கொரோனா பாதிப்பு இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் அதிகரிப்பு – இறப்பு எண்ணிக்கையும் உயர்வு!

புதுடெல்லி (31 மே 2020): இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளன. கொரோன வைரஸ் காரணமாக க இறந்தவர்களின் எண்ணிக்கை 5164 ஆக உயர்ந்துள்ளது. சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 8380 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு நாளில் உறுதிப்படுத்தப்பட்ட அதிக எண்ணிக்கையாகும். இதன் மூலம் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 182142 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 89995 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 86984 பேர்…

மேலும்...

கிராமத்தில் நுழைந்த போலீஸ் முஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் – வீடியோ!

ஷாம்லி (31 மே 2020): உத்திர பிரதேசம் ஷாம்லி மாவட்டத்தில் கிராமத்தில் நுழைந்த போலீஸார் பெண்கள் உட்பட பலர் மீது கண்முடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தின் தப்ரானா கிராமத்தில் மாட்டை கொலை செய்த வழக்கில் அப்சல் என்பவரை கைது செய்யச் சென்ற போலீசாருக்கும் கிராமத்தினருக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்தே கிராம மக்கள் மீது போலிசார் தாக்குதல் நடத்தியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் கிராம மக்கள் கூறுகையில், போலீசார் திட்டமிட்டே கிராம மக்கள்…

மேலும்...

நமஸ்தே ட்ரம்ப் நிகழ்வுதான் இந்தியாவில் கொரோனா பரவ காரணம் – சிவசேனா குற்றச்சாட்டு!

மும்பை (31 மே 2020): பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வைத்து அகமதாபாத்தில் நடைபெற்ற நமஸ்தே ட்ரம்ப் நிகழ்வு, குஜராத்திலும் மும்பை மற்றும் டெல்லியிலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணம் என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் குற்றம் சாட்டியுள்ளார். எந்தவொரு திட்டமும் இல்லாமல் ஊரடங்கை செயல்படுத்தியது மத்திய அரசு ஆனால் இப்போது மாநிலங்களை குற்றம் சாட்டுகிறது என்று ராவத் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் நடைபெறும் விகாஸ் அகாடி அரசை டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசு…

மேலும்...

நிர்மலா சீதாராமன் நீக்கம்? – மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?

புதுடெல்லி (31 மே 2020): மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனை நீக்கிவிட்டு தேசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் பதவியை நேற்று ராஜினாமா செய்த கே.வி.காமத், புதிய நிதியமைச்சராக நியமிக்கப்படலாம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மத்திய நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாரமன் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார். நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியை அவரால் சரிவர சரிசெய்ய முடியவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. இந்நிலையில் பிரிக்ஸ் எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய…

மேலும்...

பிரதமர் கேர் நிதி குறித்து விளக்கம் அளிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு!

புதுடெல்லி (30 மே 2020): பிரதமர் கேர் நிதி குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரியிருந்ததற்கு பிரதமர் அலுவலகம் விளக்கம் அளிக்க மறுத்துவிட்டது. கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க நிதி உதவி அளிக்குமாறு பிரதமர் கோரிக்கை விடுத்ததின் பேரில், பி.எம்.கேர்ஸ் எனப்படும் பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், நடிகர்கள் என பலரும் நிதிஉதவி அளித்து வருகின்றனர். பிரதமர் நிவாரண நிதி PMNRF இருக்கும்போது இப்போ புதுசா எதுக்கு…

மேலும்...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட வழக்கில் கைதான இஸ்ரத் ஜஹானுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன்!

புதுடெல்லி (30 மே 2020): காங்கிரஸ் முன்னாள் நகராட்சி கவுன்சிலரும், சிஏஏ-என்ஆர்சிஐ-என்ஆர்சி எதிர்ப்பாளருமான இஷ்ரத் ஜஹானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை சட்ட எதிர்ப்பு அமைதி போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்ரத் ஜஹான் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்தர் ராணா ஜஹானுக்கு ஜூன் 10 முதல் ஜூன் 19 வரை இடைக்கால ஜாமீன் வழங்கினார். இஷ்ரத் மீதான ஜாமீன் மனுவில், இந்த விவகாரத்தில்…

மேலும்...

13 வயது மகளை வன்புணர்ந்த கொடூர தந்தை கைது!

ஐதராபாத் (30 மே 2020): பெற்ற 13 வயது மகளையே வன்புணர்ந்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அதிலும் தந்தையே மகளை வன்புணரும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் விகராபாத் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் 46 வயதான ஒருவர் வீட்டில் தனியாக இருந்த தனது 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த வெட்கக்கேடான சம்பவத்தை செய்த தந்தை,…

மேலும்...

இந்தியாவில் ஜூன் 8 முதல் 30 ஆம் தேதி வரை தளர்த்தப்படும் தளர்வுகள்!

புதுடெல்லி (30 மே 2020): கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடெங்கும் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ஜூன் 8 முதல் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்படும் முதல்கட்ட தளர்வுகள்: *ஜூன் 8 முதல் ஹோட்டல்கள், ஷாப்பிங்மால்கள் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி. இரண்டாம் கட்ட தளர்வுகள்: இரண்டாம் கட்ட தளர்வுகளில் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பு குறித்து மாநில அரசுகளின் ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும். மூன்றாம் கட்ட தளர்வுகள்:…

மேலும்...

நாடு முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீடிப்பு!

புதுடெல்லி (30 மே 2020): கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடெங்கும் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24-ம் தேதியில் இருந்து லாக்டவுன் அமலில் இருக்கிறது. இதுவரை நான்கு முறை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருமுறையும் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 31ம் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் லாக்டவுன் 5.0 குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டு…

மேலும்...

வில்லன் நடிகரின் ஹீரோ சேவை – சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு!

கொச்சி (30 மே 2020): பிரபல வில்லன் நடிகர் சோனு சூட் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல தனி விமானத்தை ஏற்பாடு செய்து அசத்தியுள்ளார். கேரளாவில் தங்கியிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 167 பேர் ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இவர்களை ஏர் ஆசியா தனி விமானம் மூலம் ஒடிசா மாநிலத்திற்கு செல்வதற்கு பேருதவி புரிந்துள்ளார் சோனு சூட். லாக்டவுன் தொடங்கிய காலங்களிலிருந்தே சோனு சூட் மும்பையிலிருந்து பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பேருந்துகளில் ஊருக்கு…

மேலும்...