இமாச்சல பிரதேச முதல்வராக சுக்விந்தர்சிங் சுக்கு நாளை பதவியேற்பு!

புதுடெல்லி (10 டிச 2022): இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழுவுக்கு தலைமை தாங்கிய நடத்திய சுக்விந்தர்சிங் சுக்கு, மாநில முதல்வராக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இமாசலப் பிரதேசத்தின் முதல்வராக 58 வயதாகும் சுக்விந்தர்சிங் சுக்குவின் பெயரை தேர்வு செய்துவிட்டதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தௌன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுக்விந்தரை, முதல்வராக கட்சித் தலைமை விரைவில் அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. சுக்விந்தர்சிங் சுக்கு, கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும்…

மேலும்...

குஜராத்தில் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளர் மட்டுமே வெற்றி!

அஹமதாபாத் (10 டிச 2022): நடந்து முடிந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 8-ம் தேதி எண்ணப்பட்டன. இத்தேர்தலில் 156 தொகுதிகளில் வெற்றிபெற்று குஜராத்தில் தொடர்ந்து 7வது முறையாக பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. காங்கிரஸ் 17 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. ஆம் ஆத்மி 5 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. இந்நிலையில், குஜராத்தில்…

மேலும்...

காங்கிரஸ் மீது முஸ்லிம் லீக் குற்றச்சாட்டு!

புதுடெல்லி (10 டிச 2022): “மாநிலங்களவையில் பொதுசிவில் சட்ட மசோதா அறிமுகப்படுத்தியபோது காங்கிரஸ் எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இல்லை” என்று முஸ்லிம் லீக் எம்பி பி.வி அப்துல் வஹாப் குற்றம் சாட்டியுள்ளார். “தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் வரிசையில் காங்கிரஸ் இல்லை என்று அவர் தெரிவித்தார். கடந்த காலங்களைப் போல் தேசிய அளவில் எதிர்க்கட்சி வரிசையில் ஒற்றுமை இல்லை.” என்று அப்துல் வஹாப் தெரிவித்தார். மேலும் ராஜ்யசபாவில் அமலாக்க சட்டம் குறித்த தனியார் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது காங்கிரஸ் உறுப்பினர்கள்…

மேலும்...

பொது சிவில் சட்டம் – மாநிலங்களவையில் தனிநபர் மசோதா தோல்வி!

புதுடெல்லி (09 டிச் 2022): : சர்ச்சைக்குரிய பொது சிவில் சட்ட தனிநபர் மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்ய அனுமதி கோரப்பட்டது. பாஜக எம்பி கிரோடி லால் மீனா, பொதுசிவில் சட்ட மசோதாவை தனிப்பட்ட மசோதாவாக அறிமுகப்படுத்த அனுமதி கோரினார். ஒப்புதலுக்கு வாக்களிக்க ராஜ்யசபா சபாநாயகர் அனுமதி அளித்தார். இதையடுத்து சபையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதியாக, மாநிலங்களவையில் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக 23 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. முன்னதாக பொது சிவில் சட்ட…

மேலும்...

முஸ்லிம் பெண்கள் திருமண வயதை ஒருங்கிணைக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

புதுடெல்லி (09 டிச 2022): முஸ்லிம் பெண்களின் திருமண வயதை ஒருங்கிணைக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 18 வயதுக்குட்பட்ட முஸ்லிம் பெண்களின் திருமணம் முஸ்லிம் தனிநபர் சட்டத்தின்படி செல்லுபடியாகும் என பல்வேறு உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருந்தன. இதன் காரணமாக முஸ்லிம் பெண்களின் திருமண வயதை ஒருங்கிணைக்க வேண்டும் என மகளிர் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தது. இந்த மனு மீது நடந்த விசாரணையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசு தனது…

மேலும்...

குஜராத்தில் காங்கிரஸின் தோல்விக்கு காரணமான உவைசியும் ஆம் ஆத்மியும்!

அஹமதாபாத் (09 டிச 2022): ஆம் ஆத்மி கட்சியும் (ஏஏபி) மற்றும் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியும் குஜராத்தில் சிறுபான்மையினரின் வாக்குகளை பிரித்து காங்கிரஸின் கனவை தகர்த்துள்ளது. குஜராத்தில் சிறுபான்மையினர், முதன்மையாக முஸ்லீம்கள், கடந்த பல தசாப்தங்களாக, குறிப்பாக 2002 பிந்தைய குஜராத் கலவரத்திற்குப் பிறகு காங்கிரஸின் விசுவாசமான வாக்காளர்களாக உள்ளனர். இந்நிலையில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடந்து, டிசம்பர் 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. பாரதிய…

மேலும்...

சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை ரத்து செய்தது ஒன்றிய அரசு!

புதுடெல்லி (09 டிச 2022): நாட்டின் சிறுபான்மை ஆராய்ச்சி மாணவர்களுக்கான மௌலானா ஆசாத் கல்வி உதவித் தொகை ரத்து செய்யப் பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார். லோக்சபாவில் டி.என்.பிரதாபன் எம்.பி.யின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் இதனை ஸ்மிரிதி இரானி தெரிவித்தார். “சிறுபான்மை மாணவர்கள் பல்வேறு சலுகைகளை பெறுவதால் இது நிறுத்தப்படுவதாக” ஸ்மிரிதி இரானி தெரிவித்தார். 2022-23 கல்வியாண்டிலிருந்து சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை தொடராது என்று முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும் அவர்…

மேலும்...

குஜராத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் வெற்றியை அள்ளிய பாஜக!

அஹமதாபாத் (08 டிச 2022): குஜராத்தில் முஸ்லிம்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ள 19 சட்டமன்றத் தொகுதிகளில் 17 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. குஜராத் சட்டசபையில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் ஒரு முஸ்லீம் வேட்பாளரை கூட பாஜக நிறுத்தவில்லை என்ற உண்மை இருந்தபோதிலும் இது நடந்துள்ளது. இதற்கிடையில், மீதமுள்ள 19 இடங்களில் ஜமால்பூர்-காடியா மற்றும் வத்காம் ஆகிய 2 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதேவேளை பாஜக வெற்றிபெற்ற பல தொகுதிகளில், பல முஸ்லிம் வேட்பாளர்கள் பாஜக…

மேலும்...

டெல்லியில் முஸ்லிம் வாக்குகளை இழந்த ஆம் ஆத்மி கட்சி!

புதுடெல்லி (08 டிச 2022): டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (எம்சிடி) தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) வெற்றி பெற்றாலும் பெரும்பாலான முஸ்லிம் வாக்குகளை இழந்துள்ளது 2020 சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் ஆம் ஆத்மி தனது முஸ்லிம் வாக்குகளில் 14% மற்றும் தலித் வாக்குகளில் 16% இழந்துள்ளது. ஜாகிர் நகர், ஷாஹீன் பாக் போராட்டங்கள் நடந்த பகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மேலும் முஸ்தபாபாத்திலும் ஆம் ஆத்மி தோல்வியடைந்துள்ளது. ஜாகிர் நகரில் ஆம் ஆத்மி கட்சியின்…

மேலும்...

பாஜகவுக்கு பலத்த அடி – குஜராத்தில் மட்டுமே கொண்டாட்டம்!

புதுடெல்லி (08 டிச 2022): குஜராத்தில் 182 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல், 2 கட்டங்களாக நடைபெற்றது. டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5ம் தேதி 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, இன்று காலை தொடங்கியது. காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் குஜராத்தில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. அதேவேளை இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இமாச்சல பிரதேசத்தில்…

மேலும்...