இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்வு!

புதுடெல்லி (24 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கிறது கரோனா வைரஸ். உலக நாடுகளில் பெரும்பாலானவை திணறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. பிரான்ஸிலிருந்து இந்தியா வந்த 19 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

கொரோனாவின் வீரியத்தை மக்கள் சரிவர புரிந்து கொள்ளவில்லை – பிரதமர் மோடி கவலை!

புதுடெல்லி (24 மார்ச் 2020): கொரோனா வைரஸின் தாக்கத்தை மக்கள் இன்னும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று பிரதமா் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மக்கள் இன்னும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. தயவு செய்து அவ்வப்போது வெளியிடப்படும் அறிவிப்புகளை முறையாகப் பின்பற்றி, நீங்கள் பாதுகாப்புடன் இருந்து உங்கள் குடும்பத்தினரை கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ளுங்கள். கரோனா…

மேலும்...

கொரோனாவுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மருந்து பரிந்துரை!

புதுடெல்லி (23 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்ட நோயாளிகளுக்கு, மலேரியா நோயாளிகளுக்கு வழங்கும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை வழங்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. கொரோனா வைரஸ் உலகமெங்கும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவையும் அது விட்டுவைக்கவில்லை. இந்நிலையில் இதற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை கரோனா சிகிச்சைக்கு அமெரிக்கா பரிந்துரைத்துள்ளது. இதனை, இந்தியாவும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த மருந்து மலேரியாவுக்கு வழங்கப்படும் மருந்தாகும். நோயின்…

மேலும்...

இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

புதுடெல்லி (23 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கிறது கரோனா வைரஸ். உலக நாடுகளில் பெரும்பாலானவை திணறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். 55 வயது மதிக்கத்தக்கவர் மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதுவரை இந்தியாவில் 415 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...

கொரோனா எதிரொலி – வங்கிகளின் முக்கிய சேவைகள் ரத்து -வேலை நேரம் மாற்றம்!

புதுடெல்லி (23 மார்ச் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகளின் பணி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு சில முக்கிய சேவைகளையும் வங்கிகள் ரத்து செய்துள்ளன. அதன்படி, வங்கிகளின் பணி நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என மாற்றப்பட்டுளள்து. அதாவது, தினமும் வங்கிகள் 4 மணி நேரம் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், பாஸ்புக் பதிவு மற்றும்…

மேலும்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 400 ஐ தொட்டது!

புதுடெல்லி (23 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 400 ஐ தொட்டுள்ளது. எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கிறது கரோனா வைரஸ். உலக நாடுகளில் பெரும்பாலானவை திணறிக் கொண்டிருக்கின்றன. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3 லட்சத்தையும், பலியானோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில் இந்தியாவிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் திங்கள் கிழமை காலை வரை உள்ள…

மேலும்...

இந்தியாவில் பரவும் கொரோனா – பாதித்தவர்களின் எண்ணிக்கை 360 ஆக உயர்வு!

புதுடெல்லி (22 மார்ச் 2020): இந்தியாவில் கரோனா வைரஸால் பாதித்தோரின் எண்ணிக்கை 360 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3 லட்சத்தையும், பலியானோர் எண்ணிக்கை 13,050 யையும் தாண்டியுள்ள நிலையில் இந்தியாவிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் மார்ச் 31 வரை ரயில்வே சேவை ரத்து…

மேலும்...

டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

புதுடெல்லி (22 மார்ச் 2020): குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் போராட்டம் நடைபெறும் பகுதியின் அருகில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி கேட்டுக் கொண்டபடி மக்கள் ஊரடங்கு நாடுமுழுவதும் இன்று காலை 7 மணி முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தலைநகர் டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்கள் எவ்வித போக்குவரத்துமின்றி வெறிச்சோடி கிடக்கின்றன. மக்கள் ஊரடங்கு அமலில் இருந்தாலும் சில கட்டுப்பாடுகளுடனும்…

மேலும்...

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் இருவர் பலி – பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

புதுடெல்லி (22 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். இந்தியாவில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 38 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தியாவில் இன்று ஒரேநாளில் கரோனாவால் 2 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போதுள்ள உள்ள நிலவரப்படி நாடு முழுவதும் 341 பேர் வைரஸ்…

மேலும்...

இந்தியாவில் சுய ஊரடங்கு உத்தரவு தொடங்கியது – கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 332 ஆக உயர்வு!

புதுடெல்லி (22 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று சுய ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் , இந்தியாவின் முக்கிய மாநகரங்கள், நகரங்கள் அனைத்தும் வெறிச்சோடியுள்ளன. மக்கள் நடமாட்டமோ, வாகனப் போக்குவரத்தோ இல்லாமல் தெருக்கள், சாலைகள் துடைத்து வைத்ததைப் போல காட்சியளிக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸால்…

மேலும்...