நிர்வாணமாக்கி சித்ரவதை செய்யப்பட்டேன்: சிறை அனுபவங்கள் குறித்து டாக்டர் கஃபீல்கான்!

பெங்களூரு (06 டிச 2022): கோராக்பூர் சம்பவத்திற்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் கஃபீல்கான், தனது சிறை அனுபவங்கள் பகிர்ந்து கொண்டுள்ளார். பெங்களூரில் நடந்த எழுத்தறிவு விழா நிகழ்வின் போது, “கோரக்பூர் மருத்துவமனை சோகம்” என்ற புத்தகத்தைப் பற்றி பேசினார். அப்போது, “சிறையில் என்னை நிர்வாணமாக்கி, பெல்ட் மற்றும் லத்தி தடி போன்றவற்றால் தாக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டேன். மூன்று முதல் நான்கு நாட்கள் காவலில் இருந்தும், போலீசார் உணவு வழங்கவில்லை. வெளியில் சிக்கன், இட்லி தோசை, கேக்…

மேலும்...

ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு நடந்த பிரசவம்!

புதுடெல்லி (05 டிச 2022): ஓடும் பேருந்தில் பெண் ஒருவருக்கு நடந்த பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லியில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் சிப்ரமாவ் நோக்கி சென்று கொண்டிருந்த மாநில சாலைப் பேருந்தில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. டிரைவர் உடனடியாக பேருந்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பேருந்திலேயே பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. இதுகுறித்து பெண்ணின் கணவர் சோமேஷ் கூறுகையில் “பஸ் டிரைவரும் நடத்துனரும்…

மேலும்...
Supreme court of India

கட்டாய மதமாற்றம் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (05 டிச 2022): கட்டாய மத மாற்றத்துக்கு எதிரான சட்டங்கள் குறித்து மாநில அரசுகளின் விரிவான பிரமாணப் பத்திரங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டாய மத மாற்றம் நாட்டில் பரவலாக நடைபெறுவதாக சுட்டிக் காட்டி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் இன்று பரிசீலித்தது. இந்த மனு இம்மாதம் 12ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. தனிநபர்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி மதமாற்றம் செய்யக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மத மாற்றம்…

மேலும்...

குஜராத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் பாஜக – கருத்துக்கணிப்புகள் வெளியீடு!

ஆமதாபாத் (05 டிச 2022): பாஜக தற்போது ஆண்டு வரும் மாநிலங்களான இமாச்சல் பிரதேசத்திலும், குஜராத்திலும் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இமாச்சல் பிரதேசத்தில் கடந்த நவம்பர் மாதம் 12ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 1ந்தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிந்துள்ளது. இரு மாநிலங்களில் பதிவான வாக்குகள் வரும் 8ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்நிலையில் வாக்குப்பதிவுக்கு…

மேலும்...

தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழப்பு!

ஐதராபாத் (05 டிச 2022): தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கி ஒரு வயது சிறுவன் உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலம் நெகொண்டா மண்டலத்தைச் சேர்ந்த படாவத் மாலு கவிதா மகன் மணிகண்டா (1) என்ற குழந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை விளையாடுவதற்காக பெற்றோர் பூஜைக்காக வைத்திருந்த தேங்காய் துண்டை கொடுத்துள்ளனர். குழந்தை விளையாடிக்கொண்டிருந்தபோது தேங்காய் துண்டை திண்றுள்ளது. அப்போது தேங்காய் துண்டு குழந்தையின் தொண்டையில் சிக்கியுள்ளது. குழந்தை அலறல் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்….

மேலும்...

எஸ் எம் எஸ்ஸில் பூத் சிலிப் அனுப்பிய பாஜக – அதிர்ச்சியான வாக்காளர்கள்!

காந்திநகர் (05 டிச 2022): குஜராத்தில் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பாஜகவினர் எஸ் எம் எஸ் மூலம் பூத் சிலிப் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 2ம் கட்ட சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு பூத் சிலிப் இணைப்புகளுடன் பாரதீய ஜனதா கட்சி எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. எஸ் எம் எஸ் பெற்ற வாக்காளர்களின் மொபைல் எண்களை பாஜக எவ்வாறு பெற்றது என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்த விவரங்களை சமூக ஆர்வலர் ஒருவர்…

மேலும்...

நாங்க ஒன்றாகத்தான் இருப்போம் – ஒரே ஆணை மணந்த இரட்டை சகோதரிகள்!

மும்பை (05 டிச 2022): மும்பை அந்தேரியை சேர்ந்தவர் அதுல் உத்தம். இவர் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார். காந்திவலியை சேர்ந்தவர்கள் பிங்கி, ரிங்கி. இரட்டையர்களான இச்சகோதரிகள் இரண்டு பேரும் தகவல் தொழில் நுட்பத்துறையில் பொறியியல் படிப்பு படித்துவிட்டு ஒரே கம்பெனியில் வேலை செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரட்டையர்களின் தந்தை இறந்து போனார். இதையடுத்து இருவரும் தாயாரின் பராமரிப்பில் வசித்து வந்தனர். அப்போது, அவர்களின் தாயார் விபத்தில் சிக்கிய போது அவரை மருத்துவமனைக்கு அழைத்து…

மேலும்...

மத ஒற்றுமையை சீர்குலைப்பதாக எம்பி பத்ருத்தீன் அஜ்மல் மீது எதிர்கட்சிகள் புகார்!

கவுஹாத்தி (05 டிச 2020;): மத ஒற்றுமையை சீர்குலைப்பதாகக் கூறி அஸ்ஸாம் எம்பி பத்ருத்தீன் அஜ்மல் மீது எதிர் கட்சிகள் போலீசில் புகார் அளித்துள்ளன. இந்துக்களும் முஸ்லிம்கள் போல் தங்கள் பிள்ளைகளுக்கு இளம்வயதிலேயே திருமணம் செய்துவைக்க வேண்டும்” என்று அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் பத்ரூதீன் அஜ்மல் யோசனை தெரிவித்துள்ளார். அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், “இந்தியாவில் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டுவர வேண்டும். இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம்…

மேலும்...

பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்!

போபால் (04 டிச 2022): மத்திய பிரதேசத்தில் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேசம் கன்யாசாவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் ராஜேஷ் கண்ணோஜே பள்ளி அதிகாரிகளால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நவம்பர் 25 ஆம் தேதி, யாத்திரை மத்தியப் பிரதேசத்தின் பர்வானி மாவட்டத்தை அடைந்தபோது, ​​​​ஆசிரியர் யாத்திரையில் பங்கேற்றார். ஆசிரியர் பள்ளி விடுமுறையில் யாத்திரையில் கலந்து கொண்டார். அவர் பேரணியில் பங்கேற்ற புகைப்படங்களையும் தனது…

மேலும்...

சாக்லேட்டில் விஷம் -மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

மும்பை (04 டிச 2022): மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அடையாளம் தெரியாத நபர் மாணவர்களுக்கு வழங்கிய சாக்லேட்டில் விஷம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர் வழங்கிய சாக்லேட் சாப்பிட்ட 17 மாணவர்களுக்கு உணவு விஷம். மல் இந்த சம்பவம் நடந்துள்ளது. காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் விநியோகித்த சாக்லேட்டை சாப்பிட்ட மாணவர்களுக்கு உணவு விஷம் ஏற்பட்டது. மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். வடக்கு அம்பாசாரி சாலையில்…

மேலும்...