற்சியாளராக நடிப்பதாக கூறப்படுகிறது. திரைப்பட கதாபாத்திரத்திற்காக…

மேலும்...

தஞ்சை மசூதிக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட ராணுவ வீரரை ராணுவத்திலிருந்து நீக்க கோரிக்கை!

தஞ்சாவூர் (16 ஜன 2023): தஞ்சாவூர் பள்ளிவாசலில் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தியவர் இராணுவத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அல் அன்சர் பள்ளிவாசலில் நேற்று அதிகாலையில் தற்சமயம் இராணுவத்தில் பணி புரியும் தஞ்சாவூர் ரஹ்மான் நகரைச் சேர்ந்த தேசிங்கு ராஜா (த/பெ ராஜேந்திரன்) என்பவர் தொழுகைக்கான அழைப்பு ஒலிவாங்கியில்…

மேலும்...

சவூதி உள்ளிட்ட அரபு நாடுகளில் கனமழை எச்சரிக்கை!

ரியாத் (16 ஜன 2023): சவூதி அரேபியாவில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திங்கள்கிழமை பிற்பகல் ரியாத் மற்றும் அல்-காசிசீமில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மக்கா, தபூக் மற்றும் மதீனாவில் லேசான மழை பெய்யும். கிழக்கு மாகாணம் மற்றும் வடக்கு எல்லைப் பகுதிகளில் காலை ஒன்பது மணி வரை பனிமூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம்…

மேலும்...

நேபாளத்தில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து!

பொக்ரா (16 ஜன2023): நேபாளத்தில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. பொக்ரா சர்வதேச விமான நிலையத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நேபாள தலைநகர் காத்மண்டுவின் திருபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட Yeti Airlines Flight 691 விமானம், பொக்ரா விமான நிலைய ஓடுபாதையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்துள்ளது. மோசமான வானிலையே காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணை தெரிவிக்கிறது. விபத்தின்போது 68 பயணிகளும் சிப்பந்திகளும் இருந்தனர். இச்…

மேலும்...

நான் ஏன் பிறந்தேன் என்பதை இஸ்லாத்தில் உணர்ந்தேன் – பிரபல பாப் பாடகர் நெகிழ்ச்சி!

மக்கா (15 ஜன 2023): பிரபல தென் கொரிய பாப் பாடகரும் யூடியூபருமான தாவூத் கிம், அவர் உம்ரா செய்த பிறகு சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார். இஹ்ராமில் உள்ள புகைப்படம் புனித ஹராமின் முன் இருந்து எடுக்கப்பட்டது.அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தனது அனைத்து கேள்விகளுக்கும் இஸ்லாம் பதிலளித்ததாகவும், அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த பூமியில் அவர் தான் அதிர்ஷ்டசாலி என்றும் எழுதியுள்ளார். “எனக்கு விருப்பமான மக்காவிற்கு மீண்டும் வந்திருக்கிறேன். இந்த இடம்…

மேலும்...

உலகிலேயே பாதுகாப்பான நாடு எது தெரியுமா?

கத்தார் (15 ஜன 2023): உலகிலேயே சிறந்த வாழ்க்கைத் தரமும், மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய சூழ்நிலைகளும் கொண்ட நாடுகளின் பட்டியல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் தர ஆய்வதில் உலகில் முன்னணி வகிக்கும் Numbeo நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. (இந்நேரம்.காம்) உலகில் 142 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் வெளியான இந்த பட்டியலில் கத்தார் நாடு முன்னணி வகிக்கிறது. Numbeo எனும் பன்னாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் மற்றும்…

மேலும்...

தமிழ்நாட்டு கவர்னருக்கு எதிரான கடிதம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்பு!

சென்னை (15 ஜன 2023): தமிழக சட்டசபையில் கவர்னர் உரையின்போது நடந்த நிகழ்வுகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான கடிதம் ஒன்றை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு எழுதி அனுப்பினார். அந்த கடிதத்தை ஜனாதிபதி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்தார். தமிழக சட்டசபையில், அரசு தயாரித்த உரையில் சில குறிப்பிட்ட பகுதிகளை பேசும்போது கவர்னர் ஆர்.என்.ரவி அதில் உள்ள பலதை வாசிக்கவில்லை. மேலும் சில கருத்துகளை அவர் சொந்தமாகவும் பேசினார். கவர்னரின் இந்த செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்…

மேலும்...

மசூதிகள் பராமரிப்பு நிதி ரூ 10 கோடியாக உயர்வு – முதல்வர் ஸ்டாலினுக்கு ஜவாஹிருல்லா நன்றி!

சென்னை (14 ஜன 2023): பள்ளிவாசல்களுக்கான பராமரிப்பு நிதியை 10 கோடியாக அதிகரித்து அறிவிப்பு வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ‘தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கக்கூடிய தீர்மானத்தில் நான் பேசியபோது தமிழ்நாடு வக்ஃபு வாரியம் வழியாக தமிழ்நாடு பள்ளிவாசல்களுக்கு வழங்கக்கூடிய Major Repair Grant (MRG) நிதியை அதிகரித்து தரவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை…

மேலும்...