முஸ்லிம் தம்பதிகள் தத்தெடுத்து வளர்த்த இந்து பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம்!

காசர்கோடு (18 பிப் 2020): கேரளாவில் முஸ்லிம் தம்பதிகள் தத்தெடுத்து வளர்த்த பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். கேரளாவின் காசர்கோடு பகுதியில் வசித்து வந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணின் பெற்றோர் சிறு வயதிலேயே மரணம் அடைந்து விட்டனர். அனாதையாக இருந்த ராஜேஸ்வரியை, அப்துல்லா, கதீஜா தம்பதிகள் வளர்த்து வந்தனர். இந்நிலையில் ராஜேஸ்வரிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அப்துல்லா, கதீஜா தம்பதிகள் விஷ்ணு பிரசாத் என்பவருக்கு கேரளாவின் காசர்கோடு பகவதி கோவிலில் வைத்து…

மேலும்...

நிர்பயா வழக்கு – குற்றவாளிகளுக்கு மார்ச் 3 ஆம் தேதி தூக்கு!

புதுடெல்லி (17 பிப் 2020): நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்குத் தூக்கிலிடுமாறு டெல்லி நீதிமன்றம் புதிய வாரண்ட் பிறப்பித்துள்ளது. நிர்பயா வழக்கில், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான புதிய தேதியை அறிவிக்குமாறு நிர்பயாவின் பெற்றோர் மற்றும் தில்லி அரசு தொடர்ந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதி தர்மேந்தர் ரானா, முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளிகள் நால்வரையும் மார்ச் மாதம் 3ம் தேதி காலை 6 மணிக்கு…

மேலும்...

டெல்லி ஷஹீன் பாக் போராட்டம் சரியானதுதான் – உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி (17 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் போராட்டம் தேவையான ஒன்றுதான் என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக்கில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்குக் கொண்டு வர அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அதில் வெற்றியடைய முடியவில்லை. இந்நிலையில் இப்போராட்டம் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், “பொதுமக்கள் ஒரு தீர்வுக்காக போராடுகிறார்கள்….

மேலும்...

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தெலுங்கானா அரசு தீர்மானம் – முதல்வர் முடிவு!

ஐதராபாத் (17 பிப் 2020): மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. மேலும் பாஜக கூட்டணியில் உள்ள மாநிலங்கள் கூட எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற ஆலோசித்து வருகின்றன. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில்…

மேலும்...

பாஜக அரசு அடிமை அரசாகிவிட்டது – சிவசேனா கடும் விமர்சனம்!

மும்பை (17 பிப் 2020): அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகைக்காக, மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகள் அனைத்தும் அடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்று சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் இதுகுறித்து வெளியாகியுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது: அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகையால், குடிசைகளை மறைக்க சுவர் எழுப்புவது உள்ளிட்ட முன்னேற்பாடுகள் அனைத்தும் இந்தியாவின் அடிமைத்தனத்தின் வெளிப்பாடாகவே உள்ளது. ட்ரம்ப் வருகையால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சியில் மாற்றம் ஏற்படப்போவதும் இல்லை, புதிதாகக் கட்டப்படும் சுவருக்குப்…

மேலும்...

சிஏஏ போராட்டத்தில் போலீஸாரால் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்தினர் போலீஸ் மீது வழக்குப்பதிவு!

மீரட் (17 பிப் 2020): உத்திர பிரதேசம் மீரட்டில் சிஏஏ போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் குடும்பத்தினர் போலீஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில், கடந்த டிசம்பர் 20ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. 13 மாவட்டங்களைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மதியம் மசூதிகளில் தொழுகையை முடித்தபின், தடையை மீறி போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலிஸார் கற்களை வீசியும், தடியடி நடத்தியும்…

மேலும்...

ஸ்மார்ட் கார்டு மூலம் கோடி கணக்கில் மோசடி – சந்தி சிரிக்கும் குஜராத் மாடல்!

அஹமதாபாத் (16 பிப் 2020): போலி கைரேகை மூலம் குஜராத்தில் ரேசன் பொருட்களை கொள்ளையடித்து மோசடியில் ஈடுபட்டது சைபர் க்ரைம் போலிஸாரால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2014ல் பிரதமராக மோடி பதவியேற்கும் முன்பு குஜராத் மாடல் என்றும், மோடியை முன்னிலைப் படுத்தியும் பாஜக பிரச்சாரம் மேற்கொண்டது. மேலும் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே ரேசன் என்பதன்  ஒரு பகுதியாக, குடும்ப அட்டைக்குப் பதிலாக ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை அறிமுகம் செய்து அதன் மூலம் மக்களுக்கு ரேசன் பொருட்கள்…

மேலும்...

மருத்துவம் கல்வி இலவசம் – டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அதிரடி!

புதுடெல்லி (16 பிப் 2020): டெல்லியில் சாதி, மத பேதமின்றி கல்வி, மருத்துவம் ஆகியவை இலவசமாக வழங்க முயற்சி மேற்கொள்வேன் என்று டெல்லி முதல்வராக பதவியேற்ற கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், மூன்றாவது முறையாக டெல்லியின் முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார். கெஜ்ரிவாலுடன் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 6 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களுக்கு துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் பதவிப்பிரமாணம்…

மேலும்...

அமித் ஷாவை ஷஹீன் பாக் போராட்டக்காரர்கள் சந்திக்க போலீஸ் மறுப்பு!

புதுடெல்லி (16 பிப் 2020): டெல்லி ஷாஹீன் பாக் போராட்டக் காரர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க டெல்லி போலீஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வரும் போராட்டக் காரர்கள், மத்திய அமைச்சர் அமித் ஷா வீட்டிற்கு பேரணியாக சென்று சந்திக்கவுள்ளதாக நேற்று அறிவித்திருந்தனர். இந்நிலையில் டெல்லி போலீஸ் அதற்கு அனுமதி மறுத்துள்ளது. தொலைக்காட்சி நேர்காணலில் டெல்லி தோல்வி குறித்து பேசியிருந்த அமித் ஷா, ஷாஹீன் பாக் எதிர்ப்பாளர்கள்…

மேலும்...

அமித் ஷா வீட்டை நோக்கி பேரணி – ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் முடிவு!

புதுடெல்லி (16 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டை நோக்கி பேரணி செல்ல முடிவு செய்துள்ளனர். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களை தாண்டி பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிப்ரவரி 16 ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டை நோக்கி…

மேலும்...