135 பேர் பலியான தொங்கு பால விபத்து – பாஜகவின் வெற்றியை பாதிக்கவில்லை!

அஹமதாபாத் (08 டிச 2022): குஜராத்தில் 135 பேர் பலியான தொங்கு பால விபத்து நடந்த மோர்பியில் பாஜக முன்னிலை வகிக்கிறது. குஜராத்தில் 182 தொகுதிகளுக்கான சட்டச்சபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5ம் தேதி 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் குஜராத்தில்…

மேலும்...

ஆம் ஆத்மியால் குஜராத்தில் மண்ணை கவ்விய காங்கிரஸ்!

அகமதாபாத் (08 டிச 2022): : குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸின் பாரம்பரிய வாக்கு வங்கியில் கால் பதித்ததால், காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. முதல் கட்ட முடிவுகளின்படி ஆம் ஆத்மி கட்சி 13 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரசுக்கு 26 சதவீதம். இதற்கிடையில் பாஜகவின் வாக்கு வங்கி அசைக்கப் படவில்லை. 182 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அக்கட்சி முன்னிலையில் உள்ளது. 2017ல் பாஜக 99 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ்…

மேலும்...

குஜராத்தில் முஸ்லிம் வாக்குகளைப் பிரித்த உவைசி!

ஆமதாபாத் (08 டிச 2022): குஜராத்தில் வெல்ல முடியாது என்ற நிலையில் வேண்டுமென்றே வேட்பாளர்களை நிறுத்தி, அசாதுத்தீன் உவைசி முஸ்லிம் வாக்குகளை பிரிக்கும் நிலை தற்போதும் ஏற்பட்டுள்ளது. பொதுவாக முஸ்லிம் வாக்குகளை உவைசி பிரித்துவிடுவார் என்ற கணிப்பு எல்லா தேர்தல்களிலும் இருந்து வருகிறது. பாஜகவின் பி-டீமாக உவைசி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் பரவலாகவும், வலுவாகவும் உவைசி மீது உள்ளன. பாஜகவுக்கு எதிரான ஓட்டுக்கள், காங்கிரஸ், மற்றும் ஆம் ஆத்மிக்கு பிரிந்து போக சூழல் உள்ளது. குஜராத்தில் மஜ்லீஸ்…

மேலும்...

காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு தாவிய ஹர்திக் படேல் பின்னடைவு!

ஆமதாபாத் (08 டிச 2022): குஜராத்தில் நட்சத்திர வேட்பாளர்கள் அனைவரும் முன்னேறி வரும் நிலையில், பாஜகவின் அல்பேஷ் தாக்கூர், ஹர்திக் படேல் ஆகியோர் பின்தங்கியுள்ளனர்.ப்ஜிக்னேஷ் மேவானி முன்னிலையில் உள்ளார். குஜராத் முதல்வர் வேட்பாளர் பூபேந்திர படேல் முன்னிலை வகிக்கிறார். வட்காமில் ஜிக்னேஷ் மேவானியும், கம்பலியாவில் ஆப்ஸின் இசுடன் காட்வியும் முன்னேறி வருகின்றனர். காந்தி நகர் தெற்கில் அல்பேஷ் தாக்கூர் பின்தங்கியுள்ளார். விரங்கத்திலும் ஹர்திக் படேல் பின்தங்கியுள்ளார். ஜாம்நகரில் பாஜகவின் ரிவாபா ஜடேஜாவும் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸில் இருந்து…

மேலும்...

குஜராத்தில் பாஜக முன்னிலை!

ஆமதாபாத் (08 டிச 2022): குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலை வகிக்கிறது. குஜராத்தில் பாஜக 100ஐ தாண்டியுள்ளது. பாஜக தற்போது 128 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 43 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆம் ஆத்மி கட்சியால் மாநிலத்தில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

மேலும்...

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னிலை!

புதுடெல்லி (08 டிச 2022): இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 20 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

மேலும்...
Supreme court of India

நாட்டில் யாரும் உணவின்றி உறங்கக்கூடாது – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (07 டிச 2022): நாட்டில் யாரும் உணவின்றி வெறும் வயிற்றில் தூங்கக் கூடாது என்பதே நமது கலாச்சாரம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாட்டின் கடைசி நபருக்கும் உணவு தானியங்கள் சென்றடைவதை உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலை மற்றும் நிதிப் பாதுகாப்பை இழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் எம்.ஆர்.ஷா…

மேலும்...

டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள் – ஆம் ஆத்மி முன்னிலை!

புதுடெல்லி (07 டிச 2022): டெல்லி மாநகராட்சி தேர்தலின் முதல் முடிவுகள் வெளியாகியுள்ளன. கருத்துக்கணிப்பு முடிவுகள் கணித்தபடி ஆம் ஆத்மி கட்சியே முன்னேறி வருகிறது. ஆம் ஆத்மி 86 இடங்களிலும், பாஜக 72 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னேறி வருகின்றன. டெல்லி மாநகராட்சியில் 250 வார்டுகள் உள்ளன. அறுதிப் பெரும்பான்மை பெற 126 வார்டுகளில் வெற்றி பெற வேண்டும்.

மேலும்...

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

புதுடெல்லி (06 டிஸா 2022): குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. தலைமை நீதிபதி யு.யு. லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை பரிசீலிக்கும். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அசாதுதீன் ஒவைசி, ஜெய்ராம் ரமேஷ், ரமேஷ் சென்னிதலா, மஹுவா மொய்த்ரா, முஸ்லிம் லீக், சிபிஐ அசாம் பிரதேச காங்கிரஸ் கமிட்டி, திராவிட முன்னேற்றக் கழகம், அசாம் கண…

மேலும்...
Supreme court of India

எந்த மதத்தையும் யாரிடமும் திணிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி (06 டிச 2022): இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு ஒவ்வொருவருக்கும் அவரவர் மதத்தில் நம்பிக்கை கொள்ள உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது சத்சங்க நிறுவனரும், இந்து ஆன்மிக குருவுமான ஸ்ரீ ஸ்ரீ தாகூர் அனுகுல் சந்திராவை பரமாத்மாவாக அறிவிக்கக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் ஒரு தனி மனிதரின் புகழுக்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது என மதிப்பிட்ட நீதிமன்றம், மனுதாரருக்கு ஒரு லட்சம்…

மேலும்...