12 தப்லீக் ஜமாஅத்தினர் சிறைக்கு அனுப்பி வைப்பு!

ஷாஜஹான்பூர் (01 மே 2020): உத்திர பிரதேசத்தில் கொரோனா தனிமைப் படுத்தலுக்குப் பிறகு 12 தப்லீக் ஜமாஅத்தினர் தாற்காலிக சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இதில் தப்லீக் ஜமாஅத்தினர் சிலரும் கொரோனாவால் பாதிக்கப் பட்ட நிலையில், தாய்லாந்தை சேர்ந்த 9 பேர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் அரசின் உத்தரவை மீறியதாகக் கூறி அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு தற்போது தற்காலிக சிறைக்கு அனுப்பப் பட்டனர்….

மேலும்...

கொரோனா அச்சம் – இறந்த இந்துவின் உடலிற்கு இறுதிச் சடங்கு செய்த முஸ்லிம்கள்!

ஐதராபாத் (30 ஏப் 2020): இறந்த இந்து பெண்மணியின் உடலை இறுதிச் சடங்கு செய்ய அவரது உறவினர்களே தயங்கிய நிலையில் முஸ்லிம்கள் முன்னின்று இறுதிச் சடங்குகளை செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் பிஜேஆர் நகரை சேர்ந்த 85 வயது இந்து விதவை பெண் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். ஆனால் அவர் கொரோனாவால் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சிய அவரது உறவினர்கள் அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய முன்வரவில்லை. இதனை அறிந்த அருகில் வசிக்கும் முஸ்லிம்கள் ரம்ஜான் நோன்பு…

மேலும்...

மளிகை வாங்க அனுப்பினேன் மனைவி வாங்கி வந்தான் – மகன் மீது தாய் புகார்!

புதுடெல்லி (30 ஏப் 2020): மளிகை வாங்க அனுப்பிய மகன் மனைவியுடன் திரும்பி வந்ததாக தாய் ஒருவர் உத்திர பிரதேசம் சாஹிபாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையி உத்திர பிரதேசம் காசியாபாத் பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதி உள்ளதால் குட்டு என்பவரை அவரது தாயார் மளிகை பொருட்கள் வாங்க மகனை கடைக்கு அனுப்பினார். ஆனால் சில மணி நேரங்களில் மகன் பெண்…

மேலும்...

வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினரும் பிளாஸ்மா தானம் – பொய் பரப்புரைகளுக்கு தொடர் பதிலடி!

புதுடெல்லி (30 ஏப் 2020): கொரோனா பாதித்தவர்களின் சிகிச்சைக்கு உதவும் விதமாக வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினரும் தங்களது பிளாஸ்மாவை தானமாக வழங்க முன்வந்துள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் உலகின் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதில் சீனா, இத்தாலி, அமெரிக்கா, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அதிக உயிரிழப்புகளையும் இந்நாட்டுகள் சந்தித்துள்ளன. மேலும் இந்தியாவிலும் அதிக அளவில் கொரோனா பரவிவருகிறது. இது இப்படியிருக்க இந்தியாவில் கொரோனா பரவ முஸ்லிம்களே காரணம்…

மேலும்...

இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுரம் ராஜன் ராகுல் காந்தி பேச்சுவார்த்தை!

புதுடெல்லி (30 ஏப் 2020): ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுடன் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பொருளாதார விளைவுகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் சுகாதாரம் மற்றும் பொருளாதார ரீதியில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள விளைவுகள், சந்திக்க வேண்டிய சவால்கள் உள்ளிட்டவை குறித்து திரு. ராகுல் காந்தி, ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய ரகுராம் ராஜன், “ கொரோனா ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழல்…

மேலும்...

பண மோசடி செய்தவர்களை மறைத்தது ஏன்? பாஜகவின் கூட்டாளிகள் என்பதாலா? – ராகுல் காந்தி விளாசல்!

புதுடெல்லி (29 ஏப் 2020): நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ. 68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரம் குறித்து ராகுல் காந்தி பாஜகவை கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட வங்கி மோசடியாளர்கள் 50 பேர் வாங்கிய ரூ.68 ஆயிரத்து 607 கோடி கடனை…

மேலும்...

இந்தியாவின் 50 தொழில் அதிபர்களின் கடன் தள்ளுபடி – ரிசர்வ் வங்கி அதிர்ச்சித் தகவல்!

புதுடெல்லி (29 ஏப் 2020): நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டார். இதேபோல் வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோரும் பல வங்கிகளில் பணம் கடன் வாங்கிவிட்டு…

மேலும்...

மோடியை பின் தொடர்வதை நிறுத்திய வெள்ளை மாளிகை!

வாஷிங்டன் (29 ஏப் 2020): ட்விட்டரில் பிரதமர் மோடியை பின் தொடர்ந்து வந்த வெள்ளை மாளிகை தற்போது அதிலிருந்து விலகியுள்ளது. 22 மில்லியன் பின் தொடர்பாளர்களை கொண்ட வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் அலுவலகம் ஆகிய டுவிட்டர் கணக்குகளை பின் தொடர்ந்திருந்தது. இந்நிலையில், தற்போது மோடி, ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் கணக்குகளை பின் தொடர்வதை நிறுத்தியுள்ளது.. தற்போது வெறும்…

மேலும்...

கொரோனா சோதனை முறையில் முரண்பாடான முடிவு – கருவிகளை சீனாவுக்கு அனுப்ப வலியுறுத்தல்!

புதுடெல்லி (29 ஏப் 2020): கொரோனா வைரசைக்‍ கண்டறிய சீனாவிடமிருந்து வாங்கப்பட்ட Rapid Test சாதனங்கள் துல்லியமாக செயல்படவில்லை என்றும், முரண்பாடான முடிவுகளைக்‍ காட்டுவதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்‍ கழகம் ICMR தெரிவித்துள்ளது. இந்தக்‍ கருவிகளை உடனடியாக சீனாவுக்‍கு திருப்பி அனுப்புமாறும் அனைத்து மாநில அரசுகளையும் வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், வைரஸ் நோயை விரைவாகக்‍ கண்டறிய Rapid Test Kit சாதனங்கள் சீனாவிடமிருந்து வாங்கிப் பயன்படுத்தப்பட்டன. இந்த…

மேலும்...

ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பா? -பிரதமர் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை!

புதுடெல்லி (27 ஏப் 2020): ஊரட‍ங்கை மீண்டும் நீட்டிப்பது குறித்து, மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்தினார். இந்தியாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், அடுத்த மாதம் 3-ம் தேதி வரை, நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து, பிரதமர் மோடி, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை நடத்தினார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி…

மேலும்...